அருங்காட்சியகங்கள்-ஆசிரமங்கள்- நுõலகங்கள்- ஆசிரமங்கள் -டால்ஸ்டாய் பண்ணை (1910 -1913)
டால்ஸ்டாய் பண்ணை (1910 -1913)
தபால்பெட்டி எண்: 44739
லிண்டன். 2104, தென் ஆப்ரிக்கா.
இ-மெயில்: info@tolstoyfarm.com
இணையதளம்: www.tolstoyfarm.com
1910ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த பண்ணை, 1913ம் ஆண்டு மூடப்பட்டது. காந்திஜியின் நண்பரான ஹெர்மான் கால்லன்பாச், இதற்கு இந்தப் பெயரை வைத்தார். இந்த பண்ணையில் 6 வயது முதல் 16 வயது வரையிலான சிறுவர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு கல்வியுடன், பண்ணை நிர்வாகமும் கற்றுக் கொடுக்கப்பட்டது. ‘ஒரு தந்தை போல இருந்து இந்த பண்ணையைக் காப்பாற்ற விரும்புகிறேன். விரைவில் அதற்கான முழு பொறுப்பையும் நான் சுமப்பேன் என நினைக்கிறேன். இளைஞர்களை நல்வழிப்படுத்துவேன்' என்று, காந்திஜி தன் சுயசரிதை நுõலில் எழுதியுள்ளார்.
கல்வியுடன் சேர்த்து கைவேலைகள், மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. எட்டு மணி நேரம் கைவேலைகள், இரண்டு மணி நேரம் படிப்பு என்று திட்டம் வகுக்கப்பட்டது. இங்கு, ஆண்-பெண் இருபாலரும் சேர்ந்து படித்தனர். சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு கைத்தொழில் தெரியவேண்டும். அவர்களை தகுதிவாய்ந்த குடிமக்களாக மாற்ற இத்தகை பயிற்சிகள் அவசியம் என்று காந்திஜி கருதினார். அதனால், செருப்பு தயாரித்தல், சமையல் வேலை செய்தல், தோட்ட பராமரிப்பு, துப்புரவுப்பணிகள் செய்தல் போன்றவற்றில் மாணவர்களை ஈடுபடுத்தினார்.
|