| 
              
                |  |  
                | காந்தி உலக மையம் உருவாக்கத்தின் தூண்டுதல்களும் காரணங்களும் |  
                |  |  
                | அமைதி மற்றும் ஒழுங்கு அமைந்த வாழ்வே உலக உயிர்கள் அனைத்தின் விருப்பம். கடவுள் இதற்கான வழியை மனிதனிடமே கொடுத்துள்ளார். மனிதன் தன் சீரிய உழைப்பின் மூலம் மட்டுமே அமைதி மற்றும் சந்தோசத்தை அடையலாம்.
ஒரு மனிதனின் எண்ணங்களின் கட்டுப்பாடு மனிதனிடமே உள்ளது. கடவுளிடம் இல்லை. ஒருவர் தனக்காகவோ, தந்தை, தாய், தம்பி, தங்கை, கணவன், மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி என்று குடும்பத்தாருக்காகவோ, நண்பர்கள், சமூக மக்களுக்காகவோ உழைப்பைத் தர தயாராக இருக்க வேண்டும். எத்துயரத்தையும் சந்தித்து நல்வழி பிறக்க துணிந்து நிற்க வேண்டும். அவ்வாறு துணியும் போது மட்டுமே கடவுள் நமக்கு உதவுவார். அவ்வாறு துணியாமல், கடவுள் வந்து நம்மைக் காப்பாற்றுவார் என்று சுயநலமாக இருந்தால், அது நியாயமா ?
கடவுள் அத்துணிவை, வீரத்தை அனைவரிடத்திலும் கொடுத்துள்ளார். உழைக்கத் துணிந்தவன், பிறருக்கு சுமையாக விரும்பாதவன், பிறருக்கு உதவ விரும்புபவன் நற்பாதையில் செல்கிறான். இப்பிரபஞ்சத்தின் இரகசியமே ஒவ்வொரு மனித ஆன்மாவும் பூரண விடுதலை அடைவதுதான். இந்த உலகம் அதற்கான ஒரு நாடகமேடையே ஆகும்.
துணிவுடையவன், உயிர்போக்கும் நோய் வந்தாலும் தைரியத்துடன் மகிழ்வுடன் வாழ்வான். தைரியமில்லாதவன் சிறு தலைவலிக்கும் மிகுந்து துன்பம் கொண்டு வாழ்வான். தைரியமுள்ளவன் தன்னையும், பிறரையும் அழிவிலிருந்து காக்கிறான். தைரியமில்லாதவன், தீய பழக்கங்களுக்கு அடிமையாகி, அகங்காரம் கொண்டு தீயவர்கள் சேர்க்கையுடன் பிறரைத் துன்புறுத்தி வாழ முற்படுகின்றான்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது அறிவும் திறமையும் கொண்ட பலர் இருந்தும், ஒற்றுமையுடன், தைரியத்துடன் ஆங்கிலேயரை எதிர்த்து நிற்கும் தியாக உணர்வு இல்லாததால் ஆங்கிலேயருக்கு உதவி செய்து பலர் வாழ்ந்தனர்.
தன்மானமும், தைரியமும் கொண்ட சத்தியவாதிகளும், மற்றொருபுறம் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடத் தொடங்கினர். அவர்கள் ஆங்கிலேயருக்கு அடிமையாக வாழ்ந்து, நம் நாட்டு மக்களின் துயருக்கு நாமே ஆளாகாமல், தைரியத்துடன் எதிர்த்து மடிவதே மேல் என்று கருதினர்.
இந்நிலையில் பலதலைவர்கள் தோன்றினர். ஆங்கிலேயரைத் தாக்கி சேதம் விளைவித்தனர். பெரும்பாலான தலைவர்கள் இப்பணிக்காக, அறிவுடைய, உடல்வலிமைமிக்க வீரர்களை மட்டுமே கொண்டு ஆங்கிலேயரை எதிர்த்து நிற்க முடிந்தது. 
பசியால் வாடும், கல்வியறிவு என்பதே இல்லாத 95% மக்களின் நிலை மாறவே இல்லை.
காந்தியடிகள் இந்த அடைக்கலமற்ற 95% மக்களின் துயரையும், அறிவையும், தன்மானத்தையும், வீரத்தையும் உயர்த்தி, மகிழ்வுடன் வாழப் பாடுபட்டார்.
ஒரு 80 வயது கிழவியையும், உடல் பலகீனமான ஒரு நபரையும், கல்வியறிவு சிறிதும் இல்லாத மக்களையும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வழிவகுத்தார்.
அவர்களின் தைரியத்தை வளர்த்தார்.
ஆதரவற்ற விதவை தன்மானத்துடன் வாழ, வேலை வாய்ப்பு பல உருவாக்கினார் மகாத்மா காந்திஜி.
உழைப்பவன் ஒருவனே ஞானம் வளர்ந்து தைரியத்துடன் வாழ முடியும். காந்திஜி இந்த மாபெரும் உண்மையை உணர்ந்திருந்தார்.
எனவே ஆயிரக்கணக்கான மக்கள் உழைத்திட, கைராட்டையை ஊக்குவித்தார். தனது உயிர் மூச்சாக கைராட்டையைக் கருதினார். ஆங்கிலேய துணிகளையும், தொழிற்சாலைகளில் மின்சார உதவியுடன் உருவாக்கப்பட்ட துணிகளையும் முற்றிலும் புறக்கணித்தார்.
காந்திஜி கூறுவார், 'ஒவ்வொரு கைராட்டை சுற்றிலும், நான் என் நாட்டு மக்களின் தன்மானத்தையும் வீரத்தையும் பெருக்குகிறேன். '
பல லட்சம் மக்களின் தைரியத்திற்கு வித்திட்ட காந்திஜி 'மகாத்மா' என்று எல்லாராலும் கருதப்பட்டார். 
காந்திஜியின் பணிகளை இன்றும் தொடர்ந்து செய்து பெருமை அடைவதற்காகவே காந்தி உலக மையம் உருவாக்கப்பட்டுள்ளது. அவர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்து செய்வதே நாம் அவருக்குச் செய்யும் உண்மையான மரியாதை ஆகும். 
 |  
                |  |  
                | நோக்கங்கள்:- |  
                |  |  
                | மேலோங்கிய உதவும் உணர்வு, மாபெரும் தடைகளை மீறி சாதிக்கும் துணிவு, சிக்கல்களை முடிவுக்குக் கொண்டு வரும் திறமை, சரியானதைச் செய்யும் அறிவு ஆகியவற்றைக் கொண்ட மனித சமுதாயத்தை நிரந்தரமாக இப்புவியில் அமைத்து, மாபெரும் துன்பமாகிய பயத்திலிருந்தும், நோய் போன்ற இம்சையிலிருந்தும் மக்களை விடுவித்து, அமைதி மற்றும் மகிழ்ச்சியை இவ்வுலகில் நிலைத்திடச் செய்வதே காந்தி உலக மையத்தின் முதன்மைநோக்கமாகும். |  
                |  |  
                | 
                  
