ஆனந்தவனம் ஆசிரமம்
பாபா ஆம்தே ஆசிரமம்
ஆனந்தவனம் ஆசிரமம், தனியொரு மனிதனின் இமாலயச் சாதனையின் எடுத்துக்காட்டு. முரளிதர் தேவிதாஸ் ஆம்தே அல்லது பாபா ஆம்தே என்று பரவலாக அழைக்கப்பட்ட ஒரு தியாக சீலரின் எண்ணத்தில் உதித்த உன்னதத் திட்டம்தான் இந்த ஆசிரமம். பிறரால் புறக்கணிக்கப்பட்ட தொழுநோயாளிகளுக்காக கட்டாந்தரையாக கிடந்த இந்த இடத்தை சோலை வனமாக ஆக்கியுள்ளதுடன், அவர்களையும் பராமரித்து, அவர்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்க உதவியவர் பாபா ஆம்தே. உதவி என்று வருபவர்களுக்கு எந்த நேரமும் உதவி செய்யக் காத்திருக்கும் இந்த ஆசிரமத்தை, பாபா ஆம்தேவின் மகன் டாக்டர் விகாஸ் ஆம்தே, தன் தந்தையின் வழியைப் பின்பற்றி நடத்தி வருகிறார்.
பாபா ஆம்தேவின் சீரிய சமூகப்பணியைப் பாராட்டி அவருக்கு பல தேசிய சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 1985ம் ஆண்டு ரோமான் மகசேசே விருதும், 1999ம் ஆண்டு காந்தி அமைதி விருதும் பெற்றுள்ளார்.
மேலும் தகவல்களுக்கு:
ஆனந்தவனம்,
டாக்டர்.விகாஸ் ஆம்தே,
டாஹ், வரோரா மாவட்டம், சந்திரபூர்,
மகாராஷ்டிரா மாநிலம், 442 914.
தொலைபேசி:07176 82034, - 82425
தொலைநகல்: 07176-82034,
www.fearlessminds.org
Email: fearlessminds@fearlessminds.org
|