Tributes To Gandhiji
இந்தியத் தலைவர்கள் |
ராஜகோபாலாச்சாரி, பண்டித ஜவகர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் எஸ்.பி.முகர்ஜி, மவுலானா அபுல்கலாம் ஆசாத், சரோஜினி நாயுடு, டாக்டர். ராஜேந்திர பிரசாத், ஸ்ரீ அரவிந்தர், ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஜி.டி.பிர்லா, தேவதாஸ் காந்தி. |
சி.ராஜகோபாலாச்சாரி |
பெரிய பாரம்பரியத்தின் வாரிசு மகாத்மா காந்தியை விட வேறு யாரும் இவ்வளவு மாண்புடன் சாக முடியாது. அவர் அடிக்கடி உச்சரிப்பாரே அந்த ராமர் இடத்திலேயே போய் சேர்ந்துவிட்டார். அவர் சாதாரண மருத்துவமனை படுக்கையில் சாகவில்லை. படுக்கையில் கிடந்து அவர் புலம்பவில்லை. நின்றவாறே இறந்தவர் அவர்தான். அவரைக் கண்டு ராமரே ஆர்வமாக இருப்பார். சாக்ரடீஸ் தன் கருத்துகளுக்காகவும், இயேசு கிறிஸ்து தன் உண்மைக்காகவும் இறந்த நிலையில், அவர்களைப் போன்ற மற்றொரு உதாரணம் இனிமேல் வாய்க்காது என்றே எண்ணியிருந்தனர். |
பண்டித ஜவஹர்லால் நேரு |
இந்த மனிதக்கடவுள் பூமியில் நடந்தவர் பெரிய மனிதர்களுக்கும் உயர்ந்த மனிதர்களுக்கும் வெண்கலம் அல்லது பளிங்குக் கல்லில் சிலைகள் வடிக்கப்படும். ஆனால், இந்த தெய்வீக மனிதருக்கு கோடிக்கணக்கான மக்கள் தங்கள் இதயத்தில் இடம் அளித்துள்ளனர். இந்தியா முழுவதும், இந்தியாவின் சில குறிப்பிட்ட இடங்கள்தான் என்றில்லாமல், ஒவ்வொரு குக்கிராமத்திலும் அங்குள்ள மக்களின் இதயத்திலும் காந்தி மகான் குடிகொண்டுள்ளார். இப்படியே இன்னும் பல நுõற்றாண்டுகளுக்கு அவர் அந்த மக்களின் இதயங்களில் வாழ்வார். அவர் இப்போது போய்விட்டார். ஒட்டுமொத்த இந்தியாவையும் இனம்புரியாத தனிமையும் சோகமும் கவ்விக் கொண்டுள்ளது. இதிலிருந்து எப்போது மீளப் போகிறோம் என்பது எனக்குத் தெரியவில்லை. இப்படியொரு உயர்ந்த மனிதருடன் தொடர்பு கொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததை எண்ணி நான் பெருமிதம் அடைகிறேன். இந்த தலைமுறை மட்டுமல்ல, இன்னும் பல தலைமுறை கடந்தாலும் மண்ணில் நடந்த இந்த மனிதக்கடவுள் பற்றி அறிய ஆசைப்படுவார்கள். அவர் வழி நடக்க ஆசைப்படுவார்கள். இந்த பூமியில் அவர் காலடிபட்ட இடங்கள் போற்றுதற்குரியவை. இப்போது மட்டுமல்ல, எப்போதுமே. |
சர்தார் வல்லபாய் படேல் |
அவரின் உயரிய தியாகம் நம் இருதயங்களை உயிர்துடிப்படையச் செய்யும் காந்திஜியின் உயரிய தியாகம் இந்த நாட்டு மக்களின் இருதயங்களை உயிர்துடிப்படையச் செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அந்த ஆன்மா நம் அனைவரையும் வழிநடத்த வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். இந்த சோகமான நேரத்தில் நாட்டு மக்கள் யாரும் தங்கள் மனஉறுதியைக் கைவிட வேண்டாம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து தேசத்தின் பேரிழப்பை தைரியமாக எதிர்கொள்வோம். காந்திஜியின் கொள்கைகளைப் பின்பற்றுவோம் என்று உறுதிகொள்வோம். |
மௌலானா அபுல்கலாம் ஆசாத் |
