எப்போதும் மனதின், வார்த்தையின், செயலின் முழுமையான ஒத்திசைவின் மீது குறிக்கோள் வைத்திருக்க வேண்டும். எப்போதுமே உங்கள் சிந்தனைகளை சுத்தமானதாக வைத்திருந்தால் எல்லாமே நன்றாகத்தான் இருக்கும்.
கோபமும் சகிப்புத்தன்மையின்மையும் சரியான புரிதலின் எதிரிகள்.
மனிதரான நமது சிறப்புத்தன்மை இந்த உலகத்தை மாற்றுவதில் இல்லை- அது இந்த அணுஉலகில் சாத்தியமில்லை. மாறாக, நம்மை நாமே மறுகட்டுமானம் செய்து கொள்வதில்தான் உள்ளது.
எப்படி இருக்க வேண்டும் என்று நம்புபவர்கள்தான் மனிதர்களாக உள்ளனர். நான் நம்பவில்லை என்றால் என்னால் எதையாவது செய்ய முடியாது. அது என்னை செயலற்றவனாக மாற்றுகிறது. ஆனால், என்னால் முடியும் என்று நான் நம்பும்போது அதை செயலாற்றுவதற்கான திறமையை நான் பெறுகிறேன். அந்தத் திறன்தான் என்னிடம் துவக்கத்தில் இல்லாமல் இருந்தது.
நீங்கள் என்ன சிந்திக்கிறீர்களோ, நீங்கள் சொல்கிறீர்களோ, என்ன செய்கிறீர்களோ அவற்றை எல்லாம் ஒருங்கிணைக்கும்போதுதான் மகிழ்ச்சி கிடைக்கிறது.
எந்தச் சேவை அதன் சொந்த நலனுக்காக இருக்குமோ அந்தச் சேவைதான் உன்னதச் சேவையாக இருக்கும்.
Copyright @ 2012. Gandhi World Foundation. All Rights Reserved