|
|
|
|
|
|
செப்டம்பர் 9, 1947: |
|
கல்கத்தாவிலிருந்து டில்லி வந்தடைந்தார். அதற்குப் பிறகு அங்கிருந்து செல்லவேயில்லை. மேற்கு பஞ்சாபிலிருந்து அகதிகளாக வந்தவர்கள் ஹரிஜன் பஸ்தியில் தங்கியிருந்தனர். டில்லி வந்த காந்திஜி, மோட்டார் காரில் ஏறி, நேராக பிர்லா ஹவுஸ் (இப்போதைய காந்தி ஸ்மிருதி, காந்திஜிக்கான தேசிய நினைவிடம்) சென்றார்.
|
|
|
|
செப்டம்பர் 10: |
|
இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த முகாம்கள் மற்றும் ஜாமியா மிலியாவுக்குச் சென்று பார்வையிட்டார். லேடி மவுன்ட்பேட்டனும் வந்து பார்த்தார். |
|
|
|
செப்டம்பர் 11: |
|
இர்வின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களைப் பார்வையிட்டார். |
|
|
|
செப்டம்பர் 12: |
|
இடம்பெயர்ந்தவர்களைப் பார்வையிட்டார். |
|
|
|
செப்டம்பர் 13: |
|
இடம்பெயர்ந்தவர்களைப் பார்வையிட்டார். தனக்கு சிலை நிறுவ விரும்பியவர்களைத் தடுத்தார். |
|
|
|
செப்டம்பர் 14: |
|
மவுன்ட் பேட்டன் பிரபுவை சந்தித்தார். |
|
|
|
செப்டம்பர் 16: |
|
வால்மீகி கோயில் அருகே ஆர்.எஸ்.எஸ். ஏற்பாடு செய்த கண்காட்சியில் பங்கேற்றார். மவுன்ட்பேட்டன் பிரபுவை சந்தித்தார். ‘பாகிஸ்தான் இப்படியே தொடர்ந்து நேர்மையற்ற முறையில் செயல்பட்டால், இருநாடுகளுக்கும் இடையே போர் ஏற்படும்’ என்று தெரிவித்தார். |
|
|
|
செப்டம்பர் 17: |
|
மவுன்ட் பேட்டன் பிரபுவும் அவர் மனைவியும் காந்தியை சந்தித்தனர். கிஷான்கஞ்ச் தொழிலாளர் குடியிருப்பை பார்வையிட்டார். முந்தைய நாள் எச்சரிக்கையை மீண்டும் கூறினார் |
|
|
|
செப்டம்பர் 18: |
|
அசப் அலி இல்லத்தில் முஸ்லிம் தலைவர்களைச் சந்தித்தார். ‘இங்கே எனது பணி முடிவடைந்துவிட்டதால் பாகிஸ்தான் செல்லப் போகிறேன்’ என்றார். |
|
|
|
செப்டம்பர் 19: |
|
இந்து மதத் தலைவர்களுடன் விவாதம். |
|
|
|
செப்டம்பர் 23: |
|
இந்திய தேசிய காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார்.
|
|
|
|
செப்டம்பர் 24: |
|
கூட்டம் தொடர்ந்தது. ஜாம் சாகிப் வந்தார். உடல்நிலை சரியில்லை.
|
|
|
|
செப்டம்பர் 25: |
|
கூட்டம் தொடர்ந்தது. உடல்நிலை சரியில்லாத நிலையிலும் மவுன்ட்பேட்டன் பிரபுவை சந்தித்தார்.
|
|
|
|
செப்டம்பர் 26: |
|
போரை நான் எதிர்க்கிறேன். ஆனால், பாகிஸ்தானிடமிருந்து நியாயமான நீதி கிடைக்கவில்லை என்றால், தவறுகளை பாகிஸ்தான் உணர்ந்து கொள்ள மறுத்தால், இந்தியா, பாகிஸ்தான் போர் தவிர்க்க முடியாததாகி விடும்’ என்று பேசினார்.
|
|
|
|
செப்டம்பர் 27: |
|
இந்திய தேசிய காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார்.
|
|
|
|
செப்டம்பர் 30: |
|
யுனெஸ்கோ செல்லும் சீனக்குழுவினரை சந்தித்தார்.
|
|
|
|
செப்டம்பர் 1: |
|
இந்திய தேசிய காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார்.
|
|
|
|
அக்டோபர் 2: |
|
காந்திஜியின் பிறந்த நாள். ‘இந்த நாள், வாழ்த்துக்களுக்கான நாள் அல்ல. இரங்கலுக்கான நாள். நான் நீண்ட நாள் வாழ விரும்பவில்லை’ என்றார்.
|
|
|
|
அக்டோபர் 3: |
|
‘இங்கே யாரும் என் பேச்சைக் கேட்பதில்லை’ என்றார்.
|
|
|
|
அக்டோபர் 11: |
|
இந்து பஞ்சாங்கத்தின்படி, இன்று காந்திஜியின் பிறந்த நாள். உண்ணாவிரதம் இருந்த அவரை சந்தித்த டில்லிவாழ் குஜராத்திகள் அளித்த பரிசுப்பொருளை (கைப்பை) வாங்கிக் கொண்டார்.
|
|
|
|
அக்டோபர் 19: |
|
மவுன்ட் பேட்டன் பிரவுவைச் சந்தித்தார். அடிசன் பிரபு (காமன்வெல்த் அமைச்சர்) மற்றும் அவரின் மனைவி வந்து காந்தியைப் பார்த்தனர்.
|
|
|
|
அக்டோபர் 25: |
|
சிறைக்குச் சென்று அங்கு வழிபாடு நடத்தினார். மரக்கன்று ஒன்றை நட்டார்.
