Gandhi Memorial Museum, Tamil Nadu, India

காந்தி நினைவு அருங்காட்சியகம், மதுரை, தமிழ்நாடு
தோற்றுவிக்கப்பட்டது: 1959
நிர்வகிக்கும் பொறுப்பு: அனைத்திந்திய காந்தி நினைவு நிதியம், புதுடில்லி.
செயலாளர் : எஸ்.பாண்டியன்
குறிக்கோள்கள் :
காந்தியின் அறிவுரைகளை அதன் உண்மைத்தன்மையுடன் பாதுகாப்பது. அவர் தொடர்பான படிப்பு, ஆராய்ச்சிக்கு ஊக்கம் அளிப்பது. அவரின் கொள்கைகளான உண்மை மற்றும் அகிம்சையை அறிந்து கொள்வது. அதுதொடர்பான ஒலிப்பதிவுகள் மற்றும் ஆதாரங்களை காட்சிக்கு வைப்பது. அவர் பயன்படுத்திய பொருட்கள், ஒலிப்பதிவுகள், சினிமாப்படங்கள், புகைப்படங்கள் போன்றவற்றை போட்டுக் காண்பிப்பது.
உள்ளே:
காந்திஜி குறித்த படங்கள், ஓவியங்கள், புகைப்படங்கள். அவர் பயன்படுத்திய பொருட்கள், இந்திய சுதந்திர போராட்டம், காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் துறை கண்காட்சி, காந்தி குடில் மாதிரி, 20,000 தலைப்புகளில் புத்தகங்கள், கைவினைப்பொருட்கள் சேகரிப்பு.
சிறப்புச் செயல்பாடுகள்: காந்திய சிந்தனை, இந்திய சுதந்திர போராட்டம் குறித்து ஒரு நாள் கல்வித்திட்டம், அமைதி அறிவியல் மற்றும் காந்திய சிந்தனை குறித்த ஒருவார கல்வித்திட்டம், கருத்தரங்குகள் மற்றும் சிறப்பு கூட்டங்கள்.
வெளியீடுகள்:
காந்தி வாழ்க்கை வரலாறு, அன்பு வழி நடந்தி அண்ணல் (தமிழில்), இந்திய சுதந்திர போராட்டம், காந்தி அருங்காட்சியகங்கள் குறித்த வழிகாட்டி நுõல். வண்ணப் படங்கள் கொண்ட அட்டைகள்.
முகவரி: மகாத்மா காந்தி சாலை,
தமுக்கம், மதுரை, 625020.
தமிழ்நாடு.
தொலைபேசி: 91-452-5544930 / 094430 37339 / 2531 060
இ-மெயில்: : info@gandhimmm.org / pandianji@lycos.com / dr.t.ravichandran@lycos.com
நேரம்: காலை 10.30 - பகல் 2.00, மாலை 5.30.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு: : http://www.gandhimmm.org/
|