                    |  | மகாத்மா காந்திஜியின் வாழ்வு மற்றும் கொள்கைகளைப் பற்றி மக்களிடம் எடுத்துரைக்கவும், கிராம வளர்ச்சி, இயற்கையைப் பேணிக் காத்தல், கைவினைப் பொருட்கள், கைராட்டை, இயந்திரம் அல்லாத உடல் உழைப்பின் மூலம் செய்யும் எல்லாத் தொழில்களையும் வளர்ப்பது. |  
                    |  |  |  
                    |  | அந்நியப் பொருட்களின் உபயோகத்தைக் குறைத்து, இந்திய நாட்டில் தோன்றிய சித்த மருத்துவம், யோகா, இயற்கை விவசாயம் போன்ற பாரத த்தின் தொழில் திறமைகளை வளர்ப்பது |  
                    |  |  |  
                    |  | தனிமனிதனின் சிறப்பை அடையாளம் காண உதவுவதும், தைரியம், வீரம் மற்றும் மகிழ்ச்சியைப் பெருக்குவது |  
                    |  |  |  
                    |  | அன்பு மற்றும் அகிம்சையை மனிதனின் எல்லா செயல்களிலும், பிரதிபலிக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வதும் காந்தி உலக மையத்தின் பணிகளாகும். |  |  
                |  |  
                |  |  
                | காந்தி உலக மையத்தின் வழிமுறைகள்: |  
                |  |  
                | 
                  
