மகாத்மா காந்திஜியின் பொன்மொழிகள்
அடக்கம்
நான் பெற விரும்பும் ஒரே நல்லொழுக்கம் உண்மையும் அகிம்சையும்தான். அதிமனித சக்திகள் எல்லாம் எனக்கு வேண்டாம். வேறு ஒன்றும் வேண்டாம். என் சக மனிதர்களைப் போலவே என் எலும்புகளை மூடியிருக்கும் நோஞ்சான் எலும்புகளையே கொண்டிருக்கிறேன். ஆகையால் அவர்களைப் போலவே நானும் தவறு செய்ய நேரிடுபவன்தான். அவர்களிடம் பல நேர்மைக் குறைவான அம்சங்கள் இருந்தாலும் அவர்களுக்கும் இறைவனின் அருள் கிடைக்கவே செய்யும்.
கொஞ்சம் அடக்கம், ஒருவனின் நடத்தை குறித்த சிறிதளவு அவமரியாதை மற்றும் கொஞ்சமாவது ஏற்றுக் கொள்ளும் திறன் இருப்பதுதான். மனிதத்தன்மையின் முதன்மையான பண்பே,
அடக்கம்தான் கொடூர மிருகங்களில் இருந்து மனிதனை தனித்துக் காட்டுகிறது. சுதந்திரமாக இருப்பது அவனின் தனியுரிமை. அதுபோல ஒருவருக்கொருவர் சார்ந்திரப்பதும் அவன் கடமையே. அகங்காரம் பிடித்தவன்தான், தான் சுதந்திரமான மனிதன் என்று கூறுவான். பிறர் எந்த விதத்திலாவது பிறருடன் இணைந்தே இருப்பார்கள்.
துறவறம்
எளிமையான வாழ்க்கை என்ற விருப்பத்திலிருந்து மாறும் மனிதனுக்கு தேவைகள் அதிகரித்து விடுகின்றன. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் மனநிலைதான் மனிதனுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
மனம் உடலில்தான் இருந்தாலும் அதற்கு அதிக திருப்தியைக் கொடுத்துவிட்டால் அது பலம் இழந்துவிடும். அந்த மனதில் பலம் இருக்காது; வலுவும் இருக்காது.
ஜடப்பொருட்கள் மீது ஆர்வம் அதிகரித்தால், அறநெறி குறைந்துவிடும்.
என்னைப் பொருத்த மட்டில் நான் சுத்தமானவன்தான். ஆனால் மற்றவர்கள் கண்களுக்கு நான் வேறு விதமாகத் தெரிகிறேன்.
மனிதர்களை இன ரீதியாக பிரித்துப் பார்ப்பது மிருகச் செயல். பெண்களை காம இச்சையைத் தீர்க்க மட்டும் பயன்படுத்துவதும் அப்படியே.
மகிழ்ச்சி இருக்கும் இடத்தில் தியாகம் இருக்காது. புனிதமான தன்மை கொண்டது தியாகம். தனது தியாகத்திற்காக பிறரின் பரிதாபத்தைத் தேடும் மனிதர்களில் நாமும் ஒருவரே.
புதுக்கொள்கையை ஏற்பவர்
நம் எழுத்தாலோ அல்லது பேச்சாலோ பிறரை நம் பக்கம் இழுக்க வேண்டும் என்ற தேவையில்லை. மனதுக்கு எது சரியெனப்படுகிறதோ அதைச் செய்வோம். பிறர் எப்போது வேண்டுமானாலும் திறந்து பார்க்கக் கூடிய திறந்த புத்தகமாக நம் வாழ்க்கை இருக்ணீட்டும்.