Facebook
Peace 2020    |   Save Nature 4 Future   |   Gandhi Memoribila on October 2nd 2015   |      We 2 Ours 2      |    Chennai walkathon 2016
மகாத்மாவைப் பற்றிய சேகரிப்புகள்  
அஞ்சல் தலைகள்
நாணயங்கள்
ரூபாய் தாள்கள்
டோக்கன்கள்(அடையாள பொருட்கள்)
அஞ்சல் அட்டைகள்
சிறப்பு உறை & முத்திரை
தொலைபேசி அட்டை
பிறந்த தேதி ரூபாய் தாள்கள்
செய்தித்தாள்கள்
கையெழுத்து
புத்தகங்கள் மற்றும் குறுந்தகடுகள்
புகைப்படங்கள்
சிலைகள்
வீடியோ மற்றும் குரல்
சிறுகதைகள்
ஓவியங்கள் மற்றும் கார்டூன்கள்
விளக்கக் காட்சிகள்
காந்திஜியின் கோயில்
அருங்கட்சியங்கள் மற்றும் ஆசிரமங்கள்
வாழ்கை வரலாறு
காலவரிசை
பாராட்டுகள்
பொன்மொழிகள்
சிறிதளவு அறியப்பட்ட உண்மைகள்
கடைசி 24 மணிநேரம்
மற்றவை
பயன்மிக்க இணைப்புகள்

 

 
 
   
  காந்திஜிக்கு அஞ்சலி
   
  பிற நாட்டுத்தலைவர்கள்
   
 

அர்னால்ட் ஸ்வெய்க்

காந்தி என்றொரு நட்சத்திரம் எழுந்தது. அகிம்சை என்ற கொள்கையை அவர்தான் உலகுக்குப் போதித்தார்.

ஹோ சி மின்

“என்னையும் வேறு சிலரையும் புரட்சியாளர்கள் என்று கூறுவார்கள். என்னைப் பொறுத்தமட்டில், நான் மகாத்மா காந்தியின் சீடன்தான். அவர்தான் எங்களுக்கு குரு.

டாக்டர் மார்ட்டின் லுõதர் கிங் ஜூனியர்

பிறரைப் போலவே நானும் காந்தியைப் பற்றி அறிந்திருந்தேன். ஆனால், அவரைப் பற்றி தீவிரமாக சிந்திக்காமல் இருந்துவிட்டேன். அவரைப் பற்றி, அவரின் சத்தியாகிரகப் போராட்டங்களைப் பற்றிப் படிக்கத் துவங்கியதும், அவர் மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டுவிட்டது.
    என்னைப் பொறுத்தமட்டில், அன்பை இவ்வளவு உயரிய இடத்திற்கு கொண்டு சென்றது, இயேசுவுக்கு அடுத்தபடியாக, காந்தியாகத்தான் இருக்க முடியும். தனிநபர்களின் சக்தியை மொத்தமாக ஒன்று திரட்டுவதன் மூலம் வியத்தகு சாதனைகளை செய்ய முடியும் என்பதை காந்திஜி வெளிப்படுத்தியுள்ளார். அவரின் இந்த உள்ளார்ந்த கருத்துகள் எனக்கு பென்தாம் மற்றும் மில்லிடம் இருந்துகூட கிடைக்கவில்லை. புரட்சிகர சிந்தனையாளர்களான மார்க்ஸ், லெனின் போன்றவர்களிடம்கூட காணப்படவில்லை. ஹோப்பிஸ்சின் சமூக ஒப்பந்தத்திலும் அந்தக் கொள்கை இல்லை. ரூசோவின் இயற்கைக்கு மாறுதல், நைட்ஸின் சூப்பர்மேன் தத்துவத்திலும் அது இல்லை. அவற்றில் எல்லாம் காணாத வன்முறையற்ற எதிர்ப்புக் கொள்கையைக் காந்தியிடம் கண்டேன்.
    மனிதகுலம் முன்னேற வேண்டுமானால், காந்தியின் கோட்பாடுகள் அவசியம் பின்பற்றப்பட வேண்டும். உலக அமைதி, நல்லிணக்கத்திற்காகவே அவர் சிந்தித்தார், செயல்பட்டார், வாழ்ந்தார். அவரை நாம் மறக்க வேண்டுமானால் அது நமது சொந்த இடர்பாடு.
    தீமையைக் கடுமையாக எதிர்த்த காந்தி, அந்த எதிர்ப்பை அன்பால் செய்தார். வெறுப்பை உமிழவில்லை. அன்பின் முன், தீமையின் மோதல் பண்பு நீடிக்கவில்லை.