                    |  | இறைவனும் உயிர் தோன்றலும் |  
                    |  |  |  
                    |  | உயிர்களைக் காத்தலும், உதவுதலும் |  
                    |  |  |  
                    |  | தர்மம், அறம் சார்ந்த கல்வி, தொழில், அரசியல் ஆகியவற்றில் சமுதாய முன்னேற்றம் |  
                    |  |  |  
                    |  | சுற்றுச்சூழல் பாதுகாப்பு |  
                    |  |  |  
                    |  | சைவம், உயிர்களைக் கொல்லாதிருத்தல் |  
                    |  |  |  
                    |  | உலக சகோதரத்துவம் - ஒழுக்கமே வழி |  
                    |  |  |  
                    |  | 
                      
                        |  | தீண்டாமை |  
                        |  |  |  
                        |  | ஆண், பெண் வேறுபாடு |  
                        |  |  |  
                        |  | மத ஒற்றுமை |  
                        |  |  |  
                        |  | ஏழை, செல்வந்தர் வேறுபாடு |  
                        |  |  |  
                        |  | தொழிலாளி, முதலாளி வேறுபாடு |  
                        |  |  |  
                        |  | படித்தவன், படிக்காதவன் வேறுபாடு |  
                        |  | ஆகிய ஆறு சமூக கொடுமைகளை ஒழித்தல், எல்லாவற்றிலும் சமநோக்கும், பொது நோக்கும் ஏற்படுத்துதல் |  
                        |  |  |  
                        |  | கிராம வளர்ச்சி |  
                        |  |  |  
                        |  | கலாச்சாரம் பேணிக் காத்தல் |  
                        |  |  |  
                        |  | அறிவியல் வளர்ச்சி |  
                        |  |  |  
                        |  | இயற்கை வாழ்வு |  
                        |  |  |  |  |  
                |  |  
                | பொது மக்கள் இந்த வழிமுறைகளை அறிவதன் மூலம், தங்கள் வாழ்வின் போக்கைப் பரீசீலித்து பல மாற்றங்களை மேற்கொள்ள முடியும். அத்தகைய ஞானத்தையும், பாதையையும் வழிவகுப்பதிலேயே காந்தி உலகமைத்தின் வெற்றி அடங்கியுள்ளது. |  
                |  |  
                | மக்களுக்கு ஒரு வேண்டுகோள்: |  
                |  |  
                | மக்கள் தங்கள் அறிவையும், கருத்தையும், அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டு எதிர்கால மக்களின் நல்வாழ்விற்கு வழிவகுக்க ஒரு கருவியாக GWF அமைந்துள்ளது. |  
                |  |  
                | மக்கள்  GWF வழிமுறைகளைப் பயன்படுத்தி, |  
                |  |  
                | 
                  
                    |  | பகிர்தல் |  
                    |  |  |  
                    |  | பகிர்தல் |  
                    |  |  |  
                    |  | ஒற்றுமைஉணர்வோடுவாழ்தல் |  
                    |  |  |  |  
                |  |  
                | ஆகிய செயல்களில் ஈடுபட்டு மனித சமுதாயமும், மனித நேயமும் வளர வழி வகுப்போமாக. |  
                |  |  
                |  |  
                |  |  
                |  |  
                |  |  |  | 
              
                |  |  
                | 
                    
                      நான் முழுமையாக நம்புகின்ற,  உணருகின்ற காந்தியக் கோட்பாடுகள், அன்பும் அகிம்சையும். இந்த இரண்டு கோட்பாடுகள்தாம்,  உலகில் இப்பொழுது உள்ள - இனி வரப்போகின்ற அனைத்து தீமைகளுக்கும் மாற்று |  
                |  |  
                | மேலும் படிக்க... |  
                |  |  
                |  |  |