• pic2
  • pic3
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
Select :

காந்திஜி கோயில் (Gandhiji temple):

          மகாத்மாகாந்திஜிக்கு பல இடங்களில் மணிமண்டபங்கள் நிறுவப்பட்டன. ஆனால், காந்திஜிக்காக கோயில் கட்டப்பட்டது தமிழ்நாட்டில் மட்டும் தான். ஈரோடு மாவட்டம் கவுந்தபாடி அருகிலுள்ள சொந்தாம்பாளையம் என்ற கிராமத்தில் தான் இந்த காந்தி கோயில் இருக்கிறது.
        1996-ஆம் ஆண்டு இந்த கோயில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. 06.02.1997-ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடந்தது. ரூபாய் 10 இலட்சம் செலவில் இந்தக் கோயில் கட்டப்பட்டது.
         கோயிலில் இரண்டு பீடங்கள் உள்ளன. ஒரு பீடத்தில் காந்தி சிலையும் மற்றொரு பீடத்தில் அன்னை கஸ்துரிபாய் சிலையும் வைக்கப்பட்டுள்ளன. கோயிலில் தினமும் மூன்றுகால பூஜைதவறாமல் நடக்கிறது.காலை 9.00, மதியம் 12.00 மாலை 6.00 மணி ஆகிய மூன்று நேரங்களிலும் பூஜை நடத்தப்படுகிறது. பூஜை நடத்ததனி அர்ச்சகர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அர்ச்சகர் காந்தி சிலைக்கு அர்ச்சனை செய்யும் போது காந்திஜி பெயரிலுள்ள பூஜை பாடலைப் பாடி அர்ச்சனை நடத்துவார். கஸ்துரிபாய் சிலைக்கும் கஸ்துரிபாய் பெயரிலுள்ள அர்ச்சனைப் பாட்டைப்பாடி பூஜை செய்வார்.
          அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று இங்கு திருவிழாகொண்டாடப்படுகிறது.அக்டோபர் 1-ஆம் தேதி தீர்த்தவாரி நடைபெறும். அன்று கோயிலிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலுள்ள ஆற்றுக்குச் சென்று 10 குடங்களில் தீர்த்தம் எடுத்துவருவார்கள்.
          மறுநாள் 2-ம் தேதிகாலை 6.00 மணியளவிலிருந்து 8.00 மணிக்குள் காந்திகஸ்துரிபாய் சிலைகளுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும். பூஜைகள் முடிந்ததும் பெண்கள்பொங்கல் வைப்பார்கள். அதன் பின்னர் காந்திய சிந்தனை பற்றிய சிறப்புச் சொற்பொழிவுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.
இந்தக்கோவில் உருவாகக்காரணமாக இருந்தவர் அந்தஊரைச் சேர்ந்த வையாபுரி என்கிற முதியவர் ஆவார்.

காந்திஜி சுட்டுக்கொல்லப்பட்டஅன்றுகடைசியாக பிரார்த்தனைமைதானத்திற்கு நடந்து சென்ற பாதையின் புகைப்படங்கள்.

      சுதந்திரத்திற்குப் பிறகு காந்திஜி டெல்லியில் பிர்லா மாளிகையில் தனது வாழ்வின் கடைசி 144 நாட்கள் தங்கியிருந்தார். அங்கு தனதுஅன்றாட தேசப் பணிகளை கவனித்துக் கொண்டு தினமும் மாலை வேளைகளில் பிரார்த்தனை கூட்டங்களை நடத்தி வந்தார். ஜனவரி மாதம் 30-ம் தேதி 1948 அன்று மாலை ஏற்பாடு செய்திருந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரார்த்தனை மைதானத்திற்கு செல்லும் போது சுட்டுக் கொல்லப்பட்டார். காந்திஜி சுடப்படுவதற்கு முன்பு தனது அலுவலகத்திலிருந்து, பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடைசியாக நடந்து சென்ற பாதையிலிருந்து சுடப்பட்ட இடம் வரையிலான புகைப்படங்கள் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக தங்கள் பார்வைக்கு.