|
தோற்றுவிப்பு: 1960
நிர்வகிக்கும் பொறுப்பு: காந்தி சமராக் சங்ரஹலாயா சமிதி
குறிக்கோள்: காந்திஜியின் வாழ்க்கை, குறிக்கோள், தத்துவங்களை - ஓவியங்கள், காணோளி காட்சி, புகைப்படங்கள், கையெழுத்துப் பிரதிகள், அடையாளச் பொருட்கள் போன்றவற்றின் மூலம் பரப்புவது. நாட்டின் பிற பகுதிகளில் நினைவுத்துõண்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் நுõலகங்களை ஏற்படுத்துவது.
உள்ளே: காந்திஜியின் வாழ்க்கை வரலாறு, சேவைகள், குறிக்கோள்களைப் பிரதிபலிக்கும் பெரிய படங்களைக் கொண்ட கலைக்கூடம், ஓவியங்கள், காந்திஜி பயன்படுத்திய பொருட்கள், பாகங்கள். உலக அமைதி மற்றும் மதங்கள் தொடர்பான சுமார் 40,000 புத்தகங்கள் கொண்ட நுõலகம்.
சிறப்பு செயல்பாடுகள்: காந்திஜி தொடர்பான படச்சுருள்கள், அவர் காலத்திய சம்பவங்களை உணர்த்தும் படங்கள், சிறப்பு கண்காட்சிகள், கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள்.
வெளியீடுகள்: அருங்காட்சியகம் மற்றும் நுõலகம் குறித்த சிறிய குறிப்புகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள்.
முகவரி: ராஜ்காட், புதுடில்லி -110002
தொலைபேசி: + 91-11-3310168
இயக்குனர்: + 91-11-331 1793
பேக்ஸ்: + 91-11-3311793
நேரம்: 9.30 - 17.30 மணி
(திங்கள்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து)
இ-மெயில்: gandhimk@bol.net.in
இணையதளம்: www.gandhimuseum.org
அருங்காட்சியகம், கலைக்கூடம் மற்றும் அங்கிருக்கும் பொருட்கள் குறித்த தகவல்கள்:
- காந்திஜி, அவரின் சுதந்திர இயக்கம் மற்றும் பிற தலைப்புகளில் 26,000 புத்தகங்கள்.
- காந்திஜி மற்றும் சுதந்திர போராட்டத் தலைவர்கள் குறித்த 6,000 புகைப்படங்கள்
- 1,600 தலைப்புகளில் புத்தகங்கள், குருந்தகடுகள், அட்டைகள், போஸ்டர்கள் விற்பனைக்கு
- காந்தியின் பேச்சுகள் அடங்கிய ஒலி நாடாக்கள் மற்றும் ஒளிப்படங்கள்
- அருங்காட்சியகத்தின் வெளியீடுகள் குறித்த பட்டியல்
- அருங்காட்சியகத்தின் பிற சேவைகள் குறித்த தகவல்கள்
சிறப்பு அம்சங்கள்:
- அனுமதி இலவசம்
- நுõலகத்தில் உறுப்பினராக மிகக்குறைந்த கட்டணமே
- ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4-5 மணிக்கு காந்தி குறித்த இலவச திரைப்படம் ஒளிபரப்பு
- காந்தி புத்தக விற்பனை மையம்
- சிறப்பு கண்காட்சி (அக்டோபர் 2 முதல் நவம்பர் 30 வரை மற்றும் 30 ஜனவரி முதல் 31மார்ச் வரை)
நேரம்
கலைக்கூடம்: காலை 9.30 - மாலை 5.30 (திங்கள் கிழமை விடுமுறை)
நுõலகம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை. திங்கள் கிழமை அரசு விடுமுறை நாட்கள் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமைகளில் விடுமுறை
|