• pic2
  • pic3
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4

மகாத்மா காந்திஜியின் பொன்மொழிகள்

நிகழ்காலம்

         எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கணிக்க நான் விரும்பவில்லை. நிகழ்காலத்தை பேணுவதைத்தான் நான் விரும்புகிறேன். என்னைத் தொடர்ந்து கொண்டிருக்கும் பொழுதைக் கட்டுப்படுத்த கடவுள் எனக்கு எந்த கட்டுப்பாட்டையும் கொடுக்கவில்லை.

சுதந்திரம்

         சிறுதவறுக்குக்கூட சுதந்திரம் எனக்கு வழி ஏற்படுத்தவில்லை எனும்போது அந்தச் சுதந்திரம் எனக்குப் பெருமையானதாகத் தெரியவில்லை.
         நீதி நெறி, ஒழுக்கம் போன்றவை எல்லாம் உதவியே பெறாத ஆண் அல்லது பெண்ணுக்கு பரிந்துரை செய்யப்பட முடியாது. நீதிநெறி இருதயத்தின் சுத்தத்தில் ஆழ்ந்துள்ளது.

தீமை

         உலகில் வன்முறையை ஏற்படுத்தும் ஏழு முக்கியமான அறிவுஏற்படுத்தும் பெருந்தவறுகள்:

         1. உழைக்காமல் சேர்ந்த பணம்.
         2. மனசாட்சியில்லாத மகிழ்ச்சி.
         3. நன்னடத்தை இல்லாத அறிவு.
         4. நேர்மையில்லாத வணிகம்
         5. மனிதாபிமானம் இல்லாத அறிவியல்.
         6. தியாகம் இல்லாத மதம்.
         7. கொள்கை இல்லாத அரசியல்.
         மனிதனும் அவன் செயலும் இரண்டும் வெவ்வேறானவை. நற்செயல் பாராட்டைப் பெறும். நயவஞ்சகச் செயல் கண்டவத்திற்குத்தான் ஆகும். அது, நற்செயலாக இருந்தாலும் தீய செயலாக இருந்தாலும் அதைச் செய்பவருக்கு அதன் தன்மைப் பொறுத்து மரியாதையோ பரிதாபமோ கிடைக்கும். பாவச் செயலை வெறுங்கள். பாவம் செய்பவர்களை அல்ல. இதைப் புரிந்து கொள்வது எளிது. பழக்கத்தில் கொண்டுவருவதுதான் கஷ்டம். அதனால்தான் வெறுப்பின் விஷம் உலகம் முழுவதும் பரவுகிறது.
         தீயவற்றை அறிந்து அதை விலக்க நினைப்பது மட்டும் போதாது. அத்தகைய தீயவனற்றை விலக்குவதற்காக நாம் முழுஅளவில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளோம் என்ற விருப்பத்தை உறுதிசெய்ய வேண்டும்.
         ஒரு மனிதரின் குறிக்கோளில் எந்த கணத்தில் சந்தேகம் ஏற்பட்டுவிடுகிறதோ அந்த கணமே எல்லாமே கறைபட்டுவிடும்.
         மனதில் தீயவற்றை சிந்திப்பவன், தீய செயல்களைச் செய்பவன் போன்றவனே. சிந்திப்பவனை விட செய்பவன் மோசமானவன் அல்ல.
         மனிதர்களுக்கு காரணம், வேற்றுமை மற்றும் சுதந்திரமான மனநிலை இருக்கும். காட்டுமிராண்டித்தனத்திற்கு அதெல்லாம் இருக்காது. அது, சுதந்திரமான பதிலாளாக இருக்காது. நல்லொழுக்கத்திற்கும் தீய ஒழுக்கத்திற்கும் வித்தியாசம் தெரியாது. ஆனால், மனிதன் சுதந்திரமான பதிலாள். இந்த வேறுபாடுகளை அறிந்தவன். இந்தப் பண்புகளை அவன் பின்பற்றும்போது, காட்டுமிராண்டியை விட உயர்ந்தவனாகிறான். அதேசமயம், தன் அடிமட்ட இயல்பான குணத்தை மனிதன் பின்பற்றத் துவங்கினால், காட்டுமிராண்டியை விட மோசமானவனாகவே கருதப்படுவான்.