இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில், இந்த ஆகாகான் அரண்மனை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேசிய நினைவிடம். வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தை காந்தி அறிவித்ததும், அவர், மனைவி கஸ்துõரி பாய், தனிச் செயலாளர் மகாதேவ்பாய் தேசாய், சரோஜினி நாயுடு மற்றும் சில தேசியத் தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டு, இந்த மாளிகையில் அடைக்கப்பட்டனர். 1942 ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 1944 மே 6ம் தேதி வரை இவர்கள் இங்கே சிறை வைக்கப்பட்டிருந்த நேரத்தில்தான், கஸ்துõரிபாய் காந்தி மற்றும் மகாதேவ்பாய் தேசாய் இறந்தனர். அவர்களின் சமாதி இங்கே உள்ளது.
தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த காந்தி நினைவிடமாக பராமரிக்கப்படும் இந்த அரண்மனையை ஆண்டுக்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்து பார்த்துச் செல்கின்றனர். இந்த இடத்தில் கஸ்துõரிபாய் காந்தி மறைந்ததும். இந்த இடத்தை பெண் விடுதலைக்கான இடமாக இதை மாற்ற வேண்டும் என்று காந்திஜி விரும்பினார். காந்திஜியின் நுõற்றாண்டு விழாவின்போது, அவரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இந்த பிரம்மாண்டமான அரண்மனையை இளவரசர் கரிம் ஆகாகான், நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
1972ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, இங்கு காந்தி அருங்காட்சியகம் மற்றும் படங்களைக் கொண்ட கலைக்கூடம் துவக்கப்பட்டது. 1980ம் ஆண்டு, இந்த அருங்காட்சியகத்தின் சமாதிகள் மறறும் அரண்மனை வளாகம் முழுவதும், புதுடில்லியில் உள்ள தேசிய காந்தி சமராக் சமதியின் கட்டுப்பாட்டிற்குச் சென்றது. கஸ்துõரி பாய் காந்தியின் நினைவாக, இந்த இடத்தில் தேசிய பெண்கள் வளர்ச்சி கல்வி நிறுவனம், 1980ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இங்கு பெண்களுக்கு பல்வேறு துறைகளின் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆண்டு முழுவதும் இந்த இடத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம், ஆகாகான் அரண்மனை, காந்திஜி மற்றும் கஸ்துõரிபாய் காந்தியின் பெருமையைப் போற்றும் நினைவிடமாக உள்ளது.
மும்பையிலிருந்து ஆகாகான் அரண்மனைக்குச் செல்வது எப்படி?
மும்பையிலிருந்து புனே 150 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த இடத்திற்கு, விமானம்/ ரயில்/பஸ் மூலம் சென்றடையலாம்.
முகவரி:
ஆகாகான் அரண்மனை,
நாகர் சாலை,
புனே. 411006.
மகாராஷ்டிரா, இந்தியா.
தொலைபேசி: 91-20-2668 0250
தொலை அச்சு: 91-20-2661-2700
இ-மெயில்: gandhi_memorial@vsnl.net
|