மகாத்மா காந்திஜியின் பொன்மொழிகள்
சமத்துவம்
மனிதர்கள் எல்லோருமே ஒன்றுதான் என்ற நிலையில், அந்த மனிதக்கூட்டத்தில் உள்ள ஒருவர் தன்னைத்தானே உயர்ந்தவராகவும் மற்றவர்கள் தங்களைத் தாங்களே கீழானவர்களாகவும் கருதுவது எதனால் என்று எனக்குப் புரிவதில்லை.
ஆணின் துணையாக விளங்கும் பெண், ஆணைப் போன்றே எல்லா வித திறமைகளையும் கொண்டுள்ளாள். மனிதனின் ஒவ்வொரு சின்னஞ்சிறு விஷயங்களிலும் பங்கேற்க அவளுக்கு உரிமை உண்டு. அவனுடன் இணைந்து, சுதந்தரம் மற்றும் விடுதலையில் சமஉரிமை அவளுக்கும் உண்டு.
நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள் தவிர்த்து எல்லோரும் சமம்தான் என்று நான் நம்புகிறேன்.
சாதாரண அறிவு என்பது, அறியப்பட்ட விகிதாச்சார அறிவே.
மென்மைத்தன்மை, சுய தியாகம், பரோபகாரம் போன்றவை எந்த ஒரு தனிப்பட்ட மதம் அல்லது இனத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல.
அன்பு
மனித குலத்தை அன்பு என்ற விதிதான் ஆள்கிறது. வெறுப்பு போன்ற வன்முறை போன்றவை நம்மை ஆண்டால், நீண்டகாலத்திற்கு முன்பு வாழ்ந்தவர்களாக மாறிவிடுகிறோம். அதாவது, காட்டுமிராண்டிகளாகி விடுகிறோம். எனினும், இந்தச் சோகம், இந்த நாகரீக உலகத்திலும் நாடுகளிலும் தொடரத்தான் செய்கிறது. இதன்மூலம், வன்முறை நம் முந்தைய சமுதாயத்தில் இருந்தது என்பது உணர்த்தப்படுகிறது.
வெறுப்பு எப்போதும் கொல்லாது, அன்பு எப்போதும் அழியாது என்பதுதான் இந்த இரண்டிற்கும் உள்ள வேற்றுமை. அன்பின் சிறப்பம்சம் என்னவென்றால் அதை எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். வெறுப்பு உண்மையில் சுமையானது. அது வெறுப்பை மேலும் அதிகரிக்கும்.
எங்கே அன்பிருக்கிறதோ அங்கே வாழ்க்கை இருக்கிறது.
சர்வதேச விவகாரங்களில் அன்பின் சட்டம் நீண்ட துõரம் கொண்டிருப்பதாக இருக்கலாம். அரசு இயந்திரங்கள் ஒவ்வொரு மனிதரின் இருதயம் பிறரில் இருந்து எப்படி வேறுபடுகிறது என்பதில் உள்ளது.
மன்னிப்பது மறப்பதற்கல்ல. அதன் மேன்மை, தெளிவான அறிவைக் காட்டிலும் அன்பு செலுத்துவதில் உள்ளது. அத்தகையவர்கள் நண்பர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு நண்பனுக்காக அன்பு செலுத்துவதற்காக எதிரியை மறப்பதில் எந்த மேன்மையும் இல்லை.
அன்பு செலுத்துவதன் ஒரே தண்டனை கஷ்டத்தை அனுபவிப்பதுதான்.
அன்பு கொடுக்கும் நீதி சரணடைவது போன்றது. சட்டம் மூலம் பெறும் நீதி, தண்டனை பெறுவது போன்றது.
அதிகாரம் இரண்டு வகைப்படும். தண்டனைக்குப் பயந்து பெறுவது ஒன்று. மற்றொன்று அன்பால் அடைவது. அன்பால் கிடைக்கும் அதிகாரம், தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தால் பெறும் அதிகாரத்தை விட பல ஆயிரம் மடங்கு உயர்வானது மட்டுமல்ல; நிரந்தரமானது.
அன்பு எப்போதும் கேட்காது, கொடுக்கத்தான் செய்யும். அன்பு எப்போதும் பாதிப்படைவது, எப்போதும் வன்மம் கொள்ளாது, பழிவாங்காது.
அன்பு எங்கிருக்கிறதோ அங்கே கடவுள் இருக்கிறார்.
நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான கருத்துகளைக் கொண்டிருக்கலாம். அதற்காக இருதயங்கள் இணைவதற்கு எதற்காக தடை ஏற்படுத்த வேண்டும்?
நட்பு
துன்பத்தின்போது உதவுவதுதான் நட்பின் அடையாளம். அந்த உதவியும் நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும். பரிசீலனைகளுடன்கூடிய கூட்டுறவு நட்பல்ல. அது, ஒப்பந்தம் போன்றது. நிபந்தனையுடன் கூடிய கூட்டுறவு, கலப்படம் செய்யப்பட்ட சிமென்ட் போன்றது. அது ஒட்டாது.
ஒருவரின் நண்பருடன் நட்பு பாராட்டுவது எளிது. யார் உன்னை எதிரியாக நினைக்கிறாரோ அவரை நண்பராக நீ பார்ப்பதுதான் உண்மையான மதத்தின் சாராம்சம். மற்றவை எல்லாம் வியாபாரம் போன்றதுதான்.
எல்லா விதத்திலும் ஒத்துப்போவது நட்பல்ல. இருவருக்கிடையே கருத்து மோதல் ஏற்படும் போதிலும் அதை தாங்கிக் கொள்வதுதான் உண்மையான நட்பு.