துன்பத்தின்போது உதவுவதுதான் நட்பின் அடையாளம். அந்த உதவியும் நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும். பரிசீலனைகளுடன்கூடிய கூட்டுறவு நட்பல்ல. அது, ஒப்பந்தம் போன்றது. நிபந்தனையுடன் கூடிய கூட்டுறவு, கலப்படம் செய்யப்பட்ட சிமென்ட் போன்றது. அது ஒட்டாது.
ஒருவரின் நண்பருடன் நட்பு பாராட்டுவது எளிது. யார் உன்னை எதிரியாக நினைக்கிறாரோ அவரை நண்பராக நீ பார்ப்பதுதான் உண்மையான மதத்தின் சாராம்சம். மற்றவை எல்லாம் வியாபாரம் போன்றதுதான்.
எல்லா விதத்திலும் ஒத்துப்போவது நட்பல்ல. இருவருக்கிடையே கருத்து மோதல் ஏற்படும் போதிலும் அதை தாங்கிக் கொள்வதுதான் உண்மையான நட்பு
Copyright @ 2012. Gandhi World Foundation. All Rights Reserved