மனிதர்கள் எல்லோருமே ஒன்றுதான் என்ற நிலையில், அந்த மனிதக்கூட்டத்தில் உள்ள ஒருவர் தன்னைத்தானே உயர்ந்தவராகவும் மற்றவர்கள் தங்களைத் தாங்களே கீழானவர்களாகவும் கருதுவது எதனால் என்று எனக்குப் புரிவதில்லை.
ஆணின் துணையாக விளங்கும் பெண், ஆணைப் போன்றே எல்லா வித திறமைகளையும் கொண்டுள்ளாள். மனிதனின் ஒவ்வொரு சின்னஞ்சிறு விஷயங்களிலும் பங்கேற்க அவளுக்கு உரிமை உண்டு. அவனுடன் இணைந்து, சுதந்தரம் மற்றும் விடுதலையில் சமஉரிமை அவளுக்கும் உண்டு.
நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள் தவிர்த்து எல்லோரும் சமம்தான் என்று நான் நம்புகிறேன்.
சாதாரண அறிவு என்பது, அறியப்பட்ட விகிதாச்சார அறிவே.
மென்மைத்தன்மை, சுய தியாகம், பரோபகாரம் போன்றவை எந்த ஒரு தனிப்பட்ட மதம் அல்லது இனத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல.
Copyright @ 2012. Gandhi World Foundation. All Rights Reserved