மனிதர்களின் சுமைகளை தன் தோளில் சுமந்தவர் மனிதகுலத்தின் சுமைகளைத் தன் தோளில் சுமந்தவர் காந்தி மகான். அவர் இல்லாத இந்த வேளையில் அவர் துõக்கிய சுமைகளை நாம் அனைவரும் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். அதை வெற்றிகரமாகச் செய்தால், அது அதிசயத்திற்கு சற்றும் குறைவானதாக இருக்காது. |
டாக்டர் எஸ்.பி.முகர்ஜி |
அழியாத ஆளுமை இருளில் ஆழ்ந்திருந்த நம் தாய்நாட்டையும், ஏன் இந்த உலகத்தையும் ஒளியூட்டிய மகான் திடீரென மறைந்துவிட்டார். இது, இந்தியத் திருநாட்டின் மீது விழுந்துள்ள பலத்த அடி. இந்தியாவை சுதந்திர நாடாகவும் சுயச்சார்பு நாடாகவும் மாற்றிக்காட்டிய அவர் அனைவருக்கும் நண்பர், யாருக்கும் எதிரியல்ல. லட்சக்கணக்கான மக்களால் அன்பு பாராட்டப்பட்டவரை, இந்த நாட்டைச் சேர்ந்தவனே,இந்த நாட்டில் பிறந்த ஒருவனே கொன்றுவிட்டான் என்று எண்ணும்போது துக்கமும் வருத்தமும் அதிகரிக்கிறது. அவரின் ஆளுமை, தாக்கம் இதனால் மறைந்துவிடாது. ஆண்டுக்கு ஆண்டு பெருகத்தான் செய்யுமே தவிர குறையாது. |
சரோஜினி நாயுடு |
சுதந்திரத்தையும் கொடியையும் கொடுப்போம். மகாத்மாவின் மெலிந்த தேகம் நேற்று தீக்கிரையாக்கப்பட்டுவிட்டது. எனினும் அவர் இறக்கவில்லை. டில்லியில் புதைக்கப்பட்ட பல மன்னர்களின் மத்தியில் அவர் தகனம் செய்யப்பட்டுள்ளார், இந்த மன்னர்களுக்கெல்லாம் மன்னரான மகாத்மா. அமைதியின் துõதரான அவரை, ஒரு போர் வீரன் போல அனைத்து வித மரியாதைகளுடன் தகன மேடைக்கு எடுத்துச் சென்றிருக்க வேண்டும். எல்லாச் சிறந்த போர் வீரர்களைக் காட்டிலும் அந்த சிறிய மனிதர் பெரிய போர்வீரர்தான். பல போர்க்களங்களைக் கண்டு வென்றவர் அவர். மிகவும் வீரமுள்ள அவர் அனைவருக்கும் நண்பரும்கூட. அந்நியக் கட்டுத்தளையிலிருந்து இந்த நாட்டை மீட்டெடுத்த அவர் இந்த மண்ணில் உயிர்நீத்ததை அடுத்து, அந்த புரட்சி வீரரின் சரணாலயமாக டில்லி மாறியுள்ளது. இந்த நாட்டின் சுதந்திரத்தையும் கொடியையும் அவருக்குக் கொடுப்போம். |
டாக்டர் ராஜேந்திர பிரசாத் |
இந்து சமுதாயத்தின் விடுவிப்பாளர் இந்துக்களுக்கோ இந்து மதத்திற்கோ காந்திஜி தீங்கிழைப்பார் என்று நம்மால் கனவுகூட காண முடியுமா? இந்து சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்று பாடுபட்டவர், கீழ்நிலையில் உள்ளவர்களையும் மேம்பாடு அடைய விரும்பிய காந்தி மகான் தன் மதத்திற்கு எதிரான விஷயத்தைச் செய்வாரா? குறுகிய மனம் படைத்த மனிதர்களுக்கு அவரின் மாண்பு தெரியவில்லை. பிறருக்குத் துன்பம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தும் இந்து தர்மம் தவறாகச் சிந்தித்து விட்டதோ? அந்தச் சிந்தனையின் வெளிப்பாடுதான் இந்த பெருந்துயரோ? |
டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் |
