Facebook
Peace 2020    |   Save Nature 4 Future   |   Gandhi Memoribila on October 2nd 2015   |      We 2 Ours 2      |    Chennai walkathon 2016
மகாத்மாவைப் பற்றிய சேகரிப்புகள்  
அஞ்சல் தலைகள்
நாணயங்கள்
ரூபாய் தாள்கள்
டோக்கன்கள்(அடையாள பொருட்கள்)
அஞ்சல் அட்டைகள்
சிறப்பு உறை & முத்திரை
தொலைபேசி அட்டை
பிறந்த தேதி ரூபாய் தாள்கள்
செய்தித்தாள்கள்
கையெழுத்து
புத்தகங்கள் மற்றும் குறுந்தகடுகள்
புகைப்படங்கள்
சிலைகள்
வீடியோ மற்றும் குரல்
சிறுகதைகள்
ஓவியங்கள் மற்றும் கார்டூன்கள்
விளக்கக் காட்சிகள்
காந்திஜியின் கோயில்
அருங்கட்சியங்கள் மற்றும் ஆசிரமங்கள்
வாழ்கை வரலாறு
காலவரிசை
பாராட்டுகள்
பொன்மொழிகள்
சிறிதளவு அறியப்பட்ட உண்மைகள்
கடைசி 24 மணிநேரம்
மற்றவை
பயன்மிக்க இணைப்புகள்

 

 
 
   
  பாண்டிச்சேரியில் கடந்த 17-4-2013 அன்று காந்தி உலக மையத்தின் நிறுவனர் "காந்திய செம்மல்" திரு.M.L.ராஜேஷ் அவர்களுக்கு விருது வழங்கும் விழாவும் அதனை தொடர்ந்து 18-4-2013 அன்று காந்தி நினைவு கண்காட்சியும் நடைபெற்றது.
   
 

காந்தி உலக மையத்தின் பல்வேறு சாதனைகளை கௌரவிக்கும் விதமாக பாண்டிச்சேரியில் அமைந்துள்ள புதுவை தமிழ் சங்கத்தில் ASSIST WORLD RECORDS AND RESEARCH FOUNDATION கடந்த 17-4-2013 அன்று விருது வழங்கும் விழாவையும் அதனை தொடர்ந்து 18-4-2013 அன்று காந்தி நினைவு கண்காட்சியும் நடைபெற்றது.

எங்கள் பல்வேறு முயற்சிகளை மேலும் மெருகேற்றும் விதமாக காந்தி உலக மையத்தின் நிறுவனர் "காந்திய செம்மல்" திரு.M.L.ராஜேஷ் அவர்களுக்கு ASSIST WORLD RECORDS AND RESEARCH FOUNDATION கடந்த மாதம் ஏப்ரல் 17,18 தேதிகளில் பாண்டிச்சேரியில் அமைந்துள்ள புதுவை தமிழ் சங்கத்தில் பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்தது.

இதில் ASSIST WORLD RECORDS AND RESEARCH FOUNDATION கௌரவ விருது,அதிகப்படியான காந்தி நினைவுப்பொருட்களின் சேகரிப்பு, காந்திக்கான முதல் தமிழ் வலைத்தளம் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 14 விருதுகளில் அவருக்கு வழங்கப்பட்டது.

இந்த விருது வழங்கும் விழாவில் முதல் நாள் (17-4-2013) அன்று மாண்புமிகு பாண்டிச்சேரி முதலமைச்சர் திரு.N.ரங்கசாமி,கொறடா திரு.G .நேரு, முதல்வர் மகாத்மா திரைப்பட கதாநாயகர் திரு.காந்தி கனகராஜ் மற்றும் காந்தியின் தனிச்செயலராக பணியாற்றிய(1944 முதல் 1948 வரை) திரு.V .கல்யாணம் அவர்கள் உட்பட பல்வேறு தலைவர்களும்,சமூக ஆர்வலர்களும் பங்கு கொண்டனர்.

இதில் ASSIST WORLD RECORDS AND RESEARCH FOUNDATION கௌரவ விருது AWRRF நிறுவனர் திரு.R .ராஜேந்திரன் தலைமையில் மாண்புமிகு பாண்டிச்சேரி முதலமைச்சர் திரு.N.ரங்கசாமி அவர்களின் பொற்கரங்களால் காந்தி உலக மையத்தின் நிறுவனர் "காந்திய செம்மல்" திரு.M.L.ராஜேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் காந்தி உலக மையத்தின் தன்னார்வ தொண்டர்களுக்கும் தன் பொற்கரங்களினால் நினைவு பரிசினை வழங்கி சிறப்பித்தார்.இதனை தொடர்ந்து 18-4-2013 அன்று காந்தியின் நினைவு கண்காட்சியும்,விருது வழங்கும் விழாவும் நடைபெற்றது. இதில் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் திரு.V .சபாபதி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.P .ராஜவேலு உள்ளிட்ட தலைவர்களும்,சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

சட்டப்பேரவை தலைவரும்,சுற்றுலாத்துறை அமைச்சரும் மற்ற 13 விருதுகளையும் தங்கள் பொற்கரங்களால் காந்தி உலக மையத்தின் நிறுவனர் "காந்திய செம்மல்" திரு.M.L.ராஜேஷ் அவர்களுக்கு வழங்கி கௌரவித்தனர்.இதனை தொடர்ந்து காந்தி உலக மையத்தின் தன்னார்வ தொண்டர்களுக்கு சான்றிதழ்கள் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களின் பொற்கரங்களினால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திய AWRRF நிறுவனர் திரு.R .ராஜேந்திரன் அவர்களுக்கும் மற்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.

   
   
 
View Photo Gallery View Press Releases View Video
Award receiving function Pondicherry
Gandhiya Chemmal Press Release
 
  Copyright @ 2012. Gandhi World Foundation. All Rights Reserved
hit counters
Designed & Maintained by
Clutch Integrated Technologies, India