|
உட்கருத்து / நன்றி / பொது |
|
|
|
உட்கருத்து (concept): |
|
|
|
இந்த வளைதளத்தில் இடம்பெற்றுள்ள நினைவுப்பொருட்கள் அஞ்சல் தலைகள், நாணயங்கள், ரூபாய் தாள்கள். டோக்கன், புகைப்படங்கள் மற்றும் பல...) பல்வேறு நாடுகளில் காந்திஜியை பெருமைப்படுத்துவதற்காகவும் நினைவுகூறுவதற்காகவும் வெளியிடப்பட்டவை.
இந்த நினைவுப்பொருட்களின் மூலமாக அமைதியின் மறுவுருவமாகப் போற்றப்படும் நமது மகாத்மா காந்திஜியின் பெருமைக்குப் பெருமை சேர்ப்பதற்காகவும், கல்விப் பயன்பாட்டிற்காகவும் மட்டுமே தவிர எந்த ஒரு வியாபார நோக்கத்திற்காகவுமல்ல. |
|
|
|
இதன் மூலம் காந்திய சிந்தனைகளான அன்பு, அகிம்சை, சமத்துவம், உண்மை மற்றும் சகோதரத்துவம் ஆகியவைகளை நமது தலைமுறையினர் மட்டுமில்லாது இனிவரும் தலைமுறையினர் உணர்ந்து கொள்ளவும் அதைப் பின்பற்றுவதற்கான ஒரு சூழலையும், ஆர்வத்தையும் ஏற்படுத்துதல். |
|
|
|
காந்தியடிகளைப் பற்றிய தகவல்கள், செய்திகள், நினைவுப்பொருட்கள் என்று பல வகையான செய்திகள் உலகமெங்கும் பரவிக் கிடக்கின்றன. அவைகளின் அனைத்து தகவல்களும் இயன்றவரை ஒருசேர அனைவருக்கும் கிடைக்கவும், அறியவும் செய்வது. இதுபோன்ற செய்திகள் அனைத்துத் தரப்பு மக்களிடத்தே காந்தியடிகள் மீது கொண்டுள்ள அபிப்ராயத்தையும் ஆர்வத்தையும் மேலும் அதிகரிக்கும். காந்தியைப் பற்றிய மேற்காண்ட செய்திகள் கல்வியாக போதிக்கப்படும்போது பள்ளிக் குழந்தைகளின் மனதில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். மொத்தத்தில் காந்தியடிகளைப் பற்றிய அனைத்துச் செய்திகளும் இயன்றவரை அனைவருக்கும் கிடைக்க வழி செய்வது |
|
|
|
இந்த வளைதளத்தில் இடம்பெற்றுளள் தகவல்கள், செய்திகளின் சதவிகிதம் மிகவும் குறைவு. இதில் இடம்பெறாத பல செய்திகள் பார்வையாளர்களாகிய தங்களிடம் நிறைய இருக்கலாம். அத்தகைய தகவல்கள் (அஞ்சல் தலை, நாணயம், ரூபாய் தாள்கள், டோக்கன், புகைப்படங்கள், பழைய செய்தித்தாள்கள் மற்றும் வேறு வகையான நினைவுப்பொருட்கள்...) எங்களுக்குத் தெரிவிக்கும் பட்சத்தில் அத்தகைய தகவல்கள் மேலும் இந்த வலைதளத்தின் வளர்ச்சிக்குப் பேறுதவியாக இருக்கும். |
|
|
|
காந்திஜி எப்போதும் இல்லாததைவிட தற்போது உலகிற்கு அதிகமாகத் தேவைப்படுகிறார். தற்போது உலகில் நிலவிக் கொண்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையில் அனைவரும், குறிப்பாக இளைய தலைமுறையினர் காந்திய சிந்தனைகளைப் பின்பற்றினாலே உலகம் அமைதிப்பூங்காவாக மாறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இத்தகைய காந்திய சிந்தனைகளைப் பிரபலப்படுத்தும் நோக்குடன் இங்கு இடம்பெற்றுள்ள நினைவுப்பொருட்களைக் கொண்டு, ஆங்காங்கே கண்காட்சிகள் நடத்தி, அதன் வாயிலாக ஆரம்ப காலங்களிலேயே பள்ளிக் குழந்தைகளின் மனதில் காந்திய கோட்பாடுகளை விதைப்பது. இதன் மூலம் அமைதியான சமுதாயம் வலுப்பட முயற்சிப்பது. |
