ASHRAMS |
Anandwan Ashram, Changdrapur |
ஆனந்தவனம் ஆசிரமம் பாபா ஆம்தே ஆசிரமம் ஆனந்தவனம் ஆசிரமம், தனியொரு மனிதனின் இமாலயச் சாதனையின் எடுத்துக்காட்டு. முரளிதர் தேவிதாஸ் ஆம்தே அல்லது பாபா ஆம்தே என்று பரவலாக அழைக்கப்பட்ட ஒரு தியாக சீலரின் எண்ணத்தில் உதித்த உன்னதத் திட்டம்தான் இந்த ஆசிரமம். பிறரால் புறக்கணிக்கப்பட்ட தொழுநோயாளிகளுக்காக கட்டாந்தரையாக கிடந்த இந்த இடத்தை சோலை வனமாக ஆக்கியுள்ளதுடன், அவர்களையும் பராமரித்து, அவர்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்க உதவியவர் பாபா ஆம்தே. உதவி என்று வருபவர்களுக்கு எந்த நேரமும் உதவி செய்யக் காத்திருக்கும் இந்த ஆசிரமத்தை, பாபா ஆம்தேவின் மகன் டாக்டர் விகாஸ் ஆம்தே, தன் தந்தையின் வழியைப் பின்பற்றி நடத்தி வருகிறார்.
|