நான் பெற விரும்பும் ஒரே நல்லொழுக்கம் உண்மையும் அகிம்சையும்தான். அதிமனித சக்திகள் எல்லாம் எனக்கு வேண்டாம். வேறு ஒன்றும் வேண்டாம். என் சக மனிதர்களைப் போலவே என் எலும்புகளை மூடியிருக்கும் நோஞ்சான் எலும்புகளையே கொண்டிருக்கிறேன். ஆகையால் அவர்களைப் போலவே நானும் தவறு செய்ய நேரிடுபவன்தான். அவர்களிடம் பல நேர்மைக் குறைவான அம்சங்கள் இருந்தாலும் அவர்களுக்கும் இறைவனின் அருள் கிடைக்கவே செய்யும்.
கொஞ்சம் அடக்கம், ஒருவனின் நடத்தை குறித்த சிறிதளவு அவமரியாதை மற்றும் கொஞ்சமாவது ஏற்றுக் கொள்ளும் திறன் இருப்பதுதான். மனிதத்தன்மையின் முதன்மையான பண்பே
அடக்கம்தான் கொடூர மிருகங்களில் இருந்து மனிதனை தனித்துக் காட்டுகிறது. சுதந்திரமாக இருப்பது அவனின் தனியுரிமை. அதுபோல ஒருவருக்கொருவர் சார்ந்திரப்பதும் அவன் கடமையே. அகங்காரம் பிடித்தவன்தான், தான் சுதந்திரமான மனிதன் என்று கூறுவான். பிறர் எந்த விதத்திலாவது பிறருடன் இணைந்தே இருப்பார்கள்.
Copyright @ 2012. Gandhi World Foundation. All Rights Reserved