Facebook
Peace 2020    |   Save Nature 4 Future   |   Gandhi Memoribila on October 2nd 2015   |      We 2 Ours 2      |    Chennai walkathon 2016
மகாத்மாவைப் பற்றிய சேகரிப்புகள்  
அஞ்சல் தலைகள்
நாணயங்கள்
ரூபாய் தாள்கள்
டோக்கன்கள்(அடையாள பொருட்கள்)
அஞ்சல் அட்டைகள்
சிறப்பு உறை & முத்திரை
தொலைபேசி அட்டை
பிறந்த தேதி ரூபாய் தாள்கள்
செய்தித்தாள்கள்
கையெழுத்து
புத்தகங்கள் மற்றும் குறுந்தகடுகள்
புகைப்படங்கள்
சிலைகள்
வீடியோ மற்றும் குரல்
சிறுகதைகள்
ஓவியங்கள் மற்றும் கார்டூன்கள்
விளக்கக் காட்சிகள்
காந்திஜியின் கோயில்
அருங்கட்சியங்கள் மற்றும் ஆசிரமங்கள்
வாழ்கை வரலாறு
காலவரிசை
பாராட்டுகள்
பொன்மொழிகள்
சிறிதளவு அறியப்பட்ட உண்மைகள்
கடைசி 24 மணிநேரம்
மற்றவை
பயன்மிக்க இணைப்புகள்
 
 
   
  மகாத்மா காந்திஜி பற்றி பரவலாகத் தெரியாத தகவல்கள்
   
   
 
 • சிறுவயதிலேயே காந்திஜியிடம் வீரம், வெளிப்படையாகப் பேசும் பண்பு போன்றவை இருக்கவில்லை. அவர் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளதன்படி பார்த்தால், அவர் சிறு வயதாக இருந்தபோது மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டராக இருந்துள்ளார். பிறருடன் பேச வெட்கப்பட்டு, பள்ளியிலிருந்து வீட்டுக்கு ஓடி வந்துள்ளார். 

 • நடப்பதில் ஆர்வம் கொண்டவர். 'உடற்பயிற்சிகளின் இளவரசன்' நடைபயிற்சி என்று அவர் அவ்வப்போது குறிப்பிடுவது வழக்கம். உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போதிலிருந்து அவருக்கு நீண்டதுõரம் நடப்பது மிகவும் பிடிக்கும். லண்டனில் சட்டம் படித்துக் கொண்டிருந்தபோது, தினமும் 8-10 மைல் துõரம் நடப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதன் மூலம் அவர் பணத்தையும் மிச்சப்படுத்தியுள்ளார். 'லண்டனில் நான் தங்கியிருந்த காலத்தில் தினமும் நீண்ட துõரம் நடப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தேன். இதன் மூலம் என் உடல் வலுப்பட்டது' என்று காந்திஜி குறிப்பிடுகிறார். இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நீண்ட துõரம் அவர் நடந்ததால்தான், 1930ம் ஆண்டு, சபர்மதி ஆசிரமத்திலிரந்து தண்டி நோக்கி, தனது 60வது வயதில் யாத்திரை மேற்கொண்டு 241 மைல் துõரத்தை நடந்தே கடந்தார். 

 • பிரிட்டீஷாருடன் காந்திஜிக்கு பல கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. தென் ஆப்ரிக்காவில் அவர் இருந்தபோது, ரயில் பயணம் மேற்கொண்டார். அவர் இருந்த பெட்டியில் ஏறிய பிரிட்டீஷ்காரர் ஒருவர், காந்திஜியை கறுப்பர் இனத்தவர் என நினைத்து, கீழே இறங்குமாறு நிர்பந்தித்துள்ளார். இந்தப் பெட்டியில் பயணம் செய்ய நான் டிக்கெட் பெற்றுள்ளேன் எனத் தெரிவித்து, காந்திஜி இறங்க மறுத்தபோது, அந்த பிரிட்டீஷாரும் ரயில்வே ஊழியர் ஒருவரும் சேர்ந்து, காந்தியை ரயிலில் இருந்து கீழே வீசியுள்ளனர்.
   
