உலகில் வன்முறையை ஏற்படுத்தும் ஏழு முக்கியமான அறிவுஏற்படுத்தும் பெருந்தவறுகள்:
1. உழைக்காமல் சேர்ந்த பணம்.
2. மனசாட்சியில்லாத மகிழ்ச்சி.
3. நன்னடத்தை இல்லாத அறிவு.
4. நேர்மையில்லாத வணிகம்
5. மனிதாபிமானம் இல்லாத அறிவியல்.
6. தியாகம் இல்லாத மதம்.
7. கொள்கை இல்லாத அரசியல்..
மனிதனும் அவன் செயலும் இரண்டும் வெவ்வேறானவை. நற்செயல் பாராட்டைப் பெறும். நயவஞ்சகச் செயல் கண்டவத்திற்குத்தான் ஆகும். அது, நற்செயலாக இருந்தாலும் தீய செயலாக இருந்தாலும் அதைச் செய்பவருக்கு அதன் தன்மைப் பொறுத்து மரியாதையோ பரிதாபமோ கிடைக்கும். பாவச் செயலை வெறுங்கள். பாவம் செய்பவர்களை அல்ல. இதைப் புரிந்து கொள்வது எளிது. பழக்கத்தில் கொண்டுவருவதுதான் கஷ்டம். அதனால்தான் வெறுப்பின் விஷம் உலகம் முழுவதும் பரவுகிறது.
தீயவற்றை அறிந்து அதை விலக்க நினைப்பது மட்டும் போதாது. அத்தகைய தீயவனற்றை விலக்குவதற்காக நாம் முழுஅளவில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளோம் என்ற விருப்பத்தை உறுதிசெய்ய வேண்டும்.
ஒரு மனிதரின் குறிக்கோளில் எந்த கணத்தில் சந்தேகம் ஏற்பட்டுவிடுகிறதோ அந்த கணமே எல்லாமே கறைபட்டுவிடும்.
மனதில் தீயவற்றை சிந்திப்பவன், தீய செயல்களைச் செய்பவன் போன்றவனே. சிந்திப்பவனை விட செய்பவன் மோசமானவன் அல்ல
Copyright @ 2012. Gandhi World Foundation. All Rights Reserved