பிரார்த்தனை என்பது இறைஞ்சுவதல்ல. அது ஆன்மாவின் ஏக்கம். ஒருவனின் பலவீனத்தின் தினப்படியான வெளிப்பாடு. அதனால்தான் பிரார்த்தனையின்போது வார்த்தைகளை விட இருதயம் அதிகமாக பயன்படுகிறது.
பிரார்த்தனை அல்லது இறைவணக்கம் வீட்டில் உள்ள பாட்டியின் பொழுதுபோக்கல்ல. அதை சரியாக செய்தால் மிகச் சிறந்த ஆயுதம் அது.
இறைவணக்கம் காலையின் சாவி, மாலையின் பூட்டு.
ஒருவனுக்கு எந்த அளவுக்கு உள்ளொளி இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் பிரார்த்தனை அவனிடம் இருக்கும்.
எவனொருவன் தினமும் இறை வணக்கத்தில் ஈடுபடுகிறானோ அவன் தினம் தினம் புதியதை சேர்க்கிறான். அந்தப் புதியதை எதனுடனும் ஒப்பிட முடியாது.
இருதயத்தை மகிழ்ச்சியடையச் செய்யும் ஒரு செயல் எதுவாக இருக்கும் என்றால், அது தலைவணங்கிச் செய்யப்படும் இறைவணக்கமே. ஆயிரம் பேர் தலை வணங்குவதை விட ஒருவர் செய்யும் இறைவணக்கமே பெரிது.
Copyright @ 2012. Gandhi World Foundation. All Rights Reserved