கடந்த காலத்தின் ஒரே அடையாளச் சின்னம் காந்திஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் எனக்கு வார்த்தைகளில் வடிக்க முடியாத அதிர்ச்சியை அளித்தது. நம்ம முடியாத, ஏற்றுக் கொள்ள முடியாத சம்பவம் நடந்து விட்டது. நம்ப முடியாத, ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று நடந்துவிட்டது. இவ்வளவு புனிதமான மேம்பட்ட கருத்துகளைக் கொண்ட அனைவரையும் ஈர்க்கக்கூடிய மனிதர், ஒரு மடையனின் துப்பாக்கிக்குண்டுக்கு இரையாகிவிட்டார். இதைப் பார்க்கும்போது, நாம் இன்னும், விஷம் அருந்த வைக்கப்பட்ட சாக்ரடீஸ், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் காலத்தையும் விட்டு வெளியே வரவில்லையோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. |
ஸ்ரீ அரவிந்தர் |
அந்த ஒளி மீண்டும் ஒளிரும் நம்மைச் சுற்றியுள்ள இந்த சூழ்நிலைகளில் நான் அமைதியை விரும்புகிறேன். இதுபோன்ற நிகழ்வுகளில் நம் வார்த்தைகள் தவறாகவே புரிந்து கொள்ளப்படும். நான் சொல்வதெல்லாம், சுதந்திரம் நோக்கி நம்மை இட்டுச் சென்ற ஒளி, இன்னும் ஒற்றுமைப்படுத்தவில்லை. அந்த ஒளி இப்போதும் ஒளிர்கிறது, எப்போதும் ஒளிரும். இறுதியில் அதுதான் வெல்லும். மிகப் பெரிய மற்றும் ஒற்றுமையடைந்த எதிர்காலம்தான் இந்த நாடு மற்றும் மக்களின் தலைவிதியாக இருக்க வேண்டும். |
ஜெயப்பிரகாஷ் நாராயணன் |
அவர் காட்டிய வழியில் நடப்போம் துக்கத்திற்கான நேரத்தில் பேச வேண்டாம். நாம் அழுகிறோம். இந்த நாடே அழுகிறது. அந்த மிகச்சிறந்த மனிதரைக் கொன்றதற்காக. இந்த அழுகை மூலம் அந்தக்கறையைத் துடைப்போம். அவரைப் போன்ற மனிதர்கள் மீண்டும் படைக்கப்பட முடியாது. அவர் காட்டிய வழியில் நடப்போம். குறிப்பிட்ட சில உயரிய நோக்கத்திற்காக அவர் டில்லி வந்தார். அவற்றை நிறைவேற்ற வந்த அவர் இறந்துவிட்டார். இந்த நாட்டிற்காக நிறைய செய்த அவர், அவரின் விருப்பப்படியே இப்போது உயிரற்று படுத்துள்ளார். அவரால் நிறைவேற்ற முடியாமல் பாதியில் விடப்பட்ட செயல்களை நாம் முடிப்போம். |
ஜி.டி.பிர்லா |
போர்வீரர், இறைதுõதர் மற்றும் துறவி மனித வரலாற்றுப்பதிவுகள் எப்போதாவது ஒருமுறைதான் அல்லது அரிதாகத்தான் போர்வீரருக்குரிய வீரம், இறைதுõதருக்குரிய இறையாண்மை மற்றும் துறவிக்குரிய பண்புகளுடன் ஒருவரைப் பதிவு செய்துள்ளன. இரக்க சுபாவம், எளிமை போன்ற இந்த குணநலன்கள்தான், மனித குலத்தையே தன்வசம் ஈர்க்கும் தன்மையாக இருந்தது. அவைதான் அவரின் முன்னணிக் கொள்கையாக இருந்தது. |
தேவதாஸ் காந்தி |
நான் அவரை என் தந்தையாகப் பார்த்து பலகாலம் ஆகிவிட்டது கடந்த சில மாதங்களாக பாபுஜி டில்லியில் இருந்தபோது, அவர் மீது மிகுந்த அன்பு கொண்ட என் மூன்று வயது மகன் அவருடன் நெருக்கமாகப் பழகியிருந்தான். பிர்லா ஹவுஸ் பங்களாவுக்கு அவன் வந்ததும் தன் தாத்தாவை இழந்துவிட்டதாக எண்ணி, என்னை விட அதிகமாக வருந்துகிறான். காந்திஜியை நினைத்ததும் அந்தச் சிறுவனின் கண்களின் கண்ணீர் வருகிறது. காந்திஜி எப்படி பிறரை வரவேற்பாரோ அதுபோல அவன் உதடுகளைக் கூட்டிக் கொண்டு பேசுகிறான். காந்திஜிக்கு எப்போதுமே குறுகிய, வீட்டுச் சிந்தனை இருந்ததில்லை. நான் அவரை என் தந்தையாகப் பார்த்து பலகாலம் ஆகிவிட்டது. அவர் எனக்கு ஒரு துறவிபோலத்தான் தெரிகிறார். |