• pic2
  • pic3
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4

மகாத்மா காந்திஜியின் பொன்மொழிகள்

உண்மை

         நீ கொண்டிருக்கும் உண்மையான கருத்திற்கு ஆதரவு இல்லாமல் போனாலும் உண்மை உண்மையாகத்தானே இருக்கும்!
          உண்மை என்பது சுய ஆதாரம் கொண்டது. அதை மூடியிருக்கும் அறியாமை என்ற மூடியை விலக்கி விட்டால், உண்மை பளீரென பிரகாசிக்கும்.
          நீ மேற்கொள்ளும் செயல் உண்மையானதாக இருந்தால் அது எந்த காலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது.
          எத்தகைய ஆதரவுப் பிரச்சாரம் நடந்தாலு<ம் பொய்மை எப்போதும் உண்மையாகாது. அதுபோல, பிறர் கவனிக்கவில்லை என்றாலும் உண்மை எந்த நேரத்திலும் பொய்மையாகாது.
          உண்மை பொய்மையைக் கொல்கிறது. அன்பு கோபத்தை வெல்கிறது. தன்னை வருத்துதல் வன்முறையை அறுக்கிறது. இந்த உயரிய கொள்கைகள் துறவிகளுக்கானதல்ல; நமக்கானது.
          மனசாட்சி தொடர்பான விஷயங்களில் பெரும்பான்மைச் சட்டங்களுக்கு இடமில்லை.
          குழந்தைகளே உண்மை பேசுகின்றனர் என்றால் பெரியவர்கள் கண்டிப்பாக உண்மையைத்தான் பேச வேண்டும். எல்லா விஷயங்களையும் அதன் காரணம் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில்தான் ஆராய வேண்டும் என்பது நல்லது. அந்த வார்த்தைகள் யாரிடம் இருந்து வருகிறது என்பதைப் பார்க்கத் தேவையில்லை.
          வெறும் உண்மை என்ற வார்த்தைக்கு மதிப்பும் இல்லை. உண்மையை மனிதர்கள் பின்பற்றி, அவர்களிடம் அந்த உண்மை மாற்றத்தை ஏற்படுத்தி, அதை நிலைநாட்ட அவர்கள் தங்களையும் தியாகம் செய்யத் தயாராக இருப்பதுதான் உண்மை.
          எது முழுமையாகவும் உண்மையானதாகவும் இல்லாமல் இருக்கிறதோ அதை எந்தப் பெயர்சொல்லி அழைப்பதிலும் பயனில்லை.
          உண்மையை எவனொருவன் அற்பமாக நினைக்கின்றானோ அவன் அகிம்சையின் வேரை அறுக்கிறான். கோபம் கொள்பவன், ஹிம்சை (வன்முறை) என்ற குற்றத்தைப் புரிகிறான்.
          இந்த உலகின் மதங்களுக்கிடையே பல வேறுபாடுகள் இருந்தபோதிலும், உண்மையைத் தவிர வேறு எதுவும் நிலைத்திருப்பதில்லை என்பதில் அவை அனைத்தும் ஒன்றுபட்டுள்ளன.
          எல்லாவற்றிற்கும் அறம்தான் அடிப்படை. அந்த அறத்திற்கே உண்மைதான் அடிப்படை.
          உறுதியை மீறுவதுதான் உண்மையில் அடிப்படை சரணாகதி.
          உறுதியை மீறுவது, கடனைக் கொடுக்க மாட்டேன் என்று மறுப்பதை விட கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் கடனில் மூழ்கிப் போவதற்கு சமமானது.
          தவறுகளை ஒப்புக்கொள்வது, தரையின் மேல் உள்ள துõசுகளை அகற்றும் விளக்குமாறு போன்றது. அதனால், மனம் சுத்தமாவதுடன் பிரகாசமடையும். ஒப்புக் கொள்தலுக்குப் பிறகு நான் பலமடைந்தவனாக உள்ளேன்.