|
|
|
நன்றிகளனைத்தும்... (Credit): |
|
|
|
எனது அனைத்துச் செயல்பாடுகளுக்கும் முயற்சிகளுக்கும் மிகவும் உறுதுணையாக இருந்துவரும் எனது குடும்பத்தினருக்கும்/ அலுவலக பணிகளுக்கிடையே எனது முயற்சிகளுக்கு ஊன்றுகோலாக இருந்துவரும் எனது நிறுவனத்திற்கும் அன்பு உள்ளங்களுக்கும் / எனது வெற்றியைத் தனது வெற்றியாகப் பாவித்து மகிழும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் / எனது சேகரிப்பிற்கு பேருதவியாக இருந்துவரும் அனைத்து ( அஞ்சல் தலை, நாணயம் மற்றும் பல...) விற்பனையாளர்களுக்கும் சேகரிப்பாளர்களுக்கும் / எனது சேகரிப்பை உலகறியச் செய்த பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எனது அன்பு கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். |
|
|
|
பொது |
|
|
|
வளைதளத்தில் இடம்பெற்றுள்ள அஞ்சல் தலைகள், நாணயங்கள், ரூபாய் தாள்கள், டோக்கன்கள், புகைப்படங்கள், பழைய செய்தித்தாள்கள், தொலைபேசி அட்டை, சிறப்பு உறை மற்றும் வேறு வகையான நினைவுப்பொருட்கள் அனைத்தும் எனது சொந்தச் சேகரிப்பில் உள்ளவைகள் ஆகும்
(சிலவற்றைத் தவிர) |
|
|
|
எனது முயற்சியில் ஏதேனும் தவறுகள், குறைகள் இருப்பின் தயவுகூர்ந்து எனக்கு தெரியப்படுத்துங்கள். மற்றும் தங்களது மதிப்புமிக்க கருத்துகளை மற்றும் அறிவுரைகளை, உங்கள் கருத்து (ஊஞுஞுஞீஞச்ஞிடு) பகுதியில் பதிவு செய்ய மறந்துவிடாதீர். அவைகள் இந்த வலைதளத்தின் வளர்ச்சிக்குப் பேருதவியாக இருக்கும். மேலும், வலைதளத்தில் புதிய தகவல்கள் தொடர்ச்சியாக பதிவு செய்யப்படுவதால் வலைதளத்தைத் தொடர்ந்து பார்க்கவும். |
|
|
|
பல்வேறு இடங்களில் பெறப்பட்டு இங்கு இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் யாவும் காந்திஜியை பெருமைப்படுத்தவதற்காகவும் மக்கள் பார்வைக்காகவும் மற்றும் கல்விப் பயன்பாட்டிற்காகவும் மட்டுமே அன்றி, எந்த ஒரு வியாபார நோக்கத்திற்கும் அல்ல. |
|
|
|
தங்கள் பள்ளியிலோ ஊரிலோ காந்திய சிந்தனைகளைப் பிரபலப்படுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்படும் கண்காட்சிகளுக்கு இங்கு இடம்பெற்றுள்ள எனது சேகரிப்புகளைக் கொண்டு கண்காட்சிகளை மிக்க மகிழ்ச்சியுடன் நடத்தித்தர தயாராக உள்ளேன். (எனது அலுவலகக் கால நேரங்களுக்குட்பட்டு) இதை நான் மிகவும் பெருமையாகக் கருதுவேன். |
|
|
நான் முழுமையாக நம்புகின்ற, உணருகின்ற காந்தியக் கோட்பாடுகள், அன்பும் அகிம்சையும். இந்த இரண்டு கோட்பாடுகள்தாம், உலகில் இப்பொழுது உள்ள - இனி வரப்போகின்ற அனைத்து தீமைகளுக்கும் மாற்று
|
|
மேலும் படிக்க... |
|
|
|