கிராமப்புறங்களில் திறமையான விளையாட்டு வீரர்கள் இருந்தும் அவர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள, அதற்கேற்ப கட்டமைப்புகளுடன் கூடிய பயிற்சி மையங்கள் கிராமப்புறங்களில் இல்லாத சூழ்நிலை இன்றும் நிலவிக் கொண்டு வருகிறது. இத்தகைய வசதி வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் கிராமப்புற இளைஞர்களின் திறமைகள் வீணடிக்கப்படுகின்றன. இதுவே நகர்புறங்களில் தெருவுக்குத்தெரு சிறந்த கட்டமைப்புகளுடன் கூடிய விளையாட்டுப் பயிற்சி மையங்கள் உள்ளன. இத்தகைய வாய்ப்புகளை பயன்படுத்தி நகர்புற இளைஞர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக்கொண்டு விளையாட்டில் நல்ல ஒரு நிலையை எட்ட இத்தகைய வசதி வாய்ப்புகள் உறுதுணையாக இருக்கின்றன. கிராமப்புற இளைஞர்களுக்கோ இத்தகைய வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் திறமைகள் இருந்தும் அவை வீணடிக்கப்படுகின்றன.
கிராமப்புறங்கள் அதிகம் கொண்ட இந்திய தேசத்தில் இதுபோன்ற பயிற்சி மையங்கள் பரவலாக ஏற்படுத்தப்பட வேண்டும். இதனால் கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டுத்திறன் கண்டறியப்பட்டு இத்தகைய இளைஞர்கள் பங்களிப்பால் வருங்கால இந்தியாவின் விளையாட்டுத்தரம் உயரும். இதை மனதில் கொண்டே இத்தகைய பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் கிராமப்புறங்களில் இருந்து திறமைகள் வெளிக்கொணரப்பட்டு இளைஞர்கள் விளையாட்டில் உச்ச நிலையை அடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கமும் லட்சியமும். எங்களது இந்த முயற்சிக்குப் பேறுதவியாக இருந்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எங்கள் அன்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
|