1913 (பீனிக்ஸ்) |
தான் மேற்கொண்ட சமரசத்தீர்வு, தவறாகப் போனதால் அதற்கு வருத்தம் தெரிவித்து ஒரு வாரம் உண்ணாவிரதம் |
1914 (பீனிக்ஸ்) |
அதே காரணத்திற்காக 14 நாட்கள் உண்ணாவிரதம் |
01, ஜூன், 1915 |
ஆசிரம சிறுவர்களிடம் இருந்த தவற்றை சரி செய்ய ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தார். |
11, செப்.1915 |
ஆசிரமத்தில் ஹரிஜன சிறுவனை சேர்த்ததற்கு ஆசிரமத்தில் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் மாலை உணவைப் புறக்கணித்தார். |
15, மார்ச் 1918 |
அகமதாபாத் மில் தொழிலாளர் கூலி உயர்வுக்காக உண்ணாவிரதம் |
06, ஏப்ரல் 1919 |
சத்தியாகிரகப் போராட்டத்தின் முதல்நாள் |
13, ஏப்ரல் 1919 |
ஜாலியன்வாலாபாக் படுகொலை, அகமதாபாத், பாம்பே கலவரங்களுக்காக 72 மணி நேர உண்ணாவிரதம் துவக்கினார். |
19-21 நவ. 1921 |
பாம்பே கலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம். |
28 நவ. 1921 |
சுவராஜ்யம் கிடைக்கும் வரை ஒவ்வொரு திங்கள்கிழமையும் 24 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து அதைத் துவக்கினார். |
12-16 பிப். 1922 |
சவுரி சவுரா சம்பவத்தைக் கண்டித்து உண்ணாவிரதம் |
17 செப். - 7 அக். 1924 |
சமூக நல்லிணக்கத்திற்காக உண்ணாவிரதம். |
24-30 நவ. 1925 |
ஆசிரமத்திலிருந்த சிறுவர், சிறுமியர் இடையே இருந்த பாலியல் உறவு நாட்டத்தைக் கண்டித்து உண்ணாவிரதம். |
22-24 ஜூன் 1928 |
ஆசிரமத்தில் இருந்தவர்களின் ஒழுக்கம் தவறியதைக் கண்டித்து உண்ணாவிரதம். |
20-25 செப். 1932 |
ஹரிஜன்களுக்கு தனி வாக்கு மையம் அமைப்பதைக் கண்டித்து உண்ணாவிரதம். |
03 டிச. 1932 |
சிறையில் கைதி ஒருவரை துப்புரவு பணியில் ஈடுபடுத்தாததைக் கண்டித்து உண்ணாவிரதம் |
08-29 மே 1932 |
தனது மற்றும் தன்னுடன் இருப்பவர்களின் சுயபரிசுத்தத்திற்காக. |
16-22 ஆக.1933 |
ஹரிஜனங்களின் வேலைகளுக்கு அரசு போதிய மானியம் கொடுக்காததைக் கண்டித்து உண்ணாவிரதம். |
07-13 ஆக. 1934 |
ஹரிஜனங்களுக்கு எதிரான ஒருவரை காந்தியின் தொண்டர் அடித்ததைக் கண்டித்து உ<ண்ணாவிரதம். |
03 ---06 மார்ச் 1939 |
ராஜ்கோட் ஆட்சியாளர் வாக்குறுதியை மீறியதால் காந்திஜி உண்ணாவிரதம். |
12-13 நவ. 1940 |
ஆசிரமத்தில் நடந்த சிறிய திருட்டிற்காக 2 நாட்கள் உண்ணாவிரதம். |
05-07 மே 1941 |
பாம்பே, அகமதாபாத்தில் நடந்த மதக்கலவரங்களை கண்டித்து உண்ணாவிரதம் |
29 ஜூன் 1941 |
மத ஒற்றுமைக்காக உண்ணாவிரதம் |
10 மார்ச் 1943 |
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தால் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு காங்கிரஸ்தான் பொறுப்பேற்க வேண்டும் என அரசு தெரிவித்ததைக் கண்டித்து உண்ணாவிரதம் |
30 நவ. 1944 |
ஒரு நாள் உண்ணாவிரதம் - காரணம் அறிய முடியவில்லை. |
20 அக். 1946 |
முஸ்லீம் லீக்குடனான பேச்சுவார்த்தைக்கு தயாரிக்கப்பட்ட நகலில் இருந்த தவறுக்காக உண்ணாவிரதம் |
15 ஆக. 1947 |
நாட்டை துண்டாடியதற்காக உண்ணாவிரதம் |
01-03 செப். 1947 |
மத நல்லிணக்கத்திற்காக உண்ணாவிரதம் |
11 அக். 1947 |
விக்ரம் பஞ்சாங்கத்தின்படி, பிறந்ததேதியில் உண்ணாவிரதம் |