• pic2
  • pic3
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4

மகாத்மா காந்திஜியின் பொன்மொழிகள்

கல்வி

         நன்னடத்தையை ஏற்படுத்தாத வெறும் ஏட்டுப்படிப்பு உதவாது.
         பெரிய அளவில் நாம் எதையும் சாதித்திருந்தால் அந்த சாதனைக்குப் பின்னால் திடமான, இரும்பு போன்ற ஒழுக்கம் கட்டாயம் இருந்திருக்கும். வெறும் கல்வியால் மட்டும் ஒழுக்கம் வந்துவிடாது. துன்பம் என்ற பள்ளியில் படிக்கும் பாடம்தான் ஒழுக்கம்.

நுண்பொருள் ஆய்வு மற்றும் மதம்

         உண்மையைத்தான் நான் கடவுளாக வழிபடுகிறேன். நான் இன்னும் கடவுளைச் சந்திக்கவில்லை. அவரைச் சந்திக்க எனக்கு இஷ்டமான எதையும் தியாகம் செய்யத் தயாராக உள்ளேன். அது என் உயிராக இருந்தாலும் அதையும் வழங்கத் தயாராக உள்ளேன்.
         பலம் வாய்ந்தவர்களிடம்தான் அதிகாரம் செல்கிறது. அந்த பலம், உடல் பலமாக இருக்கலாம் அல்லது மனப்பலமாக இருக்கலாம். ஆன்மாவின் பலம், ஆன்மாவின் சக்தியை வெளிப்படுத்துகிறது. உடல்பலம் மாறக்கூடியது. ஆன்ம பலம்தான் நிரந்தரமானது. அந்த ஆன்மபலம்தான் எப்போதும் நீடித்திருப்பது.
         வன்முறையின் அடையாளம் ஆயுதங்களான ஈட்டி, கத்தி, வாள், துப்பாக்கி. அகிம்சையின் அடையாளம் கடவுள்.
         பிறப்பும் இறப்பும் இருவேறு நிலைகள்தான் என்றாலும், ஒரே நிலையின் இருவேறு அம்சங்கள் அவை. ஒன்றை விரும்புவதும் மற்றொன்றை மறுப்பதற்கும் காரணம் பெரியதாக ஒன்றும் இருப்பதில்லை.
         கடவுள் ஒருவர்தான் நம் மனதை அறியும் திறன் படைத்தவர். மனிதர்கள் அவர்களின் செயல்களால் தீர்மானிக்கப்படுவதில்லை; அவர்களின் எண்ணத்தால் நியாயப்படுத்தப்படுகின்றனர்.
         உண்மை மற்றும் வன்முறையற்ற செயல்களால்தான் கடவுளைக் கொஞ்சமாவது பார்க்க முடியும். அவை இரண்டும்தான் என் கடவுள். அவை, ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவை.
         நம்பிக்கை காரணத்துடன் இருக்க வேண்டும். குருட்டாம்போக்கு நம்பிக்கை எளிதில் மறைந்துவிடும்.
         நான் கிறிஸ்துவை விரும்புகிறேன். கிறிஸ்துவர்களை அல்ல. கிறிஸ்துவர்கள் கிறிஸ்து போல இல்லை.
         நாம் செய்யும் வேலையின் அளவைக் காட்டிலும் தரம்தான் கடவுளை தயவுசெய்கிறது.
         இந்த உலகத்தில் நிறைய பேர் பசியுடன் உள்ளனர். அவர்கள் முன் கடவுள் ரொட்டித் துண்டாக மாற மாட்டார்.
         தவறு செய்யும் மனிதனைப் பார்க்கும் போது நான் தவறிழைத்ததாக உணர்கிறேன். வெறிகொண்ட ஒருவனைப் பார்க்கும்போது, நானும் அப்படியிருந்தேன் என்று எனக்குள் வார்த்தை ஒலிக்கிறது. நம்மைச் சுற்றியுள்ளவர்கள் மகிழ்ச்சியாக இல்லாமல் நான் மட்டும் மகிழ்ச்சியாக உணர முடியாது.
         மதம் என்பது மனதைப் பொறுத்தது. உடல்சார்ந்த எந்த அம்சங்களும் ஒருவனின் மதத்தை தீர்மானிக்காது.
         சூரிய அஸ்தமன அழகு, நிலவின் அழகு போன்றவற்றைப் பார்த்து சிலேகிக்கும்போது, அவற்றை உருவாக்கியவரை நோக்கி என் மனம் மலர்கிறது.
         இந்த உலகமே மறுத்தாலும் கடவுள் இருக்கத்தான் செய்கிறார். அதுபோலத்தான் உண்மையும். அதற்கு ஆதரவு இல்லையென்றாலும் அது நீடித்திருக்கவே செய்யும்.
         ஒருவரின் சொந்த மதம் என்பது, அவருக்கும் அஜரைப் படைத்தவருக்கும் இடையே உள்ள விஷயமே அன்றி பிறருக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
         அவரை நாம் பல பெயர்களில் அழைக்கலாம். எனினும் அவர் ஒருவரே. எல்லோருக்கும் அவர் ஒருவர்தான்.
         நல்ல கல்வி வேண்டுமா? முதலில் சொந்த வாழ்க்கையில் சுத்தம் வேண்டும்.
         அனைத்து மிருகங்களிலும் மனிதனுக்குத்தான் தன்னைப் படைத்தது கடவுள் என்று தெரியும். பிற விலங்குகளுக்குத் தெரியாது. அதனால், தினந்தோறும் புதுப்புது பொருட்களையும் செல்வத்தையும் சேர்ப்பதுதான் மனிதனின் கடமை என்றிருக்கக்கூடாது. படைத்தவனைப் பாராட்டுவதும் அவனைப் பார்க்க விரும்புவதும்தான் கடமையாக கொள்ள வேண்டும்.

நம்பிக்கை

         கவலையைப் போல உடம்பை அரிப்பது வேறு ஒன்றும் இல்லை. நீ கடவுளை நம்புவதாக இருந்தால் வீணாக ஏன் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாய். கவலைகளை அவரிடம் விட்டுவிடு.
         வன்முறைக்கு இரண்டு நம்பிக்கை வேண்டும். ஒன்று கடவுள் மீதும் மற்றொன்று மனிதன் மீதும்.