தோற்றுவிப்பு: 1963
நிர்வகிக்கும் பொறுப்பு: சபர்மதி ஆசிரமம் பாதுகாப்பு மற்றும் நினைவு டிரஸ்ட்
இயக்குனர்: அம்ருத்பாய் கே.மோடி
குறிக்கோள்கள்:
இந்த காந்தி சம்ராக் சங்ரஹலாயா, கீழ்கண்ட செயல்கள் மூலம் காந்தியின் அறிவுரைகள், அவரின் வாழ்க்கையீன் குறிக்கோள்களை வெளிப்படுத்துகிறது. காந்தியின் எழுத்து படைப்புகள், புகைப்படங்கள், ஓவியங்கள், ஒலிப்பதிவுகள் போன்றவற்றின் சேகரிப்புகள். காந்தியக் கொள்கைகள் மற்றும் ஆராய்ச்சிகளை நடத்துவது, அவற்றிற்கு உதவுவது. ஆய்வு அறிக்கைகள் வெளியிடுவது. காந்தியச் சிந்தனைகளை மாணவர்கள் அறிந்து கொள்ளச் செய்வது. அதற்கான கண்காட்சிகளை ஏற்பாடு செய்வது.
உள்ளே: காந்திஜிக்கு வந்த, அவர் அனுப்பிய 34.065 கடிதங்கள். காந்தி பயன்படுத்திய சில பொருட்கள், அவரின் ஓவியங்கள், புகைப்படங்கள், அவரின் வாழ்க்கை மற்றும் போதனைகளைக் கொண்ட 21,500 புத்தகங்கள், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி மொழியில் வெளிவரும் 50 பத்திரிகைகள்.
சிறப்புச் செயல்பாடுகள்: காந்தியின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் புகைப்பட கலைக்கூடத்தில் 100க்கும் மேற்பட்ட பெரிதுபடுத்தப்பட்ட ஓவியங்கள். சில முக்கியமான ஆவணங்கள். காந்தியின் வாழ்க்கை வரலாறு குறித்த ஓவியங்கள்.
வெளியீடுகள்: காந்திஜியின் தனிச் செயலாளர் மகாதேவ் பாய் எழுதிய நாட்குறிப்பு பாகங்கள் 6 - 20
முகவரி: ஹரிஜன் ஆசிரமம்
அகமதாபாத், 380027
குஜராத், இந்தியா.
தொலைபேசி: 91-79-2755-7277
தொலை அச்சு: 91-79-2756-0569
இயக்குனர்: 91-79-2755-6659
வேலைநேரம்: காலை 8.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை
இ-மெயில்: : mahatma@sabarmati.org
இணையதளம்: www.gandhiashram.org.in |