மனித குலத்தை அன்பு என்ற விதிதான் ஆள்கிறது. வெறுப்பு போன்ற வன்முறை போன்றவை நம்மை ஆண்டால், நீண்டகாலத்திற்கு முன்பு வாழ்ந்தவர்களாக மாறிவிடுகிறோம். அதாவது, காட்டுமிராண்டிகளாகி விடுகிறோம். எனினும், இந்தச் சோகம், இந்த நாகரீக உலகத்திலும் நாடுகளிலும் தொடரத்தான் செய்கிறது. இதன்மூலம், வன்முறை நம் முந்தைய சமுதாயத்தில் இருந்தது என்பது உணர்த்தப்படுகிறது.
வெறுப்பு எப்போதும் கொல்லாது, அன்பு எப்போதும் அழியாது என்பதுதான் இந்த இரண்டிற்கும் உள்ள வேற்றுமை. அன்பின் சிறப்பம்சம் என்னவென்றால் அதை எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். வெறுப்பு உண்மையில் சுமையானது. அது வெறுப்பை மேலும் அதிகரிக்கும்.
மன்னிப்பது மறப்பதற்கல்ல. அதன் மேன்மை, தெளிவான அறிவைக் காட்டிலும் அன்பு செலுத்துவதில் உள்ளது. அத்தகையவர்கள் நண்பர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு நண்பனுக்காக அன்பு செலுத்துவதற்காக எதிரியை மறப்பதில் எந்த மேன்மையும் இல்லை.
அன்பு செலுத்துவதன் ஒரே தண்டனை கஷ்டத்தை அனுபவிப்பதுதான்.
அன்பு கொடுக்கும் நீதி சரணடைவது போன்றது. சட்டம் மூலம் பெறும் நீதி, தண்டனை பெறுவது போன்றது.
அதிகாரம் இரண்டு வகைப்படும். தண்டனைக்குப் பயந்து பெறுவது ஒன்று. மற்றொன்று அன்பால் அடைவது. அன்பால் கிடைக்கும் அதிகாரம், தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தால் பெறும் அதிகாரத்தை விட பல ஆயிரம் மடங்கு உயர்வானது மட்டுமல்ல; நிரந்தரமானது.
அன்பு எப்போதும் கேட்காது, கொடுக்கத்தான் செய்யும். அன்பு எப்போதும் பாதிப்படைவது, எப்போதும் வன்மம் கொள்ளாது, பழிவாங்காது.
அன்பு எங்கிருக்கிறதோ அங்கே கடவுள் இருக்கிறார்.
Copyright @ 2012. Gandhi World Foundation. All Rights Reserved