ஜி.ஷியாம்சுந்தர். 32 வயதான இவர், கடந்த 9 ஆண்டுகளாக சென்னையில் வக்கீலாகப் பணியாற்றி வருகிறார். இவர், பி.காம். ஏசிஎஸ், பிஎல், எம்பிஏ படித்துள்ளார். சமூக தொண்டரான இவர், கண்பார்வை இல்லாதவர்களுக்கான அறக்கட்டளை ஒன்றில் கௌரவ அறங்காவலராக உள்ளார். கடந்த 2007ம் ஆண்டில், நாடு முழுவதும் மத்தியப் பல்கலைக்கழகங்கள் துவக்க ஒரு காரணமாக இருந்த இவரை பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டியுள்ளார். மத்திய அரசின் கம்ப்யூட்டர் திறன் பயிற்சி, 2008 ஏற்படுத்த முக்கியப் பங்காற்றியுள்ளார். இவரின் தொடர்ந்த முயற்சியால் நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்கள் துவக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது, ஊனமுற்றவர்களுக்கு, குறைந்தபட்சம் 1 சதவீதமாவது இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
சென்னை நகரின் 12 வங்கிகளுக்கு அவர் வக்கீலாகப் பணியாற்றி வருகிறார். மோசடி பேர்வழிகளின் மோசடியிலிருந்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவை ரூ.60 கோடி இழப்பிலிருந்து காப்பாற்ற இவர் வக்கீலாக சேவை புரிந்துள்ளார். எஸ்பிஐ மற்றும் இந்தியன் பாங்க் ஊழியர்களுக்கு, கள்ள நோட்டுகளைக் கண்டறிவது எப்படி என்பது குறித்து, 500க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்துள்ளார். இதுபோன்றதொரு பயிற்சியை மாநிலம் முழுவதும் வழங்குமாறு இவரை சில வங்கி நிர்வாகங்கள் வலியுறுத்தி வருகின்றன. நில அபகரிப்பு முறைகேட்டிலிருந்து தப்புவது எப்படி என்பது குறித்து, டைம்ஸ் ஆப் இந்தியா, தினமலர் போன்ற பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
Copyright @ 2012. Gandhi World Foundation. All Rights Reserved