காந்தி ஸ்மிருதி
காந்தி ஸ்மிருதி மற்றும் தர்ஷன் சமிதி, டில்லியில் ராஜ்காட்டில் அமைந்துள்ளது. 1984ம் ஆண்டு காந்தி ஸ்மிருதி மற்றும் தர்ஷன் ராஜ்காட் இணைத்து உருவாக்கப்பட்டது.
முக்கிய அம்சம்:
காந்தி ஸ்மிருதிதான் காந்திஜியின் பெரிய அருங்காட்சியகம். இங்குள்ள நுõலகத்தில் 60,000 புத்தகங்கள் உள்ளன. 6,000த்திற்கும் மேற்பட்ட ஒரிஜினல் புகைப்படங்கள் பாதுகாக்கப்படுகின்றன. காந்திஜியின் கடைசி 144 நாட்கள் தொடர்பான பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் இங்கு உள்ளன.
காந்தி தர்ஷன் சமிதி
ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதிக்கு வெகு அருகாமையில் உள்ளது காந்தி தர்ஷன் சமிதி. 36 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, திரைப்பட கலையரங்கம், தேசிய மற்றும் சர்வதேச கருத்தரங்கு வசதிகள், குழந்தைகள் விளையாடுமிடம் மற்றும் நுõலகம் அமைந்துள்ளது.
எவ்வாறு செல்வது? நாட்டின் தலைநகர் டில்லியில் இது அமைந்துள்ளது என்பதால் நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் எளிதாகச் செல்லலாம்.
பார்வையிட சிறந்த காலம்: அக்டோபர் - மார்ச்
முகவரி : காந்தி ஸ்மிருதி,
5 தீஸ் ஜனவரி மார்க், புதுடில்லி, 110 011, இந்தியா
தொலைபேசி: + 91 11 2301 2843 / 1480
முகவரி: காந்தி ஸ்மிருதி மற்றும் தர்ஷன் சமிதி
காந்தி தர்ஷன், புதுடில்லி, 110 002, இந்தியா.
தொலைபேசி: + 91 11 2339 2709 / 10
இ-மெயில்: : 2010gsds@gmail.com
மேலும் விவரங்களுக்கு: www.gandhismriti.gov.in |