(ஒவ்வொரு மனிதனின் மனதிலும் புகைந்து கொண்டிருக்கும் சமூக சிந்தனைகளை வெளிபடுத்துவதற்கான ஒரு வாய்ப்பு) மதிப்பிற்குரிய குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும், பெரியோருக்கும் மற்றும் தேசத்தின் கடைகோடி வரை உள்ள ஒவ்வொரு சாமனியருக்கும்.
பண்பாட்டிலும், கலாச்சாரத்திலும் மற்றும் தேச ஒற்றுமையிலும் பெயர் போனது நமது இந்திய தேசம். ஜாதி, மதம், மொழி மற்றும் இன வேறுபாடுகளை கடந்து இன்றளவும் உலக நாடுகளில் ஓர் சிம்ம சொப்பனமாய் விளங்கி கொண்டிருக்கின்றது.
இருப்பினும் காலச்சுழற்சியால் பல்வேறு விதமான மாற்றங்களை நாம் தற்போது சந்தித்து கொண்டிருக்கின்றோம். தேசத்தின் தற்போதைய நிலை கண்டு மனதளவில் துடிக்கின்றோம். தீர்வு பிறக்காத என தினம் தினம் காத்திருக்கின்றோம்.
தீர்வுகளுக்கான ஒரு சிறிய அடித்தளமாய் காந்தி உலக மையத்தின் ஓர் புதிய முயற்சி. தற்போதைய சூழலில் காந்தியடிகள் வாழ்ந்து கொண்டிருந்தால் நமது தேசத்தில் மாற்றப்பட வேண்டிய அவலங்கள், சமூக முன்னேற்றத்திர்க்கான கருத்துக்கள், மேலும் தங்களின் மாறுபட்ட சிந்தைகள் என எதனை பற்றி அவருக்கு கடிதமாக எழுத விரும்புவீர்கள்.
நீங்கள் காந்தியடிகளுக்கு எழுதுகின்ற கடிதத்தினை கீழ்காணும் காந்தி உலக மைய முகவரிக்கு கடிதமாகவோ, வாட்ஸ் ஆப் எண்ணுக்கோ அல்லது மின்னணு முகவரிக்கோ வருகின்ற அக்டோபர் 30ம் தேதிக்குள் அனுப்பி வையுங்கள். தங்களின் கடிதம் குறித்த ஆய்வின் விவரங்களயும் தேவைப்படுமானால் இதனுடன் இணைக்கலாம். வித்திடுவோம் விஞ்ஞான உலகின் சில மாற்றங்களுக்கு.
தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கடிதங்களின் சிந்தனையாளர்களுக்கு காந்தி நினைவு தினத்தில் பாராட்டுகளும் எதிர்பாராத ஆச்சரியங்களும் காத்திருக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு பார்வையிடுங்கள் www.gandhiworld.in |