மகாத்மா காந்திஜியின் பொன்மொழிகள்
கொள்கை
என்னுடைய பணி எப்போது நிறைவடையும் என்றால், ஆணும் பெண்ணும் உள்ள ஒவ்வொரு மனித குடும்பத்திற்கும் திடமான வைராக்கியத்தை எடுத்துச் செல்லும்போதுதான். அதற்கான பணியில் பலவீனம் அடையும்போதும், தனது சுயமரியாதை, சுதந்திரத்தின் காவலனாக இருக்கும்போதும், அந்த பாதுகாப்பு உணர்வே ஒட்டுமொத்த உலகமும் அவனுக்கு எதிராக இருந்தாலும் நிலைத்து நிற்கும்.
தெளிவான செயல்பாட்டின் வெளிப்பாடே கொள்கை. நம்மைப் போன்ற தேர்ந்த செயல்பாடில்லாதவர்கள் தெளிவான செயல்பாட்டை பின்பற்ற முடியாது. ஒவ்வொரு வினாடியும் நம்மைக் கட்டுப்படுத்துபவற்றை நாம் பின்பற்றுகிறோம்.
மனசாட்சி
சில நேரங்களில் ஒரு உயரிய அழைப்பிற்கு நீங்கள் செவிமடுத்திருக்க முடியும். அந்த அழைப்பின் பெயர் மனசாட்சி. அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டதற்காக நீங்கள் கொடுத்த விலை கசப்பான கண்ணீராக இருந்திருக்கும், அதற்கு மேலானதாக இருந்திருக்கலாம். நீங்கள் சார்ந்திருந்த நண்பர்கள், குடும்பம், சொந்த ஊரிலிருந்து பிரிந்திருக்கலாம். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதை அரிதாக நினைத்தீர்களோ அதைக்கூட இழந்திருக்கலாம். இவ்வாறு மனசாட்சியின் குரலுக்கு பணிவதுதான் மனிதகுலச் சட்டம்.
ஒவ்வொருவரும் அவர்களுக்கான அமைதியை அவர்களுக்குள்தான் காண வேண்டும். மேலும், அமைதி உண்மையானதாகவும் வெளிப்புறச் சூழல்களால் பாதிக்கப்படாததாகவும் இருக்க வேண்டும்.
உங்கள் உள்ளே இருக்கும் மனசாட்சி நண்பன் இதைச் செய் என்று கூறும்போது பிற நண்பர்கள் கூறுவதைக் கேட்க வேண்டாம்.
நாளை இறப்பு எனத் தெரிந்தால் எப்படி வாழ்வீர்களோ அப்படி தினமும் வாழுங்கள். நீங்கள் எப்போதும் நீக்கமற நீடிக்கப் போகிறீர்கள் என்ற நினைப்பில் புதியவனவற்றைக் கற்றுக் கொள்ளுங்கள்.
இந்த உலகின் ஒரே கொடுங்கோலன் யார் என நான் ஏற்றுக் கொள்வேன் என்றால் அது <உள்ளிருந்து எழும் குரல்தான்.
மனசாட்சியின் மெல்லிய குரல் எட்டிப் பார்க்கும் இடத்திற்கு, மனிதர்களின் சாதாரண குரல்கள் எட்டிப் பார்க்காது.
எல்லா நீதிமன்றங்களையும் விட உயர்ந்தது மனசாட்சி எனும் நீதிமன்றம்தான். அது, எல்லா நீதிமன்றங்களுக்கும் மேலானது.
நமது எண்ணம், பேச்சு, செயல்களிலிருந்து வன்முறையை முழுமையாக விலக்க முடியாவிட்டாலும், அதிலிருந்து விடபட வேண்டும் என்ற தொடர்ந்த முயற்சியும் அதற்கான குறிக்கோளும் நமக்கு முன்னேற்றத்தைப் பெற்றுத்தரும்.
பலம் உடல் திறனால் அமைந்ததல்ல. மாறாக, அசைக்க முடியாத மனஉறுதியிலிருந்து வெளிப்படுவது.
நேரானப் பாதையிலிருந்து விலகியவன் ஒருபோதும் தன் இலக்கை அடைய மாட்டான்.
சுயமரியாதை இருக்கும் இடத்தில் எந்தவித பரிசீலனைக்கும் இடமில்லை.