ரவீந்திரநாத் தாகூர்

“இந்தியாவின் நிராதராவான லட்சக்கணக்கானோரின் வாசலில் நின்றவர் காந்தி. அவர்களைப் போலவே உடை உடுத்தி, அவர்களின் சொந்த மொழியிலேயே பேசினார். இந்த நாட்டின் லட்சோபலட்சம் மக்களின் ரத்தங்களையும் சதைகளையும் தனதாக கருதிய தலைவர் காந்தியைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?

யூ தான்

காந்தியின் பெரும்பாலான கொள்கைகள் பிரபஞ்சம் முழுவதும் செல்லத்தக்கது. காலத்தால் அழியாததது. இந்தியாவைப் போல உலகம் முழுவதும், அமைதிதான் உன்னத குறிக்கோள்களை அடைவதற்கான வழிமுறை என்பதை ஏற்றுக் கொள்ளும் காலம் வெகுவிரைவில் இல்லை என்றே நான் நம்புகிறேன்.

ரிச்சர்ட் அட்டன்பரோ பிரபு

மனித இயல்பிலேயே மிகவும் போற்றத்தக்க இயல்பு எவை என்று காந்தியிடம் கேட்டால், அடுத்த கணமே, எந்த வித யோசனையும் இல்லாமல், வீரமும் அகிம்சையும் என்கிறார். இவைகளை கோழையால் பயன்படுத்த முடியாது. வீரர்களால்தான் பயன்படுத்த முடியும் என்றும் சொல்கிறார்.

தலாய் லாமா

மகாத்மா காந்தி மீது எனக்கு மிகப் பெரிய மதிப்பும் மரியாதையும் உள்ளது. மனித இயல்பை நன்கு அறிந்த சிறந்த மனிதர் அவர். மனிதர்களிடம் குவிந்து கிடக்கும் நேர்மறை எண்ணங்களை மேம்படுத்துவதிலும் எதிர்மறை எண்ணங்களை விலக்குவதிலும் குறியாக இருந்தவர். நான் சிறுவனாக இருந்த காலத்திலிருந்து காந்தியின் கருத்துகளால் நான் ஈர்க்கப்பட்டவன். வன்முறையற்ற அகிம்சை நிலை என்பது வன்முறை இல்லாத நிலையன்று. அது உண்மையின் வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்றார்.
பிறரையும் நம்மைப் போல நினைத்தால் எந்த துன்பதற்திற்கும் இடமில்லை அல்லவா? அந்தக் கருத்தை முன்வைத்துள்ள காந்தியின் போதனைகள் எக்காலத்திற்கும் ஏற்புடையவை. எதிர்காலத்தில் மனித உறவுகளை இணைக்கும் ஒப்பந்தமாக அகிம்சைதான் இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை அதிகம்.

பியர்ல் எஸ் பக்

அவர் நல்லவர். நல்லவர்தான் என்பதை அவரும் அறிவார். நாமெல்லோரும் அறிவோம் அவர் நல்லவர்தான் என்று. அவரைக் கொன்ற அந்த மனிதனும் அறிவான் காந்தி நல்லவர் என்பதை.

 
  Copyright @ 2012. Gandhi World Foundation. All Rights Reserved
hit counters
Designed & Maintained by
Clutch Integrated Technologies, India