காந்திஜியின் உண்ணாவிரத ஆண்டுகள்

1913 (பீனிக்ஸ்) தான் மேற்கொண்ட சமரசத்தீர்வு, தவறாகப் போனதால் அதற்கு வருத்தம் தெரிவித்து ஒரு வாரம் உண்ணாவிரதம்
1914 (பீனிக்ஸ்) அதே காரணத்திற்காக 14 நாட்கள் உண்ணாவிரதம்
01, ஜூன், 1915 ஆசிரம சிறுவர்களிடம் இருந்த தவற்றை சரி செய்ய ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தார்.
11, செப்.1915 ஆசிரமத்தில் ஹரிஜன சிறுவனை சேர்த்ததற்கு ஆசிரமத்தில் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் மாலை உணவைப் புறக்கணித்தார்.
15, மார்ச் 1918 அகமதாபாத் மில் தொழிலாளர் கூலி உயர்வுக்காக உண்ணாவிரதம்
06, ஏப்ரல் 1919 சத்தியாகிரகப் போராட்டத்தின் முதல்நாள்
13, ஏப்ரல் 1919 ஜாலியன்வாலாபாக் படுகொலை, அகமதாபாத், பாம்பே கலவரங்களுக்காக 72 மணி நேர உண்ணாவிரதம் துவக்கினார்.
19-21 நவ. 1921 பாம்பே கலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்.
28 நவ. 1921 சுவராஜ்யம் கிடைக்கும் வரை ஒவ்வொரு திங்கள்கிழமையும் 24 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து அதைத் துவக்கினார்.
12-16 பிப். 1922 சவுரி சவுரா சம்பவத்தைக் கண்டித்து உண்ணாவிரதம்
17 செப். - 7 அக். 1924 சமூக நல்லிணக்கத்திற்காக உண்ணாவிரதம்.
24-30 நவ. 1925 ஆசிரமத்திலிருந்த சிறுவர், சிறுமியர் இடையே இருந்த பாலியல் உறவு நாட்டத்தைக் கண்டித்து உண்ணாவிரதம்.
22-24 ஜூன் 1928 ஆசிரமத்தில் இருந்தவர்களின் ஒழுக்கம் தவறியதைக் கண்டித்து உண்ணாவிரதம்.
20-25 செப். 1932 ஹரிஜன்களுக்கு தனி வாக்கு மையம் அமைப்பதைக் கண்டித்து உண்ணாவிரதம்.
03 டிச. 1932 சிறையில் கைதி ஒருவரை துப்புரவு பணியில் ஈடுபடுத்தாததைக் கண்டித்து உண்ணாவிரதம்
08-29 மே 1932 தனது மற்றும் தன்னுடன் இருப்பவர்களின் சுயபரிசுத்தத்திற்காக.
16-22 ஆக.1933 ஹரிஜனங்களின் வேலைகளுக்கு அரசு போதிய மானியம் கொடுக்காததைக் கண்டித்து உண்ணாவிரதம்.
07-13 ஆக. 1934 ஹரிஜனங்களுக்கு எதிரான ஒருவரை காந்தியின் தொண்டர் அடித்ததைக் கண்டித்து உ<ண்ணாவிரதம்.
03 ---06 மார்ச் 1939   ராஜ்கோட் ஆட்சியாளர் வாக்குறுதியை மீறியதால் காந்திஜி உண்ணாவிரதம்.
12-13 நவ. 1940 ஆசிரமத்தில் நடந்த சிறிய திருட்டிற்காக 2 நாட்கள் உண்ணாவிரதம்.
05-07 மே 1941 பாம்பே, அகமதாபாத்தில் நடந்த மதக்கலவரங்களை கண்டித்து உண்ணாவிரதம்
29 ஜூன் 1941 மத ஒற்றுமைக்காக உண்ணாவிரதம்
10 மார்ச் 1943 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தால் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு காங்கிரஸ்தான் பொறுப்பேற்க வேண்டும் என அரசு தெரிவித்ததைக் கண்டித்து உண்ணாவிரதம்
30 நவ. 1944 ஒரு நாள் உண்ணாவிரதம் - காரணம் அறிய முடியவில்லை.
20 அக். 1946 முஸ்லீம் லீக்குடனான பேச்சுவார்த்தைக்கு தயாரிக்கப்பட்ட நகலில் இருந்த தவறுக்காக உண்ணாவிரதம்
15 ஆக. 1947 நாட்டை துண்டாடியதற்காக உண்ணாவிரதம்
01-03 செப். 1947 மத நல்லிணக்கத்திற்காக உண்ணாவிரதம்
11 அக். 1947 விக்ரம் பஞ்சாங்கத்தின்படி, பிறந்ததேதியில் உண்ணாவிரதம்