எம்எல்.இராஜேஷ் (நிறுவனர் மற்றும் நிரந்தர அறங்காவலர்)
எம்எல்.இராஜேஷ் 32 வயதாகும் இவர், காந்திய சிந்தனைகளால் கவரப்பட்டவர். காந்தி நினைவாக பல பொருட்கள் மற்றும் நாணயங்களைச் சேகரித்துள்ளார். காந்தி நினைவாக, உலக நாடுகள் வெளியிட்ட நாணயங்கள், தபால் தலைகள், தபால் உறைகள், கரன்சி, சிறப்பு உறைகள், டெலிபோன் அட்டைகள் போன்ற பலவற்றை இந்த டிரஸ்ட்டின் தலைவர் எம்.எல்.ராஜேஷ் கொண்டுள்ளார். இவர் ஒரு சமுதாய தொண்டர். காந்தி தொடர்பான கண்காட்சிகள் பலவற்றை சிறுவர் சிறுமிக்காக நடத்தியுள்ளார். இவரின் கட்டுரைகள் பல பத்திரிகைகள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் வந்துள்ளன.
எம்.ஏ. பட்டதாரியான இவர், கும்மிடிப்பூண்டியில் உள்ள ஹெச். பி.சி.எல். எல்பிஜி பிளான்டில் வேலைபார்க்கிறார். கிராமப்புறம் மற்றும் நகர்புற சிறுவர்களுக்காக இவர் நடத்திவரும் கிரிக்கெட் அகாடமியில் படிக்கும் சில வீரர்கள், மாநில அளவிலான போட்டிகளில் விளையாடுகின்றனர். கிரிக்கெட் மட்டுமின்றி பிற விளையாட்டுகளையும் கிராமப்புற மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்.
Copyright @ 2012. Gandhi World Foundation. All Rights Reserved