காந்திஜியின் வாழ்க்கை - கால வரிசைப் பட்டியல்

மூலம்: The Gandhi Reader, edited by Homer A.Jack, Samata Books, Madras. 1984

1869 அக்டோபர் 2 குஜராத் (கத்தியவாத்) போர்பந்தரில் பிறந்தார். பெற்றோர் - கரம்சந்த் காந்தி (காபா) மற்றும் புத்லிபாய்
1876   ராஜ்கோட்டுக்கு குடும்பம் இடம்மாறியது. அங்கேயே ஆரம்ப பள்ளியில் படித்தார் 
1876   வர்த்தகரான கோகுல்தாஸ் மக்கன்ஜியின் மகளான கஸ்துõரிபாயை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டார்
1881   ராஜ்கோட்டில் உயர்நிலைப் பள்ளிப்படிப்பு
1883   கஸ்துõரிபாயுடன் திருமணம்
1885   தந்தை கரம்சந்த் காந்தி, தன் 63வது வயதில் இறந்தார்
1887   அகமதாபாத்தில் மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார். கத்தியவாத்தில் உள்ள பவநகர் சமல்தாஸ் கல்லுõரியில் சேர்ந்தார். பாடங்கள் கடினமாக இருப்பதாக உணர்ந்ததை அடுத்து, அந்தக் கல்லுõரியில் ஒரு பருவ தேர்வு மட்டுமே எழுதினார்
1888   நான்கு மகன்களில் முதல் மகன் பிறந்தார்.
1891   செப்டம்பர் சட்டம் படிக்க, பாம்பேயிலிருந்து இங்கிலாந்திற்கு கப்பல் பயணம் மேற்கொண்டார்
1893   ஏப்ரல்     இந்திய நிறுவனம் ஒன்றிற்கு வழக்கறிஞராக ஆவதற்காக சட்டம் படிக்க தென் ஆப்ரிக்காவுக்கு கப்பல் மூலம் சென்றார்
1893   அங்கு, தான் நிறவேற்றுமைக்கு ஆளாவதாக உணர்ந்தார்
1894      சட்டம் படித்து முடித்ததும் இந்தியா திரும்ப முடிவு செய்தார். ஆனால், அந்த நாட்டில் குடியேறியிருந்த இந்திய மக்கள், அவரை இந்தியா செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால், தென் ஆப்ரிக்காவிலேயே வழக்கறிஞர் பணி செய்து வாழ்க்கையை ஒட்ட முடிவு செய்தார்
1894   இந்தியர்கள் சார்பாக, தென் ஆப்ரிக்க சட்டசபையில் அளிப்பதற்காக மனு தயாரித்தார்.
1894 மே நேட்டால் இந்திய காங்கிரசை அமைத்தார்
1896   இந்தியாவிலிருந்த தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் நேட்டால் அழைத்துச் செல்வதற்காக, 6 மாத காலத்திற்கு இந்தியா வந்திருந்தார்.
1896   டிசம்பர்    குடும்பத்தினருடன் தென் ஆப்ரிக்காவுக்கு கப்பலில் பயணம் மேற்கொண்டார். டர்பனில் இறங்கியதும் அவரை முற்றுகையிட்ட பிரிட்டீஷ் அதிகாரிகள், இந்தியாவில் தங்களைப் பற்றி காந்தி தவறாக எழுதியதாக கண்டித்தனர்.
1899      போயர் போரின்போது காயமடைந்த பிரிட்டீஷாருக்கு உதவும் வகையில், இந்திய ஆம்புலன்ஸ் பிரிவை துவக்கினார்
1901   இந்தியா செல்வதற்காக, குடும்பத்தினருடன் கப்பலில் ஏறினார். தென் ஆப்ரிக்காவில் இருக்கும் இந்தியர்களுக்கு தன் சேவை தேவைப்பட்டால் மீண்டும் திரும்புவேன் எனக் கூறிச் சென்றார்    
1901 - 02   இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றார். பாம்பேயில் சட்ட அலுவலகத்தைத் துவக்கினார்
