உலகத் தலைவர்கள் |
அமெரிக்கா, ஐரோப்பியா, பிரிட்டன், பாகிஸ்தான் |
பிரிட்டன் மன்னர்  |
சரிசெய்ய முடியாத இழப்பு
காந்தியின் இறப்பு எனக்கும் இளவரசிக்கும் ஆழ்ந்த அதிர்ச்சியை அளித்தது. சரிசெய்ய முடியாத இழப்பைச் சந்தித்துள்ள இந்திய மக்களுக்கு, ஏன் இந்த உலக மக்களுக்கும்தான், எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பீர்களா? |
பிரிட்டன் மவுன்ட்பேட்டன் பிரபு 
|
உயிர், அன்பு மற்றும் உண்மையால் ஆனது
காந்திஜியின் இழப்பு, இந்த மனித குலத்திற்கே இழப்புதான். ஆழ்ந்த துக்கத்தில் இந்தியா ஆழ்ந்திருந்தபோதிலும், இந்த உலகிற்கு அழிக்க முடியாத புகழைச் சேர்த்த காந்தியின் உயரிய கொள்கைகள் நம்மிடம்தான் உள்ளன. அவற்றைப் பின்பற்றி நாட்டை வலுப்படுத்துவோம்.
அவரைப் போன்ற ஒரு மனிதரை இந்த உலகம் இனிமேல் காண்பது அரிது.
இந்த சோகமான தருணத்திலும் ஒரு நல்ல விஷயத்தை நாம் நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம். குழப்பங்களும், சண்டைகளும் நிறைந்த இந்த உலகத்தை வழிநடத்த காந்தி மகானின் கொள்கைளான உண்மை, சகிப்புத்தன்மை, அன்பு போன்றவற்றை நாம் பின்பற்றி உலகத்தை அமைதியாக்குவோம். |
பிரிட்டன் மவுன்ட்பேட்டன் பிரபு மனைவி 
|
இது ஒரு சர்வதேச சோகம். மகாத்மா காந்தியின் இறப்பு, இந்த தேசத்தின் சோகம் மட்டுமல்ல, சர்வதேச சோகம். என் இருதயம் சோகத்தில் நிரம்பியுள்ளது. அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. காந்திஜியின் மறைவு, உலகத்திற்கே நஷ்டம். அவர் ஒரு சிறந்த தலைவர். இனிமேல் நமது உயர்ந்த கடமை என்னவென்றால் அவர் விட்டுச் சென்ற பணியைத் தொடர்வதும், அவர் அறிவுரைகளைப் பின்பற்றி நடப்பதும்தான். |
பிரிட்டன் பெர்னார்ட் ஷா 
|
நல்லவனாக இருப்பது ஆபத்தானது
காந்தியின் இறப்பு, மிகவும் நல்லவனாக இருப்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதைக் காட்டியுள்ளது. |
பிரான்ஸ் வான் சாவீலர், ெல்ஜியம் நாட்டின் ேம்பர் ஆப் டெபுட்டீஸ் பையின் தலைவர் |
கடவுள் நம்பிக்கை மற்றும் நன்னெறிகளில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு, காந்திஜியின் இறப்பு மிகுந்த பாதிப்பு. அவரின் இந்த சோகமயமான இறப்பு, மனித குலம் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற கனவை நனவாக்கட்டும். |
ஐரோப்பா செக்கோஸ்லோவேகியா
டாக்டர் எட்வர்ட் பீன்ஸ் |
இந்தியாவின் சுதந்திரம் மற்றும் விடுதலையின் பிரதிநிதி காந்தி |
பிரான்ஸ் குடியரசு கவுன்சில் ீர்மானம்  |
இந்தியாவின் இறைதுõதர், எல்லாவிதமானவர்களாலும் ஈர்க்கப்பட்டவர், விடுதலைக்காகவும் நீதிக்காகவும் போராடிய காந்திஜியின் கொள்கைகளான வன்முறையற்ற சமுதாயம் ஏற்படுத்துவோம். |
ஜெர்மனி டாக்டர். ுர்ட் சூமேக்கர், ிஎஸ்டி தலைவர், |
மனிதகுலத்திற்கே உதாரணமாகத் திகழ்ந்த காந்திஜி நம்முடனேயே உள்ளார். அவரின் ஆளுமை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது அதிகரித்துள்ளது. |
இத்தாலி போப் 12ம் பயஸ், வாடிகன் ிட்டி.  |
லட்சக்கணக்கான இந்தியர்களின் ஆன்மீகத் தலைவர் காந்திஜி. அவர் எப்போதுமே உலக அமைதிக்காக பாடுபட்டார். |
சுவிட்சர்லாந்து
அதிபர்  |
அமைதியின் இளவரசராகத் திகழ்ந்த காந்திஜியின் இழப்பு, மனித குலத்திற்கே இழப்பு. |
அமெரிக்கா அல்பெர்ட் ன்ஸ்டீன்  |
மனித குலத்திற்கு சிறப்பான எதிர்காலம் வேண்டும் என்று விரும்புபவர்கள், மகாத்மாவின் இந்த சோகமான இறப்பிற்கு வருத்தம் அடைவார்கள். அவரின் நாட்டில் மதமோதல்கள், வன்முறைகள் நடந்த காலத்திலும் அவர் தனக்கு பாதுகாப்பு வேண்டாம் என்று ஒதுக்கியவர். வன்முறைக்கு வன்முறை தீர்வல்ல என்பதைக் கொள்கையாக கடைபிடித்த அவரின் கூட்டங்களுக்கு ஏராளமானோர் கூடினர். அங்கெல்லாம் சாதாரண சூழ்ச்சி நிறைந்த அரசியல் பேசப்படவில்லை. ஒழுக்கம்தான் வாழ்வில் உயரியது என்பதை வாழ்ந்துக் காட்டினார் காந்திஜி.
