• pic2
  • pic3
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
Select Country :

காந்திஜிதொலைப்பேசி அட்டைகள்(Gandhiji Telephone Cards):

           காந்திஜியை நவீன முறையில்கௌரவப்படுத்த நினைத்த சில நாடுகள், அந்நாட்டின் தொலைபேசி அட்டைகளில் (Telephone Cards) காந்திஜியின் உருவப்படத்தைஅச்சிட்டு, அவரின் பெருமைகளை அனைவரும் புரிந்து கொள்ளும்படி செய்து பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நம் இந்தியத் தொலைப்பேசி அட்டைகளில் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் மாடல்களின் புகைப்படங்களை அச்சிட்டு வெளியிட்டு வருகின்றனர். குறைந்தபட்சம் தேசத் தலைவர்களை நினைவுகூரும் விதமாகஅவர்களின் நினைவுதினங்களிலாவதுஅவர்களின் புகைப்படத்தை (Sim card & Recharge cards) மற்றும் Telephone cards-களில் அச்சிடும் பட்சத்தில், அது நமது தேசத் தலைவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாகவும் இளைய தலைமுறையினர் மத்தியில் அவர்களின் தியாக உணர்வு, வாழ்க்கை ஆகியவைகள் எளிமையாகச் சென்றடையவும் பெரிதும் உதவும். மற்ற நாடுகளே இத்தகைய செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, நமது இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இதை நடைமுறைப்படுத்தலாமே என்பதுதான் எனது வேண்டுகோள். வெளிநாடுகளில் காந்தியடிகளின் உருவம் பொரித்து வெளியான டெலிபோன் கார்டுகளின் புகைப்படங்கள் அவரின் அரிய பெருமைகளை அனைவரும் அறியும் பொருட்டுத் தங்கள் பார்வைக்கு.