• pic2
  • pic3
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4

மகாத்மா காந்திஜியின் பொன்மொழிகள்

செயல்

         நீ எதையும் செய்வதற்கு முன், எந்த வித ஆதரவும் இல்லாத, நிராதராவன, ஏழை ஒருவனின் முகத்தை ஒரு கணம் உன் நினைவுக்குக் கொண்டு வா. அவனுக்கு நீ என்ன செய்திருக்கிறாய் என்று யோசித்துப் பார்.
          தீர்மானம் மிக்க மனஉறுதி, எந்தச் சூழ்நிலையிலும் அசைக்க முடியாத, குறைந்து போகாத நம்பிக்கையைக் கொண்டிருக்கும் சிறிய குழுவாக அது இருந்தாலும், அந்தச் சின்னஞ்சிறு குழுகூட வரலாற்றின் போக்கையே மாற்றும் திறன் படைத்தது.
          நீ என்ன செய்கிறாய் என்பது முக்கியமல்ல; நீ செய்கிறாய் என்பதுதான் முக்கியம்.
          செயல்தான் முக்கியம்; செயலின் பலனல்ல. நீ சரியானதைத்தான் செய்ய வேண்டும். அது உன் சக்தியாலோ உன் நேரத்தாலோ அமைந்தது அல்ல. பலன்களும் கிடைக்காதிருக்கலாம். அதற்காக நீ மேற்கொண்ட சரியான செயல்களை நிறுத்த முடியுமா? உன் செயல்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பது உனக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால், நீ ஒன்றுமே செய்யாமலிருந்தால் எந்தப் பலனுமே கிடைக்காது அல்லவா!

         குறிக்கோளை அடையும் முயற்சியில்தான் மகிமை இருக்கிறது. அந்தக் குறிக்கோளை அடைவதில் இல்லை.
          உலகை மாற்ற வேண்டும் என்று விரும்பும் நாம், முதலில் மாற வேண்டும்.
          நீ எந்த விதமான உலகத்தைப் பார்க்க விரும்புகிறாயோ அதுபோலவே நீ மாறு.
          பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ முதலில் அதுபோல நீ மாறு.
          நம் பேச்சாலோ அல்லது எழுத்தாலோ பிறரை நம் வசம் இழுக்க வேண்டும் என்ற தேவையில்லை. நம் வாழ்வின் மூலம்தான் அதை அடைய முடியும். பிறர் எளிதாகப் படிக்கும் வகையில் நம் வாழ்க்கை திறந்த புத்தகமாக இருந்தால் அது எளிதாகும்.
          தீய செயல்களுடன் ஒத்துழையாமல் இருப்பது, ஒரு கடமை அளவுக்கு உயர்வானது. அது, நன்மையானவற்றுடன் ஒத்துழைக்கக்கூடியது.
          திருப்தி முயற்சியில் இருக்கிறது; முழுமையில் அல்ல. முழுமுயற்சிதான் முழுவெற்றி.
          செயல்கள்தான் முன்னுரிமையை வெளிப்படுத்துகின்றன.
          என்னைப் பொறுத்தமட்டில் நிகழ்காலம் முடிவில்லாதப் பரம்பொருளில் உள்ளது.பரப்பொருளுக்காக நிகழ்காலத்தை நான் தியாகம் செய்ய மாட்டேன்.
          ஒரு டன் அளவுக்கு போதனை செய்வதை விட ஒரு அவுன்ஸ் அளவு பின்பற்றுதலே சிறந்தது.
          தெரிந்தோ அல்லது தெரியாமலோ நாம் பிறருக்கு சில விதங்களில் நன்மையைச் செய்கிறோம். அதையே பரவலாகச் செய்யும்போதோ அல்லது செய்ய நினைக்கும்போதோ நமக்கு மகிழ்ச்சி அதிகரிப்பதுடன் உலகத்திற்கும் மகிழ்ச்சி அதிகரிக்கிறது.
          சாதாரணத் திறமைகளைக் கொண்ட மிகச் சாதாரண மனிதன் நான். என்னைப் போன்ற நம்பிக்கை மற்றும் உண்மையுடன் அவர்கள் முயற்சிகளை மேற்கொள்ளும்போது நான் பெற்ற இவற்றை விட பிறரால் கண்டிப்பாக அதிகமாகப் பெற முடியும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் கிடையாது.
          இந்த உலகத்திற்கு அமைதியைப் போதிக்க விரும்பினாலும், உண்மையான போருக்கு எதிரான போரைத் துவக்க வேண்டும் என்றாலும் அதை குழந்தைகளிடம் இருந்துதான் துவக்க வேண்டும்.
          ஆயுளுக்கு அதன் வேகத்தை அதிகரிப்பதை விட மேலும் பல உள்ளன.
          ஒருவன் தான் மேற்கொள்ளும் செயலின் முடிவை அறிந்து கொள்வதில் கவலையாக இருந்தால், அவனுக்கு தடைகளும் எதிர்ப்புகளும்தான் அதிகம் தென்படும்.
          மகிழ்ச்சியற்ற நிலையில் மேற்கொள்ளும் எந்தச் செயலும், அதைப் பெறுபவருக்கோ வழங்கும் நமக்கோ எந்தப்  பயனும் அளிக்காது. மகிழ்ச்சியாக நாம் மேற்கொள்ளும் செயல்கள் முன், நம் உடைமைகளால் நாம் பெற்ற மகிழ்ச்சி ஒன்றுமே இல்லாமல் போல மாறிவிடும்.
          வீறுநடை போடும் வீரன் விவாதம் செய்ய மாட்டான். இறுதியில் வெற்றி கிட்டுமா என்ற சந்தேகம் அவனுக்கு இருக்காது. அவனுக்குக் கொடுக்கப்பட்ட பணியை மட்டும் நம்பிக்கையுடன் மேற்கொள்பவன், போரில் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் வருந்த மாட்டான். அதுபோலத்தான் நாம் அனைவரும் செயலாற்ற வேண்டும். எதிர்காலத்தை அறிவது நம் நோக்கமல்ல. நிகழ்காலத்தில் நாம் எப்படிச் செயலாற்றுகிறோம் என்பதுதான் முக்கியம்.