• pic2
  • pic3
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4

மகாத்மா காந்திஜியின் பொன்மொழிகள்

செல்வம்

         இந்த உலகில் மனிதனின் தேவைக்கு போதுமான அளவு வளம் உள்ளது. அவனின் பேராசை அளவுக்கு வளங்கள் இங்கில்லை.
         முதலீடு அல்லது பணத்தை தீமையானது என்று சொல்லக்கூடாது. எந்த விதத்திலாவது அது கட்டாயம் தேவைப்படுவதாகவே இருக்கும்.
         மேற்கத்திய நாடுகளைப் போல இந்தியாவை தொழில்வள நாடாக மாற்ற கடவுள் விரும்பவில்லை. மேற்கத்திய நாடுகளைப் போன்றதொரு பொருளாதார சுரண்டலில் இந்தியா ஈடுபடுமேயானால், இலையை வெட்டுக்கிளி சுரண்டி அழிப்பதைப் போல இந்த உ<லகத்தை இந்தியா அழித்துவிடும்.
         உண்மையான செல்வம், நல்ல உடல்நலம்தான். அது, தங்கம், வெள்ளியல்ல.
         சுயமரியாதை கொண்ட மனிதனின் காலில் தங்கத்தால் போடப்பட்ட கால் விலங்கையும் அவன் இரும்பு விலங்காகத்தான் நினைப்பான். தங்கத்தில் இருந்தாலும் இரும்பில் இருந்தாலும் விலங்கு விலங்குதானே!

அரசியல்

         ஏமாற்றம் அடையும்போது, இந்த உலகில் எப்போதும் அன்புதான் எப்போதும் வெற்றி பெற்றுள்ளது என்பதை நான் நினைத்துக் கொள்வேன். கொடுங்கோல் ஆட்சியாளர்கள், கொலைகாரர்கள் என பலரும் அசைக்க முடியாத அதிகாரத்துடன் இருக்கத்தான் செய்தனர். ஆனால் முடிவில் - அவர்கள் தோல்வி அடைந்தார்கள். இதை நினைத்துக் கொள் - எப்போதும்!
         என்னைப் பொறுத்தமட்டில் ஜனநாயகம் என்றால், பலமானவர்களுக்குக் கிடைக்கும் அனைத்தும் மிகவும் நலிவடைந்தவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான். இந்த உலகில் எந்த நாடும் நலிவடைந்தவர்களுக்கு சாதகமாக இல்லை. மேற்கத்திய நாடுகளின் இப்போதைய ஆட்சிமுறை, பாசிசத்தின் வேறுமுகமாகவே உள்ளது. உண்மையான ஜனநாயகம் என்பது, மத்தியில் 20 பேர் உட்கார்ந்து முடிவுசெய்வதல்ல. அது, நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு கிராமங்களின் மக்களிடம் இருந்து தொடங்கப்பட வேண்டும்.
         பிரபஞ்சம் முழுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய எங்கும் செல்லுபடியாகக்கூடிய உண்மையின் நெறி என்னவென்று என்னைக் கேட்டால், மிகவும் எளிய படைப்பைக்கூட தன்னைப் போல கருதுவதுதான். மனிதனின் வாழ்வின் எந்தவொரு விருப்பத்தையும் அவனால் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படக்கூடாது என்ற இந்த எனது அன்பு ஈடுபாடுதான் என்னை அரசியலைத் தேர்ந்தெடுக்க வைத்தது. அதுபோல, அரசியலில் மதத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்பவர்களை என்னால் துளியும் ஏற்றுக் கொள்ள முடியாது. எந்த வித தயக்கமும் இன்று நான் சொல்வேன் - அரசியலுக்கும் மதத்திற்கும் தொடர்பு உண்டு. அதை இல்லை என்பவர்கள், அரசியலைப் பற்றி அறியாதவர்கள்.
         தன் உடலோடு இருப்பதையே மனிதன் விரும்புகிறான். அதுபோல, பிற நாட்டின் கீழ் இருக்க ஒரு நாடு விரும்புவதில்லை. எனினும், பெருந்தன்மையும் சிறப்பும்தான் பெருமைபடக்கூடிய விஷயங்கள்.
         ஒருநாட்டை அழிக்க வேண்டும் அதற்கு சிரமம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த நாட்டிற்கு எதிராக பேசுவதோ ஓட்டு போடுவதோ இல்லை என்ற தீர்மானமான முடிவுக்கு அல்லது அதுபோன்றதொரு வைராக்கியத்தை ஒரு நாடு பின்பற்றினால், அந்த நாட்டுக்கு முன்னேற்றம் கிடைப்பதுடன் நேரமும் பண விரயமும் மிச்சமாகும்.
         நானும் அரசியலில் சிக்கிக் கொண்டுள்ளதுபோலத்தான் உணர்கிறேன். இப்போதைய சூழ்நிலையில் யாரும் அந்த சுழலில் இருந்து தப்பிக்க முடியாது. எப்படி பாம்பு நம்மைச் சுற்றிக் கொள்ளுமோ அதுபோலவே அரசியலை நாம் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் நம்மைச் சுற்றிக் கொண்டுள்ளது. அதனால்தான் அந்த பாம்புடன் நான் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறேன்.
         அரசியலுக்கும் மதத்திற்கும் சம்பந்தமில்லை என்று தெரிவிப்பவர்களுக்கு மதம் பற்றி ஒன்றும் தெரியாது.
         மேற்கத்திய நாகரீகம் பற்றி நான் என்ன நினைக்கிறேன்? அது ஒரு நல்ல சிந்தனையாக இருக்கக்கூடும்.
         போர்க் குற்றவாளிகள் யார்? போர் என்பதே கடவுளுக்கும் மனித குலத்திற்கும் எதிரானது. போருக்கு உத்தரவிட்டவர்கள், போருக்குக் காரணமானவர்கள், போரில் முக்கிய பங்கு வகித்தவர்கள் என அனைவருமே குற்றவாளிகளாக இருக்கும்போது, போர்க்குற்றவாளிகள் என்று தனியொருவர் இருக்கவா செய்வார்கள்? அச்சு நாடுகளுக்கு மட்டும்தான் போர்க் குற்றவாளிகள் என்பது பொருந்தும் என்று கூற முடியாது. ரூஸ்வெல்ட் மற்றும் சர்ச்சில் போன்றவர்களும் ஹிட்லர் மற்றும் முசோலினி போன்றவர்கள்தான். இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யா என இந்த நாடுகள் அனைத்துமே ரத்தத்தில் குளித்துள்ள நாடுகள்தானே! இவற்றின் பட்டியலில் இணைந்தவைதானே ஜெர்மனியும் ஜப்பானும்!
         வலியிலும் கஷ்டத்திலும் பிறந்தவைகள்தான் நாடுகள்.
         என் வீட்டின் எல்லாச் சுவர்களும் மூடியிருக்க வேண்டும். ஜன்னல்கள் முழுமையாக அடைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று விரும்புபவன் அல்ல. ன் வீடு, வாசல், மனை என அனைத்தையும் பிறருக்குத் தானமாகக் கொடுக்க வேண்டும் என்ற கலாச்சாரம் எனக்கு புரியவில்லை. நான் என் சொந்தக்காலில் நிற்க வேண்டும். என் வீட்டில் வசிக்க வேண்டும். பிறர் வீட்டில் பிச்சைக்காரன் போலவோ அல்லது தொழுநோயாளி போலவே கிடக்க விரும்பவில்லை.
         வளரும் சமுதாயத்தில் அளவீடுகள் அனைத்தும் மனிதர்களுக்கு மேலானதாகவே இருக்க வேண்டும். ஏனெனில், மனிதர்கள் தங்களின் நிறைவுக்காக மட்டுமே பணியாற்றும் நேர்மையற்ற கருவிகள்.
         ஒத்துழையாமை இயக்கத்திற்கான பிரச்சாரம், ராஜ்யரீதி விளக்கக்குறிப்புகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ கொண்டிருக்காமல் இருக்கலாம். இது ஏற்றுக்கொள்ளும் ஒரே ராஜ்யரீதியான அம்சம், அறிக்கை மற்றும் முன்னெடுத்துச் செல்வதற்கான உண்மை எந்த காரணத்தைக் கொண்டும் வழுவாமல் இருக்கும் என்பது மட்டும் உண்மை.
         மனித மனமோ அல்லது மனித இனமோ, சமூகம், அரசியல் மற்றும் மதம் என்ற கட்டுப்பெட்டியான கட்டமைப்பிற்குள் பிரிக்க முடியாது என்பதை நான் உரைக்கிறேன். அவை எல்லாமே ஒவ்வொன்றும் தனித்தனியாகவும் இணைந்து செயல்படுகின்றன.
         என்னைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு ஆட்சியாளரும், பொதுக்கருத்தை மீறும் வேற்றுக்கிரகவாசிகள்தான்.
         சதையை உனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தால், ஆத்மாவின் பலம் கொஞ்சம் கொஞ்சமாக வளரும் என்பது என் நம்பிக்கை.
         ஜனநாயக அறநெறி, எந்திரத்தனமானதல்ல. நினைத்த மாத்திரத்தில் படிவங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் அதை அடைய முடியாது. இருதயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
         தன் சக மனிதனின் முன்னேற்றத்திற்காக பாடுபடுபவனே சிறந்தவனாகக் கருதப்படுகிறான்.