 • காந்திஜியின் முதல் ரேடியோ உரை, 1931ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்தபோது ஒலிபரப்பானது. அமெரிக்க மக்களுக்காக அவர் ரேடியோவில் பேசினார். அவரின் முதல் பேச்சு, 'இந்த விஷயத்தை நான் பேசலாமா?' என்று ஆங்கிலத்தில் துவங்கியது.

 • பிறருக்கு உதவுவதில் காந்திஜி விருப்பம் கொண்டவர். ஒருமுறை ரயிலில் ஏறும்போது, ஒரு காலில் அணிந்திருந்த செருப்பு கழன்று தண்டவாளங்களுக்கு இடையே விழுந்துவிட்டது. அடுத்த கணமே, தன் மற்ற கால் செருப்பையும் கழற்றி கீழே போட்டுவிட்டு மேலே ஏறினார். ஒருகால் செருப்பை கண்டெடுப்பவர்களுக்கு அந்தச் செருப்பால் எந்த பயனும் இல்லை என்பதால் தன் மற்றொரு கால் செருப்பை அவர் கழற்றிப் போட்டார்.

 • உண்மை, அகிம்சை, ஆன்மீகம், மதத்தைப் பின்பற்றுதல், நேர்மை, ஒழுக்கம், பணிவு, விருப்பம் போன்றவையே அவரின் வாழ்க்கைக் குறிக்கோள்களாக இருந்தன. இந்த உயர்ந்த குணங்கள்தான் அவரை மகாத்மா (உயர்ந்த ஆத்மா) ஆக்கியது.

 • காலம் தவறாமையை கண்டிப்புடன் காந்திஜி கடைபிடித்தார். அதற்காக அவர் தன் இடுப்பில் டாலர் கடிகாரம் ஒன்றைக் கட்டித் தொங்கவிட்டிருப்பார். படுகொலை செய்யப்பட்ட 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி அவர் சற்று மனவேதனையுடன் இருந்துள்ளார். ஏன் என்று நெருக்கமானவர்கள் கேட்டபோது, அன்றாட இறைவணக்கத்திற்கு 10 நிமிடம் தாமதமாகப் போனதற்காக காந்திஜி வருத்தம் அடைந்துள்ளார்.

 • அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான, 'டைம்', 1930ம் ஆண்டில் காந்திஜியை, அந்த ஆண்டின் மனிதராக (மேன் ஆப் த இயர்) அறிவித்தது.

 • காந்திஜி ஒரு வழக்கறிஞர். அந்தத் தொழிலில் 20 ஆண்டுகள் அவர் இருந்துள்ளார். எனினும், பெரும்பாலான வழக்குகளை அவர் சமரசம் செய்தே தீர்த்து விடுவார். இரண்டு தரப்பினரையும் அழைத்து பேசி சமரச தீர்வு கண்டுவிடுவார். 'இதனால் நான் எதையும் இழக்கவில்லை. பணத்தைக்கூட இழக்கவில்லை. கண்டிப்பாக என் ஆத்மாவையும்தான்' எனக் குறிப்பிடுகிறார்.

 • சட்டம் படிக்க காந்திஜி லண்டன் சென்ற ஆண்டு, 1888. அந்த ஆண்டில் லண்டன் மாநகரமே பீதியில் உறைந்திருந்தது. ஜேக் தி ரிப்பர் என்ற தொடர் கொலைகாரன் பற்றிய செய்திகளே அப்போது பத்திரிகைகளில் பிரதானமாக இடம்பெற்றிருந்தது.