உலகம் முழுவதும் தற்போதுள்ள சூழ்நிலையில், காந்திஜியின் போதனைகள் அதிகமாகத் தேவைப்படுகிறது. அரசியலில் நேர்மையைப் புகுத்திய ஒரே தலைவர் காந்திஜிதான். இந்த நிலையைத்தான் நாம் அனைவரும் அடைய வேண்டும். |
அமெரிக்கா அதிபர் ட்ரூமேன் 
|
சர்வதேச தகுதிகள் வாய்ந்த மிகச் சிறந்த இந்திய தேசியத் தலைவர் காந்திஜி. அவரின் அறிவுரைகளும் போதனைகளும் லட்சக்கணக்கானோரை ஈர்த்தது. ஒரு ஆசிரியராகவும் ஒரு தலைவராகவும் அவர் போதித்த கருத்துகள் உலகம் முழுவதும் பின்பற்றத்தக்கவை. அவரின் இறப்பு, இந்தியா மட்டுமின்றி உலகிற்கே இழப்புதான். சகோதரத்துவம் மற்றும் அமைதிக்காக பாடுபட்ட மற்றொரு பெரிய ஆன்மா இறந்துவிட்டது. அவரின் மறைவு, ஆசிய மக்களுக்கு உண்மையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று நம்புகிறேன்.
------------------------------------------------ |
அமெரிக்கா எலினார் ரூஸ்வெல்ட் 
|
காந்திஜி பல உன்னதமான ஆன்மீகக் கருத்துகளைக் கொண்டிருந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் சார்ந்த மக்களுக்காக மட்டுமல்ல, உலகத்திற்கே தேவையான பல கருத்துகளை அவர் போதித்தார். அவரின் மரணம், உலக மக்களை வன்முறை பாதையிலிருந்து திருப்பட்டும். |
பாகிஸ்தான் கான் அப்துல் கபார் கான் 
|
ஒரே ஒளிக்கீற்று
இந்த இருண்ட நாட்களில் பார்க்க உதவிய ஒரே ஒளிக்கீற்று அவர்தான். |
பாகிஸ்தான் முகமது அலி ஜின்னா 
|
ஒரு உன்னதமான மரணம்.
ஒரு சிறந்த மனிதருக்கு அளிக்கப்படும் இரங்கலில் நானும் பங்குபெறுகிறேன்.
அவர் எந்த நம்பிக்கை கொண்டிருந்தாரோ அந்த நம்பிக்கையை செயல்படுத்தும்போது அவர் இறந்துள்ளார். எனினும் அவர் கொல்லப்பட்டதற்கும், அவரைக் கொன்றவனுக்கும் நாம் கடுமையாக கண்டனம் தெரிவித்தே ஆகவேண்டும்.
அவரின் சாவு உன்னதமானது, உன்னதமான காரியங்களை மேற்கொள்ளும்போது நடந்தது அந்த மரணம். |
பாகிஸ்தான் லியாகத் அலிகான்

|
மதநல்லிணக்கத்திற்காக மறக்க முடியாத பல முயற்சிகள்.
இந்திய அரசியல் இப்போதுள்ள நிலையில் அவர் நீக்கப்பட்டுள்ளது, ஈடுசெய்ய முடியாத இழப்பு.
நல்லெண்ணம், அமைதியை விரும்புபவர்கள், மதநல்லிணக்கத்திற்காக அவர் பாடுபட்ட விதம் குறித்து நன்றி தெரிவிக்கவே செய்வார்கள். மதநல்லிணக்கத்திற்காகவே வாழ்ந்த அவர், அதையே தன் வாழ்வின் உயிர்மூச்சாகக் கருதியவருக்கு மரணம் ஏற்பட்டாலும் அது அவருக்கு வெற்றி என்ற மகுடத்தைச் சூட்டியே உள்ளது. |