Facebook
Peace 2020    |   Save Nature 4 Future   |   Gandhi Memoribila on October 2nd 2015   |      We 2 Ours 2      |    Chennai walkathon 2016
Mahatma's collections:  
அஞ்சல் தலைகள்
நாணயங்கள்
ரூபாய் தாள்கள்
டோக்கன்கள்(அடையாள பொருட்கள்)
அஞ்சல் அட்டைகள்
சிறப்பு உறை & முத்திரை
தொலைபேசி அட்டை
பிறந்த தேதி ரூபாய் தாள்கள்
செய்தித்தாள்கள்
கையெழுத்து
புத்தகங்கள் மற்றும் குறுந்தகடுகள்
புகைப்படங்கள்
சிலைகள்
வீடியோ மற்றும் குரல்
சிறுகதைகள்
ஓவியங்கள் மற்றும் கார்டூன்கள்
விளக்கக் காட்சிகள்
காந்திஜியின் கோயில்
அருங்கட்சியங்கள் மற்றும் ஆசிரமங்கள்
வாழ்கை வரலாறு
காலவரிசை
பாராட்டுகள்
பொன்மொழிகள்
சிறிதளவு அறியப்பட்ட உண்மைகள்
கடைசி 24 மணிநேரம்
மற்றவை
பயன்மிக்க இணைப்புகள்

 

 
 
   
 
   
 

கருவறுப்போம் சீமை கருவேல மரத்தை !! அமைத்திடுவோம் வளமான தமிழகத்தை !!!


   
 

காந்தி உலக மையம் மற்றும் புதிய தலைமுறை  இணைந்து இதுவரை எண்ணற்ற சமூக அக்கறை சார்ந்த முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளது. இதுவரை மேற்கொண்ட  பல்வேறு விதமான சமூக நிகழ்வுகளை தொடர்ந்து மேலும் ஒரு புதிய முயற்சியில் காந்தி உலக மையம் அடியெடுத்து வைக்க உள்ளது.

1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியடிகள் அவர்களால் தண்டியாத்திரை என்ற பெயரில் அந்நிய அரசை அகற்ற மாபெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் நினைவாக 2012 முதல் ஒவ்வொரு வருடமும் காந்தி உலக மையம் ஒவ்வொரு சமூக அக்கறை கொண்ட தலைப்பில் காந்தி உலக மையத்தின் சார்பில் புதிய தண்டியாத்திரை விழிபுணர்வு பேரணி நடத்த படுகின்றது.

இதன் தொடர்ச்சியாக இந்த வருடம் 2017 மார்ச் 12ம் தேதி கருவறுப்போம் சீமை கருவேல மரத்தை, அமைத்திடுவோம் வளமான தமிழகத்தை எனும் தலைப்பில் புதிய தண்டி யாத்திரை எனும் தொடர் பயணத்தை மேற்கொள்ளவுள்ளோம். இதன் மூலம் ஆங்காங்கே சீமை கருவேல நச்சு மரங்களை அடியோடு அழிப்பதற்கான தொடர் விழிப்புணர்வு நிகழ்வுகள், சீமை கருவேல மரங்களை அகற்றுதல் மற்றும் குறும்படங்கள் திரையிடுதல் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த உள்ளோம்.

சீமை கருவேல மரங்களை தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் முழுமையாக அகற்றி வளமான தமிழகம் அமைய வழிவகுக்கும் வரை இந்த பயணம் முடிவில்லாமல் தொடரும். இந்நிகழ்வினை பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள சமூக சேவை மையங்கள், இளைஞர் குழுக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் உதவியுடன் செயல்படுத்தவுள்ளோம்.

எங்களுடன் இணைந்து சிறப்பாக செயல்படும் அனைத்து அமைப்புகளுக்கும் காந்தி உலக மையமும், புதிய தலைமுறையும் இணைந்து பல்வேறு விதமான விருதுகளை வழங்கி கௌரவிக்க உள்ளது.

இந்நிகழ்வில் தங்களையும் ஈடுபடுத்திக் கொள்ளும் அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் சமூக சேவை அமைப்புகளும், இளைஞர் குழுக்களும் தாங்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்த விவரங்களை ஆதரங்களுடன் [info@gandhiworld.inஎன்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

தங்களின் செயல்முறைகள் மற்றும் பணிகள் அனைத்தும் [https://www.facebook.com/Gandhi-World-Foundation-270781792986267/ என்ற முகப்புத்தக பக்கங்களிலும், [ www.gandhiworld.in ] என்ற இணையதளத்திலும் பதிவிடப்படும். மேலும் நீங்கள் கருவேல மரத்தினை அகற்றுவதற்காக மிகபெரிய பேரணி அல்லது மரங்களை அகற்றும் பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதனை முன்னரே எங்களுக்கு தெரிவித்தால் புதிய தலைமுறை தொலைகாட்சி அதனை தங்களின் தொலைக்காட்சியில் வெளியிடும்.

கருவேல மரங்களை அகற்றும் அமைப்புகள் அகற்றுவதற்கு முன்னர் மற்றும் அகற்றிய பின்னர் என இரண்டு வகையான புகைப்படங்களை எங்களுடன் பகிர்வது சிறந்தது. கருவேல மரங்கள் அகற்ற பட்ட இடத்தில் பயன் தர கூடிய வேறு சில நாட்டு மரங்களை நட்டு வைப்பது மேலும் பாராட்டுதலுக்குரியது.

இந்நிகழ்வில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் அனைத்து தன்னார்வ தொண்டர்களுக்கும், சான்றிதழ்களும் மற்றும் சிறப்பாக செயல் படும் குழுக்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்படும். மேலும் சிறந்த சமூக அக்கறை கொண்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்காக விருதுகளும் வழங்கப்படும்.

இவ்விருதுகள் அனைத்தும் வருடத்திற்கு இரண்டு முறை காந்தி உலக மையம் மற்றும் புதிய தலைமுறை தொலைகட்சியால் சிறந்த பிரபலங்களின் முன்னிலையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும்.

சீமை கருவேல மரங்களை அகற்றி, வளமான தமிழகத்தை அமைக்க மேற்கொள்ளபட்டிருக்கும் இப்பணியில் அனைவரும் ஒன்றினைவோம், வரும் தலைமுறைக்கு அமைத்திடுவோம் நல்லதொரு தமிழகத்தை, கரம் கோர்ப்போம்! நல்லறம் புரிவோம்.!!

 

இப்படிக்கு,

காந்தி உலக மையம்.

   
 

WHATSAPP NO : 98410 21069,   72990 21069

   
 


GANDHI WORLD FOUNDATION
1/64, BAZAAR STREET
NEW GUMMUDIPOONDI – 601 201
MAIL ID: letter@gandhiworld.in

 
  Copyright @ 2012. Gandhi World Foundation. All Rights Reserved
hit counters
Designed & Maintained by
Clutch Integrated Technologies, India