இந்த உலகில் மனிதனின் தேவைக்கு போதுமான அளவு வளம் உள்ளது. அவனின் பேராசை அளவுக்கு வளங்கள் இங்கில்லை
முதலீடு அல்லது பணத்தை தீமையானது என்று சொல்லக்கூடாது. எந்த விதத்திலாவது அது கட்டாயம் தேவைப்படுவதாகவே இருக்கும்
மேற்கத்திய நாடுகளைப் போல இந்தியாவை தொழில்வள நாடாக மாற்ற கடவுள் விரும்பவில்லை. மேற்கத்திய நாடுகளைப் போன்றதொரு பொருளாதார சுரண்டலில் இந்தியா ஈடுபடுமேயானால், இலையை வெட்டுக்கிளி சுரண்டி அழிப்பதைப் போல இந்த உ<லகத்தை இந்தியா அழித்துவிடும்.
உண்மையான செல்வம், நல்ல உடல்நலம்தான். அது, தங்கம், வெள்ளியல்ல.
சுயமரியாதை கொண்ட மனிதனின் காலில் தங்கத்தால் போடப்பட்ட கால் விலங்கையும் அவன் இரும்பு விலங்காகத்தான் நினைப்பான். தங்கத்தில் இருந்தாலும் இரும்பில் இருந்தாலும் விலங்கு விலங்குதானே!
Copyright @ 2012. Gandhi World Foundation. All Rights Reserved