1902   தென் ஆப்ரிக்காவிலுள்ள இந்தியர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவசரமாக அந்நாடு திரும்பினார்
1903   கோடை காலம். ஜோகன்னஸ்பர்க் நகரில் சட்ட அலுவலகத்தை திறந்தார்
1904   இந்தியன் ஒபினியன் என்ற பெயரில், வாராந்திர இதழைத் துவக்கினார்
1904   ரஸ்கின் எழுதிய, அண்ட் திஸ் லாஸ்ட் புத்தகத்தைப் படித்த பிறகு, டர்பன் அருகே ஃபீனிக்ஸ் குடியேற்றத்தை துவக்கினார்
1906   மார்ச்     ஜூலு கலவரத்தின்போது, இந்தியன் ஆம்புலன்ஸ் பிரிவைத் துவக்கினார்
1906   வாழ்க்கையில் நுகர்வடக்கத்தை பின்பற்ற உறுதி எடுத்தார்
1906   செப்டம்பர் டிரான்ஸ்வாலில் உள்ள, குடியேறிய இந்தியர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தை எதிர்த்து ஜோகன்னஸ்பர்க்கில் தன் முதல் சத்தியாகிரகப் போராட்டத்தை துவக்கினார்.
1906   அக்டோபர் தென் ஆப்ரிக்காவிலுள்ள இந்தியர்களின் நிலை குறித்து இங்கிலாந்திலிலுள்ள காலணி நாடுகளின் செயலாளரை சந்தித்து மனு கொடுத்தார். பின்னர், டிசம்பரில் தென் ஆப்ரிக்காவிற்குத் திரும்பினார்
1907      ஜூன்     இந்தியர்கள் கட்டாயப்பதிவு சட்டத்தை (கறுப்புச்சட்டம்) எதிர்த்து, சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினார்
1908   ஜனவரி   சத்தியாகிரகப் போராட்டத்தைத் துõண்டியதாக, விசாரணைக்கு ஆளான காந்தி, ஜோகன்னஸ்பர்க்கில் இரண்டு மாதம் சிறையிலடைக்கப்பட்டார். (இதுதான் அவரின் முதல் சிறை அனுபவம்)
1908   ஜனவரி   பிரிட்டோரியாவில் ஜெனரல் ஸ்மட்ஸ்சை சந்திக்க அறிவுறுத்தப்பட்டார்.  சமரசம் ஏற்பட்டதையடுத்து, சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்
1908   பிப்ரவரி   ஜெனரல் ஸ்மட்ஸ் உடன் சமரசம் ஏற்படுத்திக் கொண்டதற்காக இந்தியாவைச் சேர்ந்த தீவிரவாதி மிர் ஆலம், காந்தியை தாக்கி காயப்படுத்தினான்.
1908      ஆகஸ்ட்  சமரச உடன்பாட்டை ஸ்மட்ஸ் நிராகரித்ததால், இரண்டாவது சத்தியாகிரகப் போராட்டம் துவங்கியது. பதிவுச் சான்றிதழ்கள் தீயில் எரிக்கப்பட்டன
1908   அக்டோபர் சான்றிதழ் இல்லாததால் கைது செய்யப்பட்ட காந்திஜி, மூன்று மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வோல்க்ஸ்ரஸ்ட் சிறையில் அடைக்கப்பட்டார்
1909 பிப்ரவரி    வோல்க்ஸ்ரஸ்ட் மற்றும் பிரிடோரியா சிறைகளில் மூன்று மாத சிறைவாசம்
1909 ஜூன்      இந்தியர் நிலை குறித்து எடுத்துரைக்க இங்கிலாந்திற்கு கப்பலில் பயணம்
1909 நவம்பர்    தென் ஆப்ரிக்கா திரும்பினார். வரும் வழியில் ஹிந்து சுவராஜ்ஜியம் எழுதினார்
1910 மே ஜோகன்னஸ்பர்க் அருகே டால்ஸ்டாய் பண்ணையைத் துவக்கினார்
1913   ஃபீனிக்ஸ் குடியேற்றத்தை  இரண்டு உறுப்பினர்கள் மனரீதியாக பின்பற்றத் தவறியதால், தன்னைத்தானே வருத்தும் விதமாக, ஒருவேளை மட்டும் உணவருந்தி, நான்கு மாதங்களுக்கு உண்ணாவிரதம் மேற்கொண்டார்
1913 செப்டம்பர்

கிறிஸ்தவ வழக்கப்படி, திருமணத்தை செல்லாததாக்கும் செயல்பாட்டிற்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டார். அனுமதியின்றி டிரான்ஸ்வால் எல்லையைத் தாண்டியதாகக் கூறி, கஸ்துõரிபாய் மற்றும் பிற பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

1913 நவம்பர்

மூன்றாவது சத்தியாகிரகப் போராட்டம் துவங்கியது. 2,000 இந்திய சுரங்கத் தொழிலாளர்களுடன் நியூகேசிலிலிருந்து நேட்டாலின் டிரான்ஸ்வால் எல்லை வரை மாபெரும் பேரணி நடந்தது.    

1913 நவம்பர் நான்கு நாட்களின் மூன்று முறை கைது செய்யப்பட்டார் (பாம்போர்டு, ஸ்டாண்டர்டன் மற்றும் டீக்வொர்த் ஆகிய இடங்களில்). மேலும், துண்டீயில் 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். வோக்ஸ்ரஸ்டில் நடந்த இரண்டாவது விசாரணையில் ஐரோப்பிய உடன் பணியாற்றுபவர்களுடன் சேர்ந்து 3 மாத சிறைத் தண்டனை பெற்றார்.வோக்ஸ்ரஸ்ட் சிறையிலடைக்கப்பட்டவர், பின்னர் புளோம்போன்டையனில் உள்ள சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
1913 டிசம்பர் சமரச உடன்பாட்டின்பேரில் விடுதலை செய்யப்பட்டார்.
1914 ஜனவரி இந்திய நிவாரணச் சட்டம் கோரி, ஸ்மட்ஸ், ஆண்ட்ரூஸ் மற்றும் காந்திக்கு இடையே நடந்த சமரசத்தில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், சத்தியாகிரகப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது
1914   இந்திய ஆம்புலன்ஸ் பிரிவைத் துவக்கினார். எனினும், நுரையீரல் நோய் காரணமாக இந்தியா திரும்பினார்.
1915   விராம்கம்மில், பயணிகளுக்கு சுங்கப் பரிசோதனையிலிருந்து விலக்க பெறப்பட்டது. இந்தியாவில் முதல் சத்தியாகிரகப் போராட்டம் துவங்கியது
1915 மே அகமதாபாத் அருகே உள்ள கோச்ராப்பில் சத்தியாகிரக ஆசிரமம் அமைக்கப்பட்டது. உடனடியாக ஒரு தீண்டத்தகாத குடும்பத்தினரை ஏற்றுக் கொண்டார். 1917ம் ஆண்டு, இந்த ஆசிரமம் சபர்மதி ஆற்றின் கரைக்கு மாற்றப்பட்டது.
1916    பிப்ரவரி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத் துவக்கவிழாவில் உரையாற்றினார்.
1917      இந்தியாவில் தென் ஆப்ரிக்காவிற்கு, நிபந்தனைகளுடன் கூடிய பணியாளர்களை தேர்வு செய்ய பாதுகாப்பான தடையாணை பெற்றார்.
1917   சாம்பரானின் இண்டிகோ விவசாயிகளின் கோரிக்கைக்காக சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினார். ஏப்ரலில் விதிக்கப்பட்ட, அந்தப் பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவை மீறினார். மோதிஹிரியில் கைது செய்யப்பட்டார். விசாரணை நடந்தது. பின்னர் வழக்கு வாபஸ் பெறப்பட்டது. மகாதேவ் தேசாய், சாம்பரானின் காந்திஜியுடன் சேர்ந்து கொண்டார்.
1918 பிப்ரவரி அகமதாபாத் மில் தொழிலாளர்களுக்காக வேலைநிறுத்தத்திற்கு தலைமை வகித்தார். மூன்று நாள் உண்ணாவிரதம் இருந்ததை அடுத்து ஒப்பந்தத்திற்கு இறங்கி வந்தது மில் நிர்வாகம். (இதுதான் இந்தியாவில் காந்தியின் முதல் உண்ணாவிரதம்)
1918   மார்ச்     கேடா விவசாயிகளுக்காக சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தினார்.
1918   டில்லியில் நடந்த வைஸ்ராய் போர் மாநாட்டில் பங்கேற்றார். முதல் உலகப் போருக்கு இந்திய வீரர்கள் பணியமர்த்தப்பட ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
1918   இந்திய வீரர்கள் தேர்வு நடந்து கொண்டிருந்த நேரத்தில் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இறக்கும் தருவாய் வரை சென்றார். உடல் நலம் தேறிக் கொண்டிருந்தபோது ஒய்வில் இருந்தபோதுதான் கைராட்டை சுற்றுவதைக் கற்றார்.
1919   தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் மறுக்க வகை செய்யும் ரவ்லட் மசோதாவை எதிர்த்து, நாடு தழுவிய சத்தியாகிரகப் போராட்டம் துவங்கியது.
1919 ஏப்ரல் ரவ்லட் மசோதாக்களை எதிர்த்து நாடு தழுவிய ஹர்தால் போராட்டம் நடந்தது.
1919 ஏப்ரல் பஞ்சாப் செல்லும் வழியில் டில்லி அருகே உள்ள கோசி அருகே கைது செய்யப்பட்டார். பம்பாய் கொண்டு போய் விடப்பட்டார்.
1919   சபர்மதி ஆசிரமத்தில் மூன்று நாள் உண்ணாவிரதம் இருந்தார். அதை பாதியிலேயே முடித்துக் கொண்டார். மக்கள் மாறவில்லை என்று கூறி போராட்டத்தை முடிவு செய்தார்.
1919      ஆங்கில வார இதழ் யங் இந்தியா, குஜராத்தி வார இதழ் நவஜீவன் பத்திரிகைகளின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.
1919 அக்டோபர் பஞ்சாப் செல்ல அனுமதி கிடைத்தது. மோதிலால் நேருவுடன் நெருக்கமாக பழகி, பஞ்சாப் கலவரங்கள் குறித்து விசாரணை நடத்த ஏற்பாடு செய்தார்.
1920 ஏப்ரல் அனைத்திந்திய ஹோம்ரூல் லீக்கின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
1920 ஜூன் அலகாபாத்தில் நடந்த முஸ்லிம் மாநாட்டில், ஒத்துழையாமை போராட்டத்திற்காக ஒரு தீர்மானம் நிறைவேற்ற வைத்தார்.    
1920 ஆகஸ்ட் இரண்டாவது அனைத்திந்திய சத்தியாகிரகப்போராட்டம் துவங்கியது.   
1921   பம்பாயில் முதல் காதி விற்பனை நிலையம் துவக்க விழாவிற்கு தலைமை வகித்தார்.
1921 ஆகஸ்ட் பம்பாயில், வெளிநாட்டுத்துணிகளை கொளுத்தினார்.
1921 நவம்பர் எளிமைக்காகவும், உள்நாட்டில் தயாரிக்கப்படும் கதர் துணிகளுக்கு உத்வேகம் கொடுக்க வேண்டும் என்பதற்காக சட்டை மற்றும் தொப்பி அணிவதைப் புறக்கணித்த காந்தியடிகள், அரையாடை மட்டும் அணியத் துவங்கினார்.
1921 நவம்பர்

ஒத்துழையாமை போராட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கானோர் சிறையில் தள்ளப்பட்டனர். காங்கிரஸ் சார்பில் பேச காந்திக்கு அனுமதி வழங்கப்பட்டது.    

1922 பிப்ரவரி சவுரி சவுரா வன்முறையை அடுத்து, ஒத்துழையாமை போராட்டத்தை நிறுத்தினார்.பர்தோலியில் 5 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார்.
1922 மார்ச் சபர்மதியில் கைது செய்யப்பட்டார். யங் இந்தியாவில் தேசத்துரோகமாக எழுதியதற்காக கைது
1922   6 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு எரவாடா சிறையிலடைக்கப்பட்டார்.
1923   தன் சுயசரிதையை எழுதத் துவங்கினார்.
1924 ஜனவரி குடல்வால் வீக்கம் பிரச்னைக்காக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. பிப்ரவரி மாதம் சிறையிலிருந்து விடுதலையானார்
1924 செப்டம்பர் டில்லி அருகே 21 நாள் உண்ணாவிரதத்தைத் துவக்கினார்.  
1924 டிசம்பர்

பெல்காம் காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித்தார்.    

1925 நவம்பர்

ஆசிரம ஊழியர்கள் தவறாக நடந்து கொண்டதால் சபர்மதி ஆசிரமத்தில் 5 நாள் உண்ணாவிரதம் இருந்தார்.

1926 டிசம்பர் ஓராண்டு அரசியல் அமைதி கடைபிடித்தார்.
1927      சர்தார் வல்லபாய் படேல் தலைமையில் வரிகொடா இயக்கத்தை பர்தோலியில் துவக்கினார்.
1928 டிசம்பர் ஓராண்டிற்குள் சுதந்திரம் கிடைக்க வேண்டும் இல்லையேல், சத்தியாகிரகப் போராட்டம் நடக்கும் என்று அறிவித்தார்.
1929 மார்ச் வெளிநாட்டுதுணிகளை எரித்ததற்காக கல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.
1929 டிசம்பர்

லாகூர் காங்கிரஸ் மாநாட்டில், ஜனவரி 26ம் தேதியை முழுச் சுதந்திரத்திற்கான தேதியாக அறிவிக்கப்பட்டது. மூன்றாவது அகிலஇந்திய சத்தியாகிரகப் போராட்டம் துவங்கியது.   

1930 12 மார்ச் தண்டி யாத்திரையை துவக்கினார்.
1930 6 ஏப்ரல் தண்டி கடலில் உப்பெடுத்தார்.
1930    மே காரடியில் கைது செய்யப்பட்டார். எரவாடா சிறையிலடைக்கப்பட்டார்.
1931 ஜனவரி விடுதலை செய்யப்பட்டார்
1931   மார்ச்     காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது
1931 ஆகஸ்ட் லண்டன் வட்டமேஜை மாநாட்டிற்கு பயணம்
1931 டிசம்பர் லண்டனிலிருந்து சுவிட்சர்லாந்து பயணம் செய்தார். இத்தாலி சென்று முசோலினியை சந்தித்தார்.
1931 டிசம்பர் இந்தியா திரும்பினார்
1932 ஜனவரி

பம்பாயில் சர்தார் வல்லபாய் படேலுடன் கைது செய்யப்பட்டு எரவாடா சிறையிலடைக்கப்பட்டார். 

1932 செப்டம்பர் 20 சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார்
1932 செப்டம்பர் 26 உண்ணாவிரதம் வாபஸ்
1933   யங் இந்தியாவுக்குப் பதிலாக ஹரிஜன் வாரப் பத்திரிகையைத் துவக்கினார்
1933 8 மே 21நாள் சுய உண்ணாவிரதம் துவக்கினார்
1933 ஜூலை சபர்மதி ஆசிரமத்தில் தீண்டாமை நிலவியதால், ஆசிரமத்தைக் கலைத்தார்.  
1933 நவம்பர் கஸ்துõரிபாய் காந்தி கைது செய்யப்பட்டார். இரண்டாண்டுகளில் மூன்றாவது முறையாக அவர் கைது செய்யப்பட்டார்.  
1934   கோடைகாலத்தில் அவரைக் கொல்ல மூன்று முறை முயற்சி நடந்தது
1935   உடல்நலக்குறைவால் பம்பாய் சென்றார்.  
1936   வார்தா அருகிலுள்ள சீகான் கிராமத்திற்குச் சென்றார். அங்கேயே தங்க முடிவு செய்தார். (இதுதான் பின்னர் சேவாகிராமம் என அழைக்கப்படலாயிற்று)
1937    ஜனவரி திருவாங்கூரில் தீண்டாமையை ஒழிக்க அங்கு பயணம் மேற்கொண்டார்
1939 மார்ச்     ராஜ்கோட்டில் சாகும் வரை உண்ணாவிரதம் துவக்கினார். 4 நாட்களில், வைஸ்ராய் உறுதிமொழியை அடுத்து கைவிட்டார்.
1942 மார்ச் சர்.ஸ்டார்போர்டு கிரிப்ஸ்சை டில்லியில் சந்தித்தார்.
1942 ஆகஸ்ட்

வெள்ளையனே வெளியேறு தீர்மானத்தை காங்கிரஸ் நிறைவேற்றியது.காந்திஜி தலைமையில் நாடு முழுவதும் இறுதி சத்தியாகிரகப் போராட்டம் நடந்தது. 

1942    ஆகஸ்ட் கஸ்துõரி பாய் காந்தியுடன் கைது செய்யப்பட்டு, புனே அருகில் உள்ள ஆகாகான் அரண்மனையில் அடைக்கப்பட்டார்.
1942 ஆகஸ்ட் தனிச் செயலாளர் மகாதேவ் தேசாய் காலமானார்.    
1944 பிப்ரவரி 22 கஸ்துõரி பாய் காந்தி தனது 74 வயதில் மறைந்தார்.  
1944 6 மே ஆகாகான் அரண்மனையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். அவர் தன் வாழ்நாளில், 2338 நாட்கள் சிறையில் கழித்துள்ளார்.
1944 செப்டம்பர் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக முகமது அலி ஜின்னாவுடன் பம்பாயில் பேச்சுவார்த்தை
1947   பீகார் கிராமங்களில் நடந்த இந்து-முஸ்லிம் கலவரங்களை அடுத்து அங்கு பயணம் மேற்கொண்டார்.
1947 மே இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு நாடாக பிரிக்கும் காங்கிரசின் யோசனையை எதிர்த்தார்.
1947 ஆகஸ்ட் 15 இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தது. கல்கத்தா கலவரத்தைக் கண்டித்தும், நாடு பிரிவினையைக் கண்டித்தும் காந்திஜி உண்ணாவிரதம்
1947 செப்டம்பர் டில்லி மற்றும் சுற்றுப்புறங்களில் நடந்த மதக்கலவரங்களால் அந்தப் பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டார். 
1948 ஜனவரி 20 பிர்லா ஹவுசில் குண்டு வெடித்தது.
1948    ஜனவரி 30

தன் 79 வயதில், பிர்லா ஹவுசில் தங்கியிருந்தபோது, பிரார்த்தனையில் கலந்து கொள்ளச் சென்றபோது நாதுராம் விநாயக் கோட்சே என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்