• pic2
  • pic3
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4
  • pic4

மகாத்மா காந்திஜியின் பொன்மொழிகள்

விவாதம் மற்றும் போராட்டம்

         முதலில் அவர்கள் உங்களைப் புறக்கணிப்பார்கள். பின்னர் உங்களைப் பார்த்து சிரிப்பார்கள். பிறகு உங்களுடன் சண்டையிடுவார்கள், அதன் பிறகு நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
         உங்கள் கொள்கைகளுக்கு நீங்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அந்த அளவு முக்கியத்துவத்தை எதிராளியின் கொள்கைகளுக்கும் கொடுக்க வேண்டும். அகிம்சை கோருவது என்னவென்றால், எதிராளியை வெல்வதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
         ஒருவன் மிகவும் கறுப்பாக இருந்தால், அவரின் திட்டங்கள் மற்றும் முறைகள் மீதான அவரின் நம்பிக்கை சோதனைக்குள்ளாக்கப்படும்.
         நேர்மையாக மறுப்பது, முன்னேற்றத்தின் நல்ல அறிகுறி.
         ஒத்துழையாமை போராட்டம், பொதுமக்களிடம் உறங்கிக் கிடக்கும் அவர்களின் மாண்பு மற்றும் அதிகாரத்தை தட்டி எழுப்பும் ஒரு முயற்சி. இதை அவர்களுக்கு தெரிய வைக்க, முரட்டுத்தனமான சக்திகளிடம் அஞ்ச வேண்டாம் என்பதை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் உள்ளே உள்ள ஆன்மாவை அவர்கள் அறிவார்கள்.
         பொதுமக்களின் கருத்து மட்டும்தான் ஒரு சமுதாயத்தை பரிசுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கும்.
         துப்பாக்கியின் ஈட்டிக்கு அருகாமையில்தான் ஒத்துழையாமை போராட்டம் உள்ளது. இந்தியர்களின் இருதயத்தில் அதற்கு ஒரு அடக்கமான இடம் உள்ளது. நேரம் வரும்போது என்னைப் போன்ற ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்போம். ஆனால், ஒத்துழையாமை எப்போதும் இருக்கும்.
         மனிதர்களுக்கு எதிராக இயக்கப்படுவதல்ல ஒத்துழையாமை; அது, நடவடிக்கைகளுக்கு எதிரானது. ஆளுனர்களுக்கு எதிராக வழிநடத்தப்படுவதல்ல அது. மாறாக, அவர்கள் நிர்வகிக்கும் அரசு முறைக்கு எதிரானது. ஒத்துழையாமையின் வேர்கள், வெறுப்பில் இல்லை. அன்பில் இல்லாத நீதியில் உள்ளது.

         ஒரு கலாச்சாரத்தை அழிப்பதற்காக அதன் நுõலை அழிக்காதீர்கள். அதை மக்கள் படிக்க விடாமல் செய்யுங்கள் போதும்.
         உண்மையான ஜனநாயக அறநெறியை விதைக்க விரும்புகிறீர்களா? உங்களிடம் சகிப்புத்தன்மை இல்லாதிருக்கக்கூடாது. சகிப்புத்தன்மையின்மை உண்மையை ஏமாற்றுகிறது.
         நம்மிடம் உள்ள தார்மீக அதிகாரத்தை பிறரால் பிடுங்க முடியாது. அது யாருடைய அனுமதியின்றியும் வருகிறது. எந்த விதமான முயற்சியும் இல்லாமல் திரும்பப் பெறப்படுகிறது.
         சூழ்நிலைக்குத் தகுந்தவாறு மாற்றிக் கொள்ளுதல் பாசாங்கு செய்வது போன்றதல்ல. அது, ஈடுகொடுத்தல் மற்றும் ஒன்றிணைப்பதன் சக்தி.
         ஒரு முறையை எதிர்ப்பதும் தாக்குவதும் சரியானதுதான். ஆனால், அந்த முறையை கொண்டு வந்தவரை எதிர்ப்பதும் தாக்குவதும் தனி ஒரு நபரை எதிர்ப்பதும் தாக்குவதும் போன்றதாகும். அவர் எப்படி உருவாக்கப்பட்டாரோ அதுபோன்றே நாமும் உருவாக்கப்பட்டவர்கள். படைத்தவனின் குழந்தைகள் நாம். நம்மிடம் உள்ள தெய்வீக சக்திகள் முடிவில்லாதவை. ஒவ்வொரு சிறிய மனித உயிரிலும் தெய்வீக சக்திகள் உள்ளன. அந்த சக்திகள், தன்னையே தாக்கிக் கொள்ளுமா என்ன? ஒவ்வொருவரிடமும் இருக்கும் அந்த சக்திதான் உலகம்.
         ஒத்துழைப்பது கடமை என்றால், ஒத்துழையாமையும் ஒருவிதத்தில் கடமைதான்.
         சூழ்ச்சி முறை, அறவழியில் பார்த்தாலும் தவறுதான்; அரசியல்ரீதியாகப் பார்த்தாலும் தவறுதான். அதை எந்தச் சூழ்நிலையிலும் நடைமுறைக்குப் பயன்படுத்தக்கூடாது.
         ஆரோக்கியமான மறுப்பு முன்னேற்றத்தின் முதற்படி.
         அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஒருவரை எப்படி நிர்பந்திக்க முடியும்? மாஸ்டரின் அந்த கட்டளையை நான் மறுக்கிறேன். அதற்காக அவர் என்னை சித்தரவதை செய்யலாம், எலும்புகளை நொறுக்கலாம், ஏன் கொல்லக்கூடச் செய்யலாம். அப்போது அவருக்கு என் உயிரற்ற உடல்தான் கிடைக்குமே தவிர்த்து என் கீழ்படிதல் கிடைக்காது. அந்தச் சூழ்நிலையில் நான்தான் வெற்றிபெற்றவனாக இருப்பேன். அவர் என்னை எப்படி மாற்றிப் பார்க்க நினைத்தாரோ அதில் அவர் தோல்வி அடைந்துவிடுவார்.

ஆயுதம் தாங்குதல்

         இந்தியாவில் பிரிட்டீஷ் ஆட்சியின் மிகப் பெரிய தவறுகளில் ஒன்றாக வரலாறு குறிப்பிடுவது எதுவென்றால், ஒட்டுமொத்த நாட்டையும் ஆயுத பலத்தின் மூலம் கருமைப்படுத்தியதுதான்.