காந்திஜியின் வாழ்க்கை - கால வரிசைப் பட்டியல்

கைது - சிறையிலடைப்பு - தென் ஆப்ரிக்கா
10 ஜனவரி, 1908 டிரான்ஸ்வாலை விட்டு வெளியேற பதிவு செய்யவில்லை எனத் தெரிவித்து 2 மாத சிறைத்தண்டனை - பின்னர் ஜனவரி 30ம் தேதி சமரசத்தின் பேரில் விடுதலை
07 அக். 1908 நேடாலில் இருந்து திரும்பும்போது, சான்றிதழைக் காட்டாததால் (அந்தச் சான்றிதழை அவர் முன்னரே எரித்துவிட்டார்) சிறையிலடைக்கப்பட்டு கடுமையான வேலைக்கு உள்ளாக்கப்பட்டார்.
25 பிப். 1909 பதிவுச் சான்றிதழை டிரான்ஸ்வாலில் காட்டாததால் 3 மாத சிறைத் தண்டனை
06 நவம். 1913 பேரணிக்குப் பிறகு பாம் போர்டில் கைது.  7ம் தேதி கல்லான்பாக் அளித்த ஜாமீனில் விடுதலை
08 நவம். 1913 மீண்டும் கைது, விடுதலை
09 நவம். 1913 கைது 9 மாத சிறைவாசம். வோல்க்ஹர்ஸ்டில் மேலும் 3 மாத சிறை தண்டனை. 18 டிசம்பர் 1913ல் திடீரென விடுதலை
  கைது - சிறையிலடைப்பு - இந்தியா
16, ஏப். 1917 சாம்பரான் மாவட்டத்தை விட்டு வெளியேற நோட்டீஸ் - கைது செய்யப்படவில்லை
10, ஏப். 1919 அமிர்தசரஸ் நோக்கி செல்லும்போது பால்வால் அருகே கைது. பாம்பே கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டார்.
10, மார்ச் 1922 யங் இந்தியா பத்திரிகையில் 3 கட்டுரைகள் எழுதியதற்காக கைது. 6 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. எரவாடா சிறையிலிருந்து 5 பிப்ரவரி 1924ல் விடுதலை.
05, மே 1930 உப்புச்சட்டத்தை எதிர்த்து உப்பு எடுக்கச் சென்றதால், தண்டி அருகே உள்ள காரடி என்ற இடத்தில் கைது. சிறையிலடைப்பு. 26 ஜனவரி 1931ல் விடுதலை
04, ஜனவரி 1932 பாம்பேயில் கைது. எரவாடா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். 1933ம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி உண்ணாவிரதம் இருந்ததால் மாலையில் விடுதலை.
01, ஆக.1933 ராஸ் நோக்கி பேரணியாகச் சென்றபோது பாம்பே அருகே அதிகாலையில் கைது. 4ம் தேதி காலையில் விடுதலை. 9.30 மணிக்குள் எரவாடா நகரை விட்டு வெளியேற உத்தரவு. அதை ஏற்றுக் கொள்ளாததால் மீண்டும் ஓராண்டு சிறைவாசம்.16ம் தேதி சிறையில் உண்ணாவிரதம் துவக்கம். உடல்நிலை மோசமானதால் 23ம் தேதி விடுதலை.
09. ஆக. 1942 வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றியதற்காக கைது செய்யப்பட்ட காந்தி, ஆகாகான் அரண்மனை சிறையில் அடைக்கப்பட்டார். 1944ஆம் ஆண்டு மே மாதம் 6ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.