எங்களைப்பற்றி:

mlrlogo
தோற்றுவிப்பு 10/10/10
எம்எல்ஆர் கிரிக்கெட் அகாடமி (இளம் திறமையாளர்களை கண்டறிகிறோம்)
பழைய எண்.1/96, புதிய எண் 1/64.
பஜார் வீதி, புதுகும்மிடிப்பூண்டி-601 201.
திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
கைபேசி 9841  021069

M L R Cricket Academy :

தொலை நோக்குப் பார்வை

கிராமப்புறங்களில் திறமையான விளையாட்டு வீரர்கள் இருந்தும் அவர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள, அதற்கேற்ப கட்டமைப்புகளுடன் கூடிய பயிற்சி மையங்கள் கிராமப்புறங்களில் இல்லாத சூழ்நிலை இன்றும் நிலவிக் கொண்டு வருகிறது. இத்தகைய  வசதி வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் கிராமப்புற இளைஞர்களின் திறமைகள் வீணடிக்கப்படுகின்றன. இதுவே நகர்புறங்களில் தெருவுக்குத்தெரு சிறந்த கட்டமைப்புகளுடன் கூடிய விளையாட்டுப் பயிற்சி மையங்கள் உள்ளன. இத்தகைய வாய்ப்புகளை பயன்படுத்தி நகர்புற இளைஞர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக்கொண்டு விளையாட்டில் நல்ல ஒரு நிலையை எட்ட இத்தகைய வசதி வாய்ப்புகள் உறுதுணையாக இருக்கின்றன. கிராமப்புற இளைஞர்களுக்கோ இத்தகைய வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் திறமைகள் இருந்தும் அவை வீணடிக்கப்படுகின்றன.
கிராமப்புறங்கள் அதிகம் கொண்ட இந்திய தேசத்தில் இதுபோன்ற பயிற்சி மையங்கள் பரவலாக ஏற்படுத்தப்பட வேண்டும். இதனால் கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டுத்திறன் கண்டறியப்பட்டு இத்தகைய இளைஞர்கள் பங்களிப்பால் வருங்கால இந்தியாவின் விளையாட்டுத்தரம் உயரும். இதை மனதில் கொண்டே இத்தகைய பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் கிராமப்புறங்களில் இருந்து திறமைகள் வெளிக்கொணரப்பட்டு இளைஞர்கள் விளையாட்டில் உச்ச நிலையை அடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கமும் லட்சியமும். எங்களது இந்த முயற்சிக்குப் பேறுதவியாக இருந்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எங்கள் அன்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிக்கோள்

மேற்கூறியவற்றின் தொடர்ச்சியாக அத்தகைய கனவை நினைவாக்கும் விதமாக சில முயற்சிகளைப் புகுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். அதாவது, இளைஞர்கள் கிரிக்கெட் திறனை மேம்படுத்த வாரம் ஒரு, கிரிக்கெட் துறையில் சிறந்த முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்களை எங்கள் சிறப்பு பயிற்சியாளராக அழைத்து, அவர்கள் மூலமாக பயிற்சி அளித்து வீரர்களின் தவறுகளை கண்டறிந்து, அதை சரிசெய்து பின்னர் அதில் சிறந்த வீரர்களை தேர்வு செய்து, அவர்களை அடுத்த படியாக டிவிஷன், டிஸ்ட்ரிக்ட் மாட்சுகள் விளையாட வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது மட்டுமின்றி, வீரர்களே தங்கள் தவறுகளை தாங்களே சரிசெய்து கொள்ளும் விதமாக, வீடியோ அனலைசிங் மூலம் ஆட்டத்தைப் படம்பிடித்துக் காட்டி அவர்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டி, அதற்காக சில யோசனைகளைக்கூறி ஆட்டத்தின் தரத்தை உயர்த்துவது.
இங்கிருந்து ஒன்று அல்லது இரண்டு நபர்களாவது குறைந்தபட்சம் மாநில அணியில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது எங்களின் குறிக்கோள்.