 • காந்திஜி கிண்டலாகப் பேசுவதில் வல்லவர். ஒரு முறை நிருபர் ஒருவர், 'மேற்கத்திய நாகரீகம் பற்றி உங்கள் கருத்து என்ன?' என்று கேட்டார். அதற்கு பதிலளித்த காந்திஜி, 'நான் அதை மிகச் சிறந்த ஒரு ஐடியாவாகக் கருதுகிறேன்' என்றார்.

 • ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயுடன் காந்தி தொடர்பு வைத்திருந்தார்.

 • 1948ஆம் ஆண்டு காந்திஜியின் உடலைச் சுமந்து சென்ற பீரங்கி வண்டி, 1997ல் அன்னை தெரசா உடலையும் சுமந்து சென்றது.

 • தென் ஆப்ரிக்காவின் ஜூலு போரின்போது காயமடைந்த பிரிட்டீஷ் வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக, 1906ம் ஆண்டு, இந்தியர்களை ஒருங்கிணைந்து ஸ்ட்ரெச்சர் பியரர் கார்ப்ஸ் என்ற தள்ளுவண்டி தொண்டர்கள் பிரிவைத் துவக்கினார்.

 • ஆங்கிலம், இந்தி, குஜராத்தி மொழிகளில் வெளிவந்த ஹரிஜன், யங் இண்டியா போன்ற பல பத்திரிகைகளுக்கு காந்திஜி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். அவற்றில் தென் ஆப்ரிக்க பத்திரிகையான இண்டியன் ஒபினியன் என்ற பத்திரிகையும் அடக்கம். 

 • மகாத்மா காந்திஜியின் சுயசரிதை 'சத்தியசோதனை' , 1920ஆம் ஆண்டு வரையுள்ள தகவல்களைக் கொண்டிருந்தது. அந்த நுõல், 1927ஆம் ஆண்டு வெளியானது. ஹார்பர் கோலின்ஸ் என்ற பிரபல புத்தக நிறுவனத்தினர், 1999ம் ஆண்டு, அந்த நுõலை 20ம் நுõற்றாண்டின் 100 முக்கிய ஆன்மீக புத்தகங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டிருந்தனர்.

 • நோபல் அமைதி விருதுக்கு 1948ம் ஆண்டு காந்திஜி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். துரதிருஷ்டவசமாக அந்த ஆண்டில் அவர் படுகொலை செய்யப்பட்டதால், நோபல் பரிசுக்குழு அந்த ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை யாருக்கும் வழங்கப்போவதில்லை என்று அறிவித்தது. 

 • அமெரிக்காவின் பிரபலமான டைம் பத்திரிகை, 1999ம் ஆண்டு, நுõற்றாண்டின் மிகச்சிறந்த நபர் என்ற பெருமையை விஞ்ஞானி ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது. இரண்டாவது இடத்தை காந்திஜி பிடித்தார்.

 • வயதான பிறகு காந்திஜி, பல் செட் அணிந்திருந்தார். அதை அவர் எப்போதும் அணிவதில்லை. சாப்பிடச் செல்லும்போது மட்டும் அணிவார். சாப்பிட்டு முடிந்ததும் அதை சுத்தப்படுத்தி, துடைத்து தன் இடுப்புத் துணியில் பத்திரமாக வைத்துக் கொள்வார்.

 • காந்திஜி பேசும் ஆங்கிலம், ஐரிஷ் (அயர்லாந்து) பேச்சு வழக்கில் இருக்கும். இதற்குக் காரணம், அவருக்கு முதலில் ஆங்கிலம் சொல்லிக் கொடுத்தவர்கள் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆசிரியர்கள்.

 • சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஈடுபட்டிருந்த காலத்தில் இடுப்பில் மட்டும் அவர் துணியணிந்திருந்தார். ஆனால், லண்டனில் அவர் இருந்தபோது பட்டுத் தொப்பி, கணுக்காலுõறை, கையில் பிரம்பு வைத்திருந்தார்.

 • லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்து அவர் அட்டர்னி ஆனார். நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் முதலில் வாதாடும்போது, அவர் கால்கள் நடுங்கின. வாய் குளறியது. என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பிய அவர் தோல்வியில் கீழே உட்கார்ந்துவிட்டார்.

 • லண்டனில் வழக்கறிஞராக காந்திஜி ஒன்றும் பெரிதாக ஜொலிக்கவில்லை. அங்கு அவருக்குத் தோல்விதான் ஏற்பட்டிருந்தது. முதன்முதலில் இங்கிலாந்து வருவதற்கு முன், அவருக்கு ஆங்கிலப் பாடம் நடத்திய ஐரிஷ் ஆசிரியர்கள், 'செர்மான் ஆன் த மவுன்ட்' என்ற உபதேசத்தை அடிக்கடி படிக்கச் சொன்னார்கள். அதை அவர் முழுமையாக மனப்பாடம் செய்துவிட்டார். அது அவருக்கு பின்னாளில், தென் ஆப்ரிக்காவில் உதவியது.

 • தென் ஆப்ரிக்காவில் கடன்களை வசூலிக்க அவர் சென்றிருந்தபோது, செர்மான் ஆன் த மவுன்ட் அவருக்குக் கைகொடுத்தது. அதை சமயோஜிதமாகப் பயன்படுத்திய காந்திஜிக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். அவர்கள் வழக்குகளை, நீதிமன்றத்திற்கு வெளியே சமரசமாக முடித்து வைத்தார்.

 • தென் ஆப்ரிக்காவில் அவர் இருந்த காலத்தில் அவரின் ஆண்டு வருமானம், 15,000 டாலர்கள். இந்தத் தொகை, இப்போதுகூட பல இந்தியர்களின் கனவுத்தொகையாக உள்ளது.

 • தென் ஆப்ரிக்காவில் அவர் வெற்றிகரமான வழக்கறிஞராக பணத்தைக் குவித்தாலும் அவருக்கு மகிழ்ச்சியில்லை. காரணம், அவரின் சகஇந்தியர்கள், அங்கே வறுமையில் வாடினர். பசி, பட்டினியால் துவண்டிருந்தனர். அவர்களின் பசி, பிணியைப் போக்க தன் வருமானத்தின் பெரும் பகுதியை காந்திஜி செலவிட்டார். 

 • தென் ஆப்ரிக்காவில் இருந்த இந்தியர்களில் பத்து பேரில் ஒருவர், மிகுந்த வறுமையிலும் பட்டினியிலும் துன்பப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்த காந்திஜி, அவர்களின் குழந்தைகளை தென் ஆப்ரிக்காவுக்கு கூட்டி வரவேண்டாம். அந்தக் குழந்தைகளையும் இங்கு கொண்டு வந்து வறுமைச்சூழலில் வாட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

 • எளிய உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்பதில் காந்திஜி முன்னுதாரணமாக இருந்தார். பழங்கள், வெள்ளாட்டுப் பால், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை உட்கொண்டார்.

 • தன் வாழ்நாளில் காந்திஜி ஒருபோதும் அமெரிக்கா சென்றதில்லை. ஆனால், அந்நாட்டில் அவருக்கு ஏராளமான தொண்டர்களும் நண்பர்களும் இருந்தனர். அத்தகைய நண்பர்களில் ஒருவர், ஹென்றி போர்டு. அவருக்கு காந்தி தன் கையெழுத்திட்ட கை ராட்டையை பரிசாக வழங்கிவைத்திருந்தார். இரண்டாம் உலகப் போர் காலத்தில் அந்த கை ராட்டையை அவ்வப்போது சுழற்றிய போர்டு, 'இந்த ராட்டை மகாத்மா காந்தி எனக்காக அளித்தது. இந்த ராட்டை மிகவும் எளிய இயந்திரவியல் தத்துவத்தைக் கொண்டது மட்டுமல்ல ஆன்மீகத்திற்கும் உதவும். பொருளாதாரச் சுதந்திரத்தின் அடையாளச் சின்னம்' என்று குறிப்பிட்டாராம்.

