• pic2
  • pic3
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
National Gandhi Museum

National Gandhi Museum

தேசிய காந்தி அருங்காட்சியகம்

      காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, அவரின் வாழ்க்கையை மொத்தமாக பிரதிபலிக்கும் வகையில் ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டியது கட்டாயத் தேவையாகக் கருதப்பட்டது. அதைத் தொடர்ந்தே தேசிய காந்தி அருங்காட்சியம் உருவாக்கப்பட்டது. இங்கு, காந்திஜி பயன்படுத்திய பொருட்கள், புத்தகங்கள், புகைப்படங்கள், இதழ்கள் போன்றவை வைக்கப்பட்டுள்ளன. 1951ம் ஆண்டு அரசு கட்டிடங்களில் துவக்கப்பட்ட இந்த அமைப்பு, 1957ம் ஆண்டு மத்தியில் மான்சிங் சாலை பழைய மேன்சன் எண் 5க்கு மாற்றப்பட்டது. அதற்குப் பிறகு இப்போதுள்ள, ராஜ்காட்டிற்கு எதிரில் மாற்றப்பட்டது. இந்த இரண்டு மாடி கட்டிடத்தை, நாட்டின் முதல் ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திர பிரசாத், 1961, ஜனவரி 30ஆம் தேதி துவக்கிவைத்தார். இந்த அருங்காட்சியகத்திற்கு, தேசிய காந்தி அருங்காட்சியகம் என்று பெயரிடப்பட்டது. நாட்டின் மிகப் பெரிய காந்தி அருங்காட்சியகம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
     காந்திஜியுடன் நெருக்கமான தொடர்புடைய புத்தகங்கள், பயன்படுத்திய பொருட்கள், அடையாளச் சின்னங்கள் போன்றவை இங்கே காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. காந்திய இலக்கியம், புத்தகம்  போன்ற பல இடம்பெற்றுள்ளன.
இங்குள்ள இடங்கள்:
·                           கலைக்கூடம்.
·                           நூலகம்
·                           புகைப்படப் பிரிவு
·                           ஒலி, ஒளிப் பிரிவு
·                           காந்தி இலக்கியம்
·                           சிறப்பு கண்காட்சி

      எவ்வாறு செல்வது? நாட்டின் தலைநகரில் இருப்பதால், எல்லா பகுதிகளில் இருந்தும் எளிதாகச் சென்றடையலாம்.
பார்வையிட சிறந்த காலம்: அக்டோபர் - மார்ச்
முகவரி: தேசிய காந்தி அருங்காட்சியகம்
         ராஜ்காட், புதுடில்லி. 110 002, இந்தியா.
தொலைபேசி: + 91 11 2331 1793, 0168 / 2332 8310
இ-மெயில்: gandhimk@bol.net.in / mkgandhingm@rediffmail.com
மேலும் தகவல்களுக்கு:
www.gandhimuseum.org