• pic2
  • pic3
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4

மகாத்மா காந்திஜியின் பொன்மொழிகள்

விலங்குகளின் உரிமைகள்:

          என்னைப் பொறுத்தமட்டில், ஒரு ஆட்டுக்குட்டியின் உயிர் மனித உயிரை விட கீழானது அல்ல. பிறரின் உதவியில்லாத அந்த விலங்குக்கு மனிதர்களால் செய்யப்படும் கொடுமை மனிதர்களால்தான் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

வீரம்:

          வன்முறையில் விருப்பமில்லாமை மற்றும் கோழைத்தனம் மாறுபாடான பொருள் கொண்டவை. அவை இரண்டும் ஒன்றல்ல. வன்முறையில் விருப்பம் இல்லாமை மிகப் பெரிய நல்லொழுக்கம். கோழைத்தனம் மிகப் பெரிய தீயோழுக்கம். வன்முறை இல்லாத தன்மை அன்பிலிருந்து துளிர்ப்பது, கோழைத்தனம் வெறுப்பிலிருந்து தோன்றுவது. வன்முறையற்ற பண்பு எப்போதும் கஷ்டம் ஏற்படுத்தும். ஆனால், கோழைத்தனம் கஷ்டத்தைக் கொடுக்கும். தீர்க்கமான வன்முறையற்ற பண்புதான் வீரம். வன்முறையற்ற நடத்தை எப்போதும் தரம்தாழாது. ஆனால், கோழைத்தனம் எப்போதும் தரத்தைத் தாழ்த்தும்.
          ஆண்மை என்பது முரட்டுத்தனத்திலோ, வீரதீரத்திலோ அல்லது ஆட்சி அதிகாரத்திலோ கிடைப்பதல்ல. சமூகம் மற்றும் அரசியலில் நேர்மையானவற்றைச் செய்து அதனால் ஏற்படும் விளைவுகளைத் தீரத்துடன் எதிர்கொள்வதுதான் ஆண்மை. அதில் உறுதி இருக்கும்; வெறும் வார்த்தைகள் இருக்காது.
          கோழையாக இருப்பதை விட போரில் கொல்வதும் கொல்லப்படுவதும் சிறந்தது.
          பிரச்னையிலிருந்து தப்பிக்க வேண்டுமானால், தவறானவற்றிற்கு ஆம் என்று சொல்வதை விட இல்லை என்று சொல்வதேசிறந்தது.
          பயத்தால் சில நேரங்களில் பயனுண்டு. கோழைத்தனத்தால் எந்த பயனும் கிடையாது.
          கோழையால் அன்பை வெளிப்படுத்த முடியாது; அது வீரர்களின் தனிப்பண்பு.
          ஆயுதம் பயன்படுத்தாமல் இறக்கத் துணியும் மனிதன்தான் பலமான மனிதன் என்று நான் கருதுகிறேன்.
          இருதயத்தில் வன்முறை விருப்பம் இருந்தால், வன்முறையாளர்களாக இருந்துவிட்டுப் போங்கள். அதற்காக, உங்களின் கோழைத்தனத்தை மறைக்கும் கருவியாக வன்முறையற்ற பாதையைத் தெரிவிக்காதீர்கள்.
          பிறரின் கைகளால் கொல்லப்படுவதற்கு தயாராக இருப்பவன்கூட சுதந்திரமான மனிதன்தான். ஆனால், தன்னைத்தானே கொல்பவன் சுதந்திரமான மனிதன் அல்லன்.
          என்னை நீங்கள் சங்கிலியால் பிணைக்கலாம், சித்திரவதை செய்யலாம், என் உடலைக்கூட அழித்து விடலாம். ஆனால், என் மனதை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.
          என் அனுமதியில்லாமல் யாரும் என்னைக் காயப்படுத்த முடியாது.
          நோஞ்சானால் யாரையும் மன்னிக்க முடியாது. பலமானவனின் குணாதிசயமே மன்னிப்புதான்.
          கோழைத்தனமாக உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மண்ணில் புரண்டு, தொந்தியில் மணல் பட தாழ்ந்து வாழ வேண்டாம். அதற்குப் பதிலாக எலும்புகளை நொறுங்க விடுங்கள். தலையில் காயம் பட்டுக் கொள்ளுங்கள். தவறில்லை.
          கொள்கைகளை விட்டுக் கொடுத்தான், இயலாமையை ஊக்குவித்தான், பிறரை நிந்தித்தான் என்று என்னை யாரும் எப்போதும் பழிசொல்ல வேண்டாம். ஆனால், என்னால் திரும்பத் திரும்ப சொல்ல முடியும். ஒரு அற்பன் எந்தச் சூழ்நிலையிலும் மேன்மையானவனாக மாட்டான் என்று.
          அகிம்சையின் எதிரி கோபம். அந்த கோபத்தை துõக்கிச் சாப்பிடுபவன் மரியாதைக்குரிய அரக்கன்.
          ஒரு தியாகி போல சாக நமக்கு வீரம் வேண்டும். அதற்காக தியாகியாக வேண்டும் என்ற வெறி யாருக்கும் இருக்கக்கூடாது.
          உண்மையாக சிரமம் அனுபவித்தல் வீரத்தின் பண்பு. இருதயத்தில் அதை ஏற்றாதபோது, அது உருகிவிடும். அதுதான் கொடுமைகளை, சிரமத்தை சகித்துக் கொள்ளும் திறன். அங்குதான் சத்தியாகிரகத்தின் திறவுகோல் உள்ளது.
          தியாகத்தின் சட்டம் உலகம் முழுவதும் பொதுவானது. அதன் தேவையை மேலும் தீவிரப்படுத்த, வீராதி வீரர்கள் மற்றும் அப்பழுக்கற்றவர்களின் தியாகம் அவசியம்.