 • மகாத்மா காந்திஜியின் அகிம்சை மற்றும் சத்தியாகிரகப் போராட்டங்களில் லட்சக்கணக்கானோர் அவரைப் பின்பற்றினர். 

 • நோபல் பரிசு பெற்ற 5 உலகத் தலைவர்களான, மார்ட்டின் லுõதர் கிங் ஜூனியர் (அமெரிக்கா), தலாய் லாமா (திபெத்), ஆங் சான் சூ கியி (மியான்மர்), நெல்சன் மண்டேலா (தென் ஆப்ரிக்கா) மற்றும் அடோல்போ பெரஸ் எஸ்க்யுவெல் (அர்ஜென்டினா) ஆகியோர், தாங்கள் மகாத்மா காந்தியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். அத்தகைய பெருமை பெற்ற காந்திஜிக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. இதனால், நோபல் பரிசுக்குத்தான் பாதிப்பு; காந்திக்கு அல்ல.

 • காந்திஜிக்கு தாய்மொழிப்பற்று அதிகம். பிற்காலத்தில் தன்னுடைய சுயசரிதையை தன்னுடைய தாய்மொழியான குஜராத்தி மொழியில்தான் எழுதினார். அவருடைய செயலாளர் மகாதேவ தேசாய் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

 • இந்து சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என்கின்ற ஒரு பிரிவு இருப்பதையும் மற்ற இந்துக்கள் தீண்டத்தகாதவர்களாக அவர்களைக் கருதுவதையும் காந்திஜி கடுமையாக எதிர்த்தார். ஙிண்டாமை இந்து மதத்தின் சாபக்கேடு என்று தொடர்ந்து சொல்லி வந்தார். அவர்களை பெருமைப்படுத்துவதற்காகவே கடவுளின் குழந்தைகள் அவர்கள் என்கின்ற அர்த்தத்தில் ஹரிஜன் எனவும் அவர் பெயர் சூட்டினார்.

 • காந்திஜிக்கு புகைப்படக் கலைஞர்களைக் கண்டாலே பிடிக்காது. புகைப்படம் எடுப்பதையும் விரும்பாதவர் அவர். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த காலத்தில் அதிகமாக புகைப்படம் எடுக்கப்பட்ட தலைவரே அவர்தான்.

 • காந்திஜி தன்னுடைய வாழ்நாளில் இறுதிக்காலம் வரையில் சினிமாப்படங்களை வெறுக்கவே செய்தார். சினிமா மூலம் தன்னுடைய கருத்துகளைப் பாமர மக்களிடம் பரப்ப முடியும் என்கின்றன எண்ணம் அவருக்குத் தோன்றாமலேயே போயிற்று. ஆனால், தன்னுடைய கடைசி காலத்தில் தன்னுடைய எண்ணங்களை மக்களுக்குச் எடுத்துச் சொல்ல ரேடியோவை அவர் தாராளமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

 • அஞ்சல் அட்டைகள்தான் மிகவும் சிக்கனமான தகவல் தொடர்பு சாதனம் என்று கருதியவர் காந்திஜி.

 • மனித வடிவில் வந்த இயேசு மாண்டது வெள்ளிக்கிழமை, காந்தியடிகள் பிறந்தது வெள்ளிக்கிழமை, இந்தியா விடுதலை பெற்றது வெள்ளிக்கிழமை, தேசப்பிதா மகாத்மா காந்திடிகள் இறந்ததும் வெள்ளிக்கிழமைதான்.

 • நமது தேசத்தந்தை காந்தியடிகளைக் கௌரவப்படுத்தும் வகையில் முதன்முதலில் அவருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட வெளிநாடு அமெரிக்கா. ஜனவரி 26, 1961. (குறிப்பு: இது ஏற்கனவே முன்னர் குறிப்பிடப்பட்டுள்ளது)

 • 1915-ம் ஆண்டு ஒரு சமயம் சாந்திநிகேதனுக்கு காந்தியடிகள் சென்று கவிஞர் இரவீந்திரநாத் தாகூரைப் பார்த்து நமஸ்தே குருதேவ் என்று கைகூப்பி வணக்கம் சொன்னார். உடனே தாகூர், நான் குருதேவ் என்றால் நீங்கள் மகாத்மா என்று சொல்லி வணங்கினார். இதுவே, காந்தியடிகளுக்கு மகாத்மா என்ற அடைமொழி அமையக் காரணமான நிகழ்ச்சி.

 • நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் தனது வாழ்நாட்களில் எப்போதும் விமானப்பயணம் மேற்கொண்டதில்லை. அதிகாரம் இருந்தும் ஒரு துளிகூட ஆடம்பரத்தை விரும்பாத உத்தமர் அவர். தனது வாழ்க்கை முழுவதும் எளிமையாகவே வாழ்ந்து மறைந்தார்.

 • உலகிலேயே காந்திஜிக்கு டாக்குமென்டரி படம் எடுத்த முதல் நபர் ஏ.கே.செட்டியார் என்ற தமிழர். கடைசி வரை காந்தி பக்தராகவே வாழ்ந்து விளம்பரம் இன்றி பணிசெய்து மறைந்து போனார். காந்தியைப் பற்றிய டாக்குமென்டரி படம் எடுப்பதற்காக மட்டுமே தன் சொந்த முயற்சியில் ஜப்பான் சென்று சினிமாப்பட நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு தென் ஆப்ரிக்கா மற்றும் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் சென்று காந்திஜியைப் பற்றிய பல அபூர்வ காட்சிகளைப் பணம் கொடுத்து வாங்கி தன்னுடைய டாக்குமென்டரியில் சேர்த்தாராம், அந்த காந்தி பக்தர்.

 • 1921-ம் ஆண்டு செப்டம்பருக்கு முன்புவரை முழுஉடையுடன் காட்சியளித்த நமது தேசத்தந்தை தனது தமிழ்நாட்டுச் சுற்றுப்பயணத்தின்போது ஏழை விவசாயிகள் பெரும்பாலானோர் இடுப்பில் முழந்துண்டு மட்டுமே அணிந்து வேலை செய்வதைப் பார்த்த மகாத்மா, ஒரு துணிக்கு அதிகமாக இரண்டாவது துணி வாங்கவும் இயலாத ஏழைகள் நிறைந்த இந்த நாட்டிலே, தமக்கெதற்கு இவ்வளவு ஆடைகள் என்று எண்ணினார். மறுகணமே ஒரு முழந்துண்டு மட்டுமே அவரது ஆடையானது. அவரது ஆடை மாற்றம் தமிழகத்தில்தான் நிகழ்ந்தது. அன்று முதல் கைராட்டையும் அவரது ஆடையுமே அவரது அடையாளங்களாயின.

 • இந்தியாவின் முதல் சுதந்திரதினமான 1947-ஆம் ஆண்டு 15-ஆம் நாளை காந்தியடிகள் கொண்டாடவில்லை. அன்றைய தினம் வாழ்த்துச் செய்திகூட மகாத்மா அனுப்பவில்லை. மாறாக, வகுப்புவாத கலவரங்களினால் மனம் நொந்து காணப்பட்டார்.

 • காந்திஜி இரண்டு விஷயங்களுக்கு வருந்துவதுண்டு. ஒன்று, அவருடைய கையெழுத்து கிறுக்கலாக, எளிதில் புரியாமலிருக்கும் என்பது. இன்னொன்று, தம்மிடமிருந்த ஒரு கெட்ட பழக்கமான, யாரையாவது உடம்பைப் பிடித்து விடச் சொல்வது. அதாவது மசாஜ் செய்து கொள்வதைத் தனது கெட்ட பழக்கமாக காந்தி குறிப்பிட்டார்.

 • காந்திஜி இறந்த அன்று அவரது நினைவைப் போற்றும் வகையில் இலங்கை வானொலி நிலையம் 24 மணி நேரத்திற்கு எந்த வித நிகழ்ச்சியையும் ஒலிபரப்பவில்லை. இலங்கை வானொலி மௌன அஞ்சலி செலுத்தியது.

 • நமது இந்திய சுதந்திரத்திற்காக மகாத்மா காந்திஜி மொத்தம் 6 ஆண்டுகள், 5 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்தார். அவரைத் தேசப்பிதா என்று அழைப்பது சரிதானே! மகாத்மா காந்தியைத் தேசப்பிதா என்று முதன்முதலில் சொன்னவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள்தான்.

 • காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ஆம் தேதி நாட்டின் மூன்றாவது விடுமுறை. மற்ற இரண்டு விடுமுறை நாட்கள், குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம்.

 • கிழிந்த துணிகளைத் தானே தைத்துக் கொள்வார் காந்திஜி. ஒருவர் எவ்வளவுதான் வறுமையில் இருந்தாலும் உடுத்துகின்ற உடைகள் மிகச் துõய்மையாக இருக்க வேண்டும் என்று காந்திஜி விரும்புவார். அதை அவர் கடைசி வரை கடைபிடித்தார்.

 • 15 ஜூன் 2007-ல், காந்திஜியின் பிறந்தநாளான அக்டோபர் 2-ஐ, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை சர்வதேச அகிம்சை தினமாக அறிவித்து காந்திஜியை கௌரவப்படுத்தியது.

 • சுதேசியாகவே வாழ்ந்து தனது வாழ்க்கையை சுதேசியாகவே தன் நாட்டிற்கு அர்ப்பணித்த காந்திஜியின் முதல் அஞ்சல் தலை அச்சிடப்பட்டதோ சுவிட்சர்லாந்து நாட்டில் என்பது முரண்பட்ட ஆச்சர்யம். 1925 முதல் இன்று வரை வெளிநாட்டில் அச்சடிக்கப்பட்ட ஒரே அஞ்சல் தலை இதுதான்
   
 
   
   
  ரூபாய் கரன்சி நோட்டுகளில் வாழ்கின்ற நமது காந்தியின் புன்னகை உலகம் அறிந்ததே. ஆனால், இது நிழல் புன்னகை, நிஜப்புன்னகையின் பதிவு மேலே.

படம் 1ல் உள்ள புகைப்படம் 1946ம் ஆண்டு எடுக்கப்பட்டது. மகாத்மா காந்தியுடன் இருப்பவர் இந்தியா மற்றும் பர்மா மாநில பிரிட்டீஷ் செயலாளர் பிரடெரிக் வில்லியம் பெதிக் லாரன்ஸ். இந்தப் புகைப்படத்தில் உள்ள நம் தேசத்தந்தையின் உருவப்படம்தான், இப்போதைய இந்திய ரூபாய் நோட்டுகளில் இருக்கிறது என்பது ஆச்சர்யமான செய்திதானே!

படம் 2. முதல் படத்தில் உள்ள புகைப்படத்தின் கண்ணாடி பிம்பம். 

படம் 3. இரண்டாம் புகைப்படத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட இந்தப் படம்தான் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றுள்ள காந்திஜியின் உருவப்படம். 

படம் 4,5 : மூன்றாம் படத்தில் உள்ள படம்தான் இங்கு உள்ள ரூபாய் நோட்டுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
   
 
  Copyright @ 2012. Gandhi World Foundation. All Rights Reserved
hit counters
Designed & Maintained by
Clutch Integrated Technologies, India