|
|
|
|
அக்டோபர் 29: |
|
திலிப்குமார் ராய் சில பாடல்களைப் பாடினார்.
|
|
|
|
நவம்பர் 1: |
|
ஹோரேஸ் அலெக்சாண்டர் காந்தியை வந்து பார்த்தார்.
|
|
|
|
நவம்பர்3: |
|
உணவுக்கட்டுப்பாட்டை விலக்குவதற்கு ஆதரவாக காந்திஜி பேசினார்.
|
|
|
|
நவம்பர் 8: |
|
மவுன்ட்பேட்டன் பிரபு மனைவி வந்து பார்த்தார்.
|
|
|
|
நவம்பர் 11: |
|
இந்திய தேசிய காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார். பொதுமக்களின் ஒப்புதல் இன்றி, ஜுனாகாத் பகுதியை பாகிஸ்தானுடன் சேர்க்க அந்த பகுதியின் நவாப்புக்கு அதிகாரம் கிடையாது என்று காந்திஜி பேசினார்.
|
|
|
|
நவம்பர்12: |
|
இடம்பெயர்ந்த மக்களுக்காக ரேடியோவில் உரையாற்றினார்.
|
|
|
|
நவம்பர்20: |
|
ஓக்லா முகாமிலிருந்த இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்தார். கவர்னர் ஜெனரல் தற்காலிக பொறுப்பிலிருந்த ராஜாஜியை சந்தித்தார்.
|
|
|
|
நவம்பர் 25: |
|
மவுன்ட்பேட்டன் பிரபு மனைவி மற்றும் கன்ஜி துவாரகதாஸ், காந்தியை சந்தித்தனர்.
|
|
|
|
நவம்பர் 27: |
|
பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கான், மவுன்ட்பேட்டன் பிரபு, காஷ்மீரின் ஷேக் அப்துல்லா ஆகியோர் காந்தியை வந்து சந்தித்தனர்.
|
|
|
|
நவம்பர்28: |
|
குரு நானக் பக்தர்களிடம் உரையாற்றினார்.
|
|
|
|
டிசம்பர் 4: |
|
பர்மா நாட்டின் பிரதமர் தகின் நுõ, காந்திஜியை சந்தித்தார்.
|
|
|
|
டிசம்பர் 11: |
|
தலிமி சங்கக் கூட்டத்தில் பங்கேற்றார் |
|
|
|
டிசம்பர்12: |
|
ஹர்டிங்கே நுõலகத்தில் வர்த்தகர்களைச் சந்தித்தார்.
|
|
|
|
ஜனவரி3: |
|
வாவெல் கேன்டீன் முகாமில் இருந்த இடம்பெயர்ந்தவர்களைச் சந்தித்தார்.
|
|
|
|
ஜனவரி 12: |
|
மத மோதல்கள் அதிகமாக நடந்ததால் கோபமடைந்த காந்திஜி, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். கவர்னர் ஜெனரல் மவுன்ட்பேட்டன் பிரபுவைச் சந்தித்தார். |
|
|
|
ஜனவரி13: |
|
உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். மவுன்ட்பேட்டன் பிரபுவின் விருந்தை புறக்கணித்தார். எனினும், பிற அழைப்பாளர்களை பங்கேற்க அறிவுறுத்தினார்.
|
|
|
|
ஜனவரி 14: |
|
உண்ணாவிரதம் தொடர்ந்தது.
|
|
|
|
ஜனவரி 15: |
|
உண்ணாவிரதம் தொடர்ந்தது. தன் அறையிலிருந்தவாறு, ஒலிபெருக்கி மூலம் இறைவணக்கம் வாசித்தார்.
|
|
|
|
ஜனவரி 16: |
|
உண்ணாவிரதம் தொடர்ந்தது. ‘இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமைதி நிலவவில்லை என்றால் நான் வாழ விரும்பவில்லை’ என்றார்
|
|
|
|
ஜனவரி 17: |
|
உண்ணாவிரதம் தொடர்ந்தது. அவரின் உடல்நிலை பெரும் கவலையை ஏற்படுத்தியது.
|
|
|
|
ஜனவரி 18: |
|
எல்லா சமூகத்தினரும் அமைதியைப் பேணுவதாக உறுதியளித்ததை அடுத்து, மவுலானா ஆசாத் அளித்த ஆரஞ்சு சாற்றை அருந்தி, உண்ணாவிரதத்தை முடித்தார். |
|
|
|
ஜனவரி 20: |
|
இறைவணக்கத்தில் வெடிகுண்டு ஒன்று வெடித்தது.
|
|
|
|
ஜனவரி 21: |
|
குண்டு வீசியவர்களை மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
|
|
|
|
ஜனவரி 27: |
|
‘காங்கிரஸ் நிலை’ குறித்து எழுதினார். அரசியல் அமைப்பாக இருக்கும் காங்கிரஸ் அதிலிருந்து விலகி பொதுமக்களுக்குத் தொண்டாற்றும் சமூக அமைப்பாக மாற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். பக்தியார் சிஸ்தி தர்காவின் ஆண்டுவிழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார்.
|
|
|
|
ஜனவரி 29: |
|
‘காங்கிரஸ் நிலை’யில் எழுதியதுபோல, காங்கிரஸ் சேவைப்படைக்கான அரசியல் அமைப்புச் சட்டத்தை வரைந்தார்.
|
|
|
|
ஜனவரி 30: |
|
தியாக நாள். பிர்லா ஹவுஸில் நடந்த மாலை நேர இறை வணக்கத்தில் பங்கேற்க சென்றபோது, நாதுராம் விநாயக் கோட்சேயால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
|
|
|
மூலம்: www